திங்கள், 15 ஜூலை, 2013

பரவசத்துடன் நடந்த பட்டமளிப்பு விழா

அல்ஹம்து லில்லாஹ் !
அல்லாஹ்வின் கிருபையால்
கடந்த 30 ந் தேதி நம் ஒப்பிலானில் ''முபல்லிகா'' பட்டமளிப்பு விழா விமரிசையாக நடந்து முடிந்தது .

11 மாணவிகள் பட்டம் பெற்ற இவ்விழாவைக் காண நம் ஊரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் அணிஅணி யாய்த திரண்டிருந்தனர்

மாணவிகளின் சார்பில் அவர்களது உறவினர்கள் பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர்
அப்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்கள் இதோ உங்களுக்காக !







ஞாயிறு, 23 ஜூன், 2013

நிஸ்வான் பட்டமளிப்பு விழா

ஹிதாயத்துன்-நிஸ்வான் ஒப்பிலான்

ஒப்பிலான் மக்களுக்கு ஓர் நற்செய்தி.

நம் ஊரில் 11 மாணவிகள் இந்த ஆண்டு 'முபல்லிகா' பட்டம் பெற இருக்கிறார்கள். 

கடந்த மூன்று ஆண்டுகளாக நம் ஊரில் இயங்கி வந்த ஹிதாயத்துன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியில் 'முபல்லிகா' பிரிவில் பயின்று வந்த இம்மாணவியர் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து இம்மாதம் முப்பதாம் தேதி (30-06-2013) ஞாயிறு காலை 10 மணியளவில் மதரசா வளாகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முபல்லிகா ஸனது பெறுகிறார்கள்.

அவர்களுக்கு பாராட்டும் பரிசளிப்பும் நடைபெறும். 

விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் ''பெண்கள் சமுதாயத்தின் கண்கள்'' என்ற அருமையான வாழ்வியல் நூல் ஒன்றும் வெளியிடப்படுகிறது. சிறப்பாக  நடைபெற, நல்லுள்ளம் கொண்ட அனைவரும் துஆ செய்யுங்களேன் !

பட்டம் பெரும் மாணவிகள் 

நிகழ்ச்சி நிரல் 

வியாழன், 20 ஜூன், 2013

மண்ணின் மைந்தன் சீனி சஹாபுதீன்


சீனி சஹாபுதீன், ஒப்பிலான்

வறுமையிலும் செழுமை 
அல்ஹம்து லில்லாஹ்!

  • ஒப்பிலான் சீனி பக்கீர்- சீனி அம்மாள் அவர்களின் நான்காவது மைந்தன்.
  • ஒப்பிலான் ஊராட்சியில் முதன் முதலாக முதுகலைப் பட்டப்படிப்பிற்காக  அடியெடுத்து வைத்தவர் இவரே.
  • ஒப்பிலான் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து,
  • மாரியூர் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்து
  • சாயல்குடி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்து ,
  • திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் B C A இளங்கலைப் பட்டம் பெற்று கவுன்சிலிங்கில் தேர்வாகி ,
  • கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் M.C.A படித்துக்கொண்டிருக்கும் மண்ணின் மைந்தன் சீனி சஹாபுதீனுக்கு சந்தோஷத்துடன் ஒரு சபாஷ் போடுகிறோம் .