புதியவை

ஞாயிறு, 23 ஜூன், 2013

நிஸ்வான் பட்டமளிப்பு விழா

ஹிதாயத்துன்-நிஸ்வான் ஒப்பிலான்

ஒப்பிலான் மக்களுக்கு ஓர் நற்செய்தி.

நம் ஊரில் 11 மாணவிகள் இந்த ஆண்டு 'முபல்லிகா' பட்டம் பெற இருக்கிறார்கள். 

கடந்த மூன்று ஆண்டுகளாக நம் ஊரில் இயங்கி வந்த ஹிதாயத்துன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியில் 'முபல்லிகா' பிரிவில் பயின்று வந்த இம்மாணவியர் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து இம்மாதம் முப்பதாம் தேதி (30-06-2013) ஞாயிறு காலை 10 மணியளவில் மதரசா வளாகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முபல்லிகா ஸனது பெறுகிறார்கள்.

அவர்களுக்கு பாராட்டும் பரிசளிப்பும் நடைபெறும். 

விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் ''பெண்கள் சமுதாயத்தின் கண்கள்'' என்ற அருமையான வாழ்வியல் நூல் ஒன்றும் வெளியிடப்படுகிறது. சிறப்பாக  நடைபெற, நல்லுள்ளம் கொண்ட அனைவரும் துஆ செய்யுங்களேன் !

பட்டம் பெரும் மாணவிகள் 

நிகழ்ச்சி நிரல் 

வியாழன், 20 ஜூன், 2013

மண்ணின் மைந்தன் சீனி சஹாபுதீன்


சீனி சஹாபுதீன், ஒப்பிலான்

வறுமையிலும் செழுமை 
அல்ஹம்து லில்லாஹ்!

  • ஒப்பிலான் சீனி பக்கீர்- சீனி அம்மாள் அவர்களின் நான்காவது மைந்தன்.
  • ஒப்பிலான் ஊராட்சியில் முதன் முதலாக முதுகலைப் பட்டப்படிப்பிற்காக  அடியெடுத்து வைத்தவர் இவரே.
  • ஒப்பிலான் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து,
  • மாரியூர் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்து
  • சாயல்குடி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்து ,
  • திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் B C A இளங்கலைப் பட்டம் பெற்று கவுன்சிலிங்கில் தேர்வாகி ,
  • கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் M.C.A படித்துக்கொண்டிருக்கும் மண்ணின் மைந்தன் சீனி சஹாபுதீனுக்கு சந்தோஷத்துடன் ஒரு சபாஷ் போடுகிறோம் .

திங்கள், 3 ஜூன், 2013

சபாஷ்.. காதர் மீரான்!


இராமநாதபுரம் நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பில் பயின்று பள்ளியிலேயே முதல் இடத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற்ற நம் ஊர் மாணவர் காதர் மீரானைப் பாராட்டி தினமலர் செய்தித்தாளில் அந்த பள்ளி சார்பாக புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அது தங்களின் பார்வைக்கு.... (புகைப்படத்தில் முதலில் இருப்பவர்தான் காதர் மீரான்.

kathar meeran oppilan

http://epaper.dinamalar.com/Gallery.aspx?id=02_06_2013_002_013&type=A&eid=356#

ஞாயிறு, 2 ஜூன், 2013

பத்தாம் வகுப்பில் தேறிய பத்தரை மாற்றுத் தங்கங்கள்

 காதர் மீரான்

சேக் முஹம்மது ஃபாசில் 

மாஷா அல்லாஹ் .. கடந்த சில ஆண்டுகளாக நம் ஊர் மாணவ மாணவிகளிடம் மகத்தான ஆர்வமும் மாபெரும் முன்னேற்றமும் தெரிகிறது கல்வியில். 
அதை அவர்களின் மதிப்பெண்கள் நமக்கு உணர்த்துகிறது. 
இந்த ஆண்டு (2012-2013) பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்ற நம் ஊர் மாணவச் செல்வங்களின் பெயர்கள் இங்கு தரப்படுகிறது. 
அவர்களில் 400/500 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் மார்க்குகள் மட்டும் முன்னிலைப் படுத்திக் காட்டப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நம் ஊர் வலைத்தளம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் கல்வியில் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட இரு கரமேந்தி இறைவனைப் பிரார்த்திக்கிறது .
         
 
எண்
மாணவச் செல்வங்கள்
தந்தை பெயர்
மார்க்
       1.       
காதர் மீரான் 
முஹம்மது காசிம் 

474
        2.       
யாஸ்மின் பானு
செய்யது இப்ராஹீம்
465
       3.       
சேக் முஹம்மது பாசில்
சிக்கந்தர்
462
       4.       
உல்பத் ஆஷிக்
சீனி முசாபர் கான்
450
        5.       
சரிபு நிஸா
அப்துல் ரஹீம்
447
       6.       
அப்ரோஸ்
அசன்
433
       7.       
நூருல் பர்ஹானா
அம்சா அலி
429
        8.       
ரியாஸ்
ஷாஜகான்

        9.       
தாரிக்
இப்ராமுசா

        10.   
அஸ்கர்
சேக்

       11.   
ஒசியத் நிஸா
நாகூர் கனி

       12.   
கிஸ்வர் பானு
சீனி சம்சு

        13.   
அர்ஷத் அலி
காஜா முகைதீன்

       14.   
நஜிபா
இக்பால்

       
      15.   
பீமா பானு
செய்யது அப்துல் காதர்

       16.   
பரக்கத் பசிலா
சபுர்தீன்

       17.   
பரக்கத் நிஸா
அப்துல் காதர்

       18.   
ஜமிலத் நிஸா
முஜீப் ரஹ்மான்

       19.   
நிலபர் நிஸா
பசீர்

      20.   
அலிசா
சுபைர் அலி

      21.   
முபாரக்
ரஹ்மத் அலி

       22.   
மீரான்
நஸ்மைதீன்

      23.   
அஜ்மல் கான்
சேகுனாப் பிள்ளை

      24.   
அஸ்கர்
முஹம்மது காசிம்

      25.   
ஜிஹாத்
காதர் உசேன்