வியாழன், 5 ஜூலை, 2012

மகளே...



என் உயிரின்-
வழி வந்த-
உயிரே!

உயிரணு ஒன்னை-
உருவமாக்க இடம்-
தந்தவளின் -உரு
கொண்டவளே!

என் வாழ்வு-
விளங்கவில்லை-உன்
தாய் "வரும்வரை!"

என் தாயின் பாசம் -
புரியவில்லை- நீ!
எனக்கு மகளாக-
பிறக்கும் வரை!

பாடசாலை கேள்வியை-
என்னிடம்- கேட்பாய்!

தெரியாததுபோல்-
தலை அசைத்தால்-
"ஐயோ" என செல்லமாய்!

உன் தலையிலேயே-
தட்டி கொள்வாய்!

என் தாயிடம்-
அதே கேள்வியை கொண்டு-
செல்வாய்!

என் தாயோ-
வாழ்வில் பாடம்-
படித்தவள்!

வகுப்பு பாடம்-
அறியாதவள்!

என் தாயோ தெரியாது என-
தலையாட்டினாள்!

யாருக்குமே தெரியல-
என- சொல்லி கொண்டு!

பதிலை நீயே -
சொன்னாய்-
அதட்டி கொண்டு!

இங்கே நீ!
ஆசிரியை ஆனாய்!

என் தாயோ-
மாணவி ஆனாள்!

கேட்பதுண்டு-
சிலர்!

சந்தோசம் கிடைப்பது-
வெற்றியிலா! ?

தோல்வியிலா!?

வித்தியாசப்படும்-
யாரிடம் தோற்கிறோம்-
என்பதிலே!

இதுவே -
என் பதிலே!

கல்வி கற்பதில்தான்-
உள்ளது- கண்ணியம்!

ஆடை குறைப்புதான்-
சுதந்திரம் என்பது-
போலி பெண்ணியம்!

சீன தேசம் சென்றேனும்-
சீரிய கல்வியை தேடு-
நபிகளார் மொழி!

"அறியாதவர்கள்"-
விமர்சனத்திற்கும்-
அடைத்து வைப்பவர்களுக்கும்-
நபிகளார் மீதா!?-
பழி!?

என் ஈராக்குலைகலான-
பெண் குழந்தைகளே!

இன்று-
உலகில் சுதந்திரம்-
என்ற -மாயை உள்ளது!

அது-
"எப்படியும்" வாழலாம்-
என்கிறது!

வாகனம் ஓட்டுபவனுக்கே-
கட்டுபாட்டு விதிகள்-
இருக்கு!

கட்டுப்பாடு -
தேவையில்லையோ-
மனித வாழ்விற்கு!?

ப்ரியமுடன்-
சீனி ஷா.



திங்கள், 2 ஜூலை, 2012

செஞ்ச பாவம்தான் என்ன....?(2 )



விடுதலை பெற்ற-
அறுபது ஆண்டிலேயே!

என்ன மாற்றம்-
வந்துவிட்டது-
நாட்டிலே!?

தேசம் என்றால்-
அனைத்து மக்களும்-
வாழத்தானே!?

ஓன்று மட்டும்-
வாழ மற்றதெல்லாம்-
அழிந்திடனுமோ!?

ஒன்றை கொன்று-
மற்றொன்று வாழ்வது-
காடு!

ஒரே பக்கம் வளர்ச்சி-
அனைத்து பக்கமும்-
தளர்வதா-நாடு!?

ஒன்று-
மக்களுக்கு வாழ-
வழி செய்யுங்கள்!

அல்லது-வாழ நினைப்பவர்களின்
வழியை -
மறைக்காதீர்கள்!

உரிமை கேட்டால்-
"பிரிவினை "-என
பிதற்றுகிறார்கள்!

அரசுகளே! நீங்களே-
நியமித்த "கமிசன்கள்"-
சொல்லவதையும்-
மறுக்குறீர்கள்!

அல்லது-
மறந்து விடுகிறீர்கள்!

ஆந்திரா தந்த-
இட ஒதுக்கீடை-
நீதி மன்றம் தடுக்குது!

"மதவெறி நாயகர்கள்"-
வழக்குகள்-
கிடப்பில் கிடக்குது!

நீதி தேவதை-
கண்களை கட்டி உள்ளது!
பாரபட்சம் பார்க்க -
கூடாதென்பதற்கா!?

இல்லை - குருடாகவே
உள்ளதை -
மறைப்பதுக்கா!?

ஏன் இப்படி-
ஒடுக்கபடுகிறது-
சமூகம்!?

எதற்கு-
ஒடுக்குதலை -செய்கிறது
அரசு நிர்வாகம்!

வாழ வழி-
இல்லை!

வேலை-
வாய்ப்பில்லை!

படிக்க-
இட ஒதுக்கீடு-
இல்லை!

ஆனால்-
குற்றமற்றவனுக்கும்-
இடம் இருக்கு-
சிறைகளிலே!

உண்மை-நிரந்தரமா
உறங்காது!

பொய்கள் எந்நாளும்-
பொழைக்காது!

சத்தியம்-
சாகாது!

அசத்தியம்-
நீண்ட காலம்-
வாழாது!

ப்ரியமுடன்
சீனி ஷா.

(குறிப்பு;மகாராஷ்ட்ராவில் உள்ள பதினைந்து
சிறைகளில் அடைபட்டு கிடக்கும்-
மூவாயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.25 .4 சதவிகிதம் வழக்காட வழக்கறிஞர் கூட இல்லை.ஆதாரம் Tata institute of social sciences (TISS)ஆய்வு செய்தது ;)




செஞ்ச பாவம்தான் என்ன...?(1 )



இம்மண்ணில் -
பிறந்ததா!?

இம்மண்ணை -
நேசிப்பதா! ?

எம்மண்ணில் நாம்-
பிறக்கணும் என-
முடிவெடுக்க முடியாததா!?

சிறுபான்மை-
மக்களாக-
இருப்பதா!?

பெரும்பான்மையாக-
சுதந்திரத்திற்காக-
மடிந்ததா!?

ஷாஜகான்-
நாட்டுக்கு தலைநகர்-
டில்லியை உருவாக்கியதா!?

வருமானம் கொட்டும்-
தாஜ் மகாலை-
கட்டியதா!?

ஆட்சி மாறும்போதெல்லாம்-
காட்சி மாறால்-
கொடியேற்ற உதவும்-
செங்கோட்டை அமைத்ததா!?

கப்பம் கட்டிய-
கோழைகளிடையே-
கடும்சினம் கொண்டு-
பகதூர் ஷா-விடுதலைக்காக
வீறுகொண்டதா!?

சிறையில் கிடைக்கையிலே-
தன் தவ புதல்வங்கள்-
தலையை தாம்புலதட்டில்-
கண்டும் கலங்காமல்-
இருந்ததா! ?

போராளிகள் இப்படிதான்-
காட்சி அளிப்பார்கள்-என
அவர் மகிழ்ச்சியுற்றதா!?

மரணதருவாயிலும்-
அடக்கம் செய்ய இந்தியாவில்-
இடம் இல்லையா!?-என
கலங்கியதுவா!?

"அடிபடிந்தவர்களின்"-
வாரிசுகள் - அரசபரம்பரை
என பந்தா செய்வதா!?

பகதூர் ஷாவின் குடும்பம்-
இன்றும் வாடகை வீட்டில்-
இருப்பதா!?

கவச உடைகூட-
அணிய கால அவகாசம்-
எடுத்துகொள்ளாம-"திப்பு"
போராடி மடிந்ததுவா!?

வலிகள்தான்-
எத்தனை!

வலைபதிவு-
உணருமா-!?அந்த
வலிகளை!?

(தொடரும்......)


ப்ரியமுடன்-
சீனி ஷா