செவ்வாய், 19 ஜூன், 2012

மண்ணின் மைந்தன் -தொடர்- 5 


பாறையினுள்ளேதான்-
சிற்பம்-தேவை இல்லாததை
ஒதுக்குவதே-
சிற்பியின் வேலை!

மாணவனுக்குள் தான்-
மாண்புகள்-
மேருகேற்றுவதுதான்-
ஆசிரியர் வேலை!

தன் பிள்ளையினுள்ளேதான்-
சிறந்த தலைவன்!-
சிறப்புகளை-
சீர் செய்வதுதான்-
பெற்றோர்களின் வேலை!


சிதிலமடைந்த சமூகத்தை-
சீரமைப்பதுதான்-
சீர்திருத்தவாதிகளின்-
வேலை!

வெளங்காத -
நாட்டு மக்களையும்-
துலங்கும் மக்களாக்குவதுதான்-
நாட்டு தலைவர்களின் -
வேலை!

வேலையை கடைமையேன-
செய்திட வேண்டும்!

கடமையை-
கண்ணின் இமையாய்-
பாதுகாக்க வேண்டும்!

வேலையை-
வேண்டா வெறுப்புடன்-
செய்பவன்-
"இருக்கும் வரை"-
நினைவில் இருக்கிறார்!

வேலையை கடமையாக-
செய்பவன்-
"இல்லாதபோதும்"-
நம் நினைவோடு -
இருக்கிறார்!

தவறுகளை -
தவறு என -
தெரியாமல் செய்பவர்களை-
விட!

தவறு இது என-
தெரிந்தவர்களும்-
வாய் மூடி இருப்பது -
கொடியது அதை விட!

மாற்றங்கள் தந்தவர்-
நம்மோட நெஞ்சங்களில்-
நிக்கிறார்!

நம்மால் "வெள்ளை அசரத்"-
என அழைக்கபட்டார்!

அசரத் அப்துல் மாலிக்-
அவர்கள்!
நமது ஊரை செதுக்கிய-
சிற்பிகளில் ஒருவர்!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

திங்கள், 18 ஜூன், 2012

மர்ஹூம் உதுமான் கனி பற்றி ஒரு குறிப்பு

 S. உதுமான் கனி
தமிழ் நாட்டின் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள ஒப்பிலான் எனும் ஊரில் 1957ஆம் ஆண்டு பிறந்த திரு உதுமான் கனி, இளம் வயதிலேயே பெற்றோருடன் சிங்கை வந்தார். தெலுக் குராவ் தொடக்கப் பள்ளியிலும், விக்டோரியா பள்ளியிலும் பயின்றார். பின்னர், லண்டன் பல்கலைக் கழகத்தில் பாரிஸ்டர் அட் லா (LL.B. Hons) பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்து தம் சுய முயற்சியில் முன்னேறிய திரு கனி, 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விழாவில் நடுவராகப் பணியேற்றிருந்தபோது காலமானார்.

இலக்கியப் பணி
1977ஆம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய திரு கனியின் முதல் சிறுகதையான `அஸ்தமத்தின் நிர்வாணப் பிரதிபலிப்பு', அதே ஆண்டில் தமிழ் முரசில் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் எழுதிய பல சிறுகதைகள், கவிதைகள், சிங்கை, தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்தன. `இளையவன்' என்ற புனை பெயரிலும் எழுதியுள்ளார். தகவல் கலை அமைச்சு வெளியிட்ட Asean Anthology, நா. கோவிந்தசாமி தொகுத்த `சிங்கப்பூர்ச் சிறுகதைகள்', சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றில் இவரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.




தமிழில் சிறந்த பேச்சாற்றல் கொண்ட திரு கனி, சிங்கைத் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார்.

அஃறிணை உயர்திணை : சிறுகதைகள்
சிங்கப்பூர் : S. Uthuman Ghani Associates, 2002.
RSING 894.811372 UTH


நன்றி:
http://libguides.nl.sg/content.php?pid=341831

மேலும் ஆங்கிலத்தில் இவரைப் பற்றி அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க.

ஞாயிறு, 17 ஜூன், 2012

சிங்கையில் நம் மண்ணின் கிளைகள்!தொடர்-1

ஜல்லிக்கட்டில்-
பரிசு-
தொங்குவது-
கொம்பில் !

வாழ்வின் வெற்றி-
தொங்குவது-
தோல்வியில்!

சிராய்வுகளை-
சந்திக்க துணியாதவன்-
"களத்தில்"-
இறங்காதே!

தோல்விகளை-
தாங்க முடியாதவன்-
வெற்றி என்று கூட-
சொல்லாதே!
---------------------
தோல்வி!

ஒரு தெரு நாய்-
ஓடினால்-
துரத்தும்!

"உறுதியா" நின்றால்-
திரும்பி ஓடும்!
-------------------
ஆழ்கடலுக்கு-
செல்பவனுக்கே-
முத்துக்கள்!

கரையே கதியென்றால்-
தொட்டிட முடிந்தவை-
நுரைகள்!

அலைகளை -
தாண்டினால்தானே-
சிப்பி!

தோல்விகளை-
ஏற்றுகொள்பவனுக்கே
வெற்றி!
---------------------
வெற்றி பெற்றவனின்-
தோள்கள் தாங்கலாம்-
மாலைகள் !

அம்மாலைகளை-
ஒதுக்கி -
அவனது நெஞ்சத்தை-
கேட்டு பார் அது சொல்லும்-
பட்ட அவமானங்களை!


------------------------
வெற்றி ஊராரை-
மெச்சிடவும் வைக்கும்!
வஞ்சிடவும்-
வழி வகுக்கும்!

தோல்வி-
வாட்டத்தையும் தரும்!

வாழ்கை பாடத்தையும்-
கற்று தரும்!
--------------------
சோதனை?-
எனும் கேள்வி குறியை!

சாதனை!-
என மாற்றிய-
ஆச்சரிய குறியை!

அவர்களில் ஒருவர்!
S. உதுமான்கனி 
நம்மில் ஒருவர்!

சிறு வயதில்-
தந்தையை இழந்தார்!

விடா முயற்சியில்-
கல்வியை தொடர்ந்தார்!

பட்டங்களையும்!
பாராட்டுகளையும்!-
பெற்றார்!
சிங்கையில் வழக்கறிஞராகவும்-
பணியாற்றினார்!

நிகழ்ச்சி- படைப்பாளர்!
நல்ல பண்பாளர்!

மறைந்த -
நம்மில் ஒருவர்!
உதுமான்கனி -
அவர்கள்!

ப்ரியமுடன்!
சீனி ஷா.