புதியவை

வியாழன், 31 மே, 2012

ஊரு கிணறு....



அதிகாலை-
'வயசு'புள்ளைகளுக்கு!

காலை-
வேளை-
பள்ளி புள்ளைகளுக்கு!

அதுக்கு பின்னே -
தாய் மார்களுக்கு!

முற்பகளுக்கு மேல்-
காலை' வேலை-'
போய் திரும்பியவர்களுக்கு!

மாலை -
வயது முதிர்ந்தவர்களுக்கு!

காலை நேர-
கால அட்டவணையே!

மறு பாகமும்-
தொடருமே!

'தேவைகளை-
தீர்த்திடும்-
கிணறுகள்!

அதில் அசுத்தம்-
செய்வதுதான்-
மனித புத்திகள்

கோடையில்-
மக்கள் கூடும்-
இடம்!

மழை காலங்களில்-
நாம் மறந்த-
இடம்!

'தேவைக்கு'-
திரும்பிவரும்போது-
'கடுப்பு'அடிப்பதில்லை-
கிணறுகள்!

நாம மறந்த-
ஊரு-
கிணறு!

நமக்கு மறுக்காம-
ஊறும்-
கிணறு....!!



ப்ரியமுடன்!
சீனி ஷா.

செவ்வாய், 29 மே, 2012

புதுப் பொலிவுடன் யாசீன் நர்சரி & பிரைமரி பள்ளி

oppilan

நமது ஒப்பிலான் கிராமத்தில் இயங்கி வந்த ஒப்பிலான் நர்சரி & பிரைமரி பள்ளி இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டிலிருந்து யாசீன் நர்சரி & பிரைமரி பள்ளியாக புதுப் பொலிவுடன் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் மேற்பார்வையில் நல்ல பல திட்டங்களுடன் சிறப்பாக இயங்கும் என்று அதன் நிறுவனர் அறிவித்துள்ளார்.


பள்ளியின் சிறப்பம்சங்கள்:
  • குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச எழுத பயிற்சி
  • காற்றோட்டமான வசதியான வகுப்பறைகள்
  • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
  • அனுபவமிக்க அன்பான ஆசிரியைகள்
  • குழந்தைகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்ள உதவியாளர்கள்
  • மார்க்க கல்வி, கராத்தே, ஓவிய வகுப்புகள் 
  • spoken English, Hand Writing  வகுப்புகள்
  • மாணவர்கள் ஓடியாடி விளையாட விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம்
  • அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ள அழகிய நூலகம்
  • நமது பள்ளிக்குள் நடைபெறும் போட்டிகளிலும் மற்ற பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளிலும் பங்கெடுத்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும்
  • வாகனத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வர வாகன வசதிகளும் உண்டு 

                நன்கொடை கிடையாது.


நிர்வாகம்: தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை.
தொடர்புக்கு: 9840757550

நம்ம ஊரு....


oppilan mathrasa

நாம-
பொறந்த -
மண்ணு!

மறக்க முடியாத-
ஒன்னு!

பொசுக்கிய-
வெயிலுண்டு!

பூசி கொண்ட-
புழுதிகள்-
உண்டு!

ஊரின்-
நினைவுகள்-
நெஞ்சோடு-
உண்டு!

கடலில்-
'பொருள்'-
தேடினார்கள்!

கடல் தாண்டியும்-
'பொருள்'-
தேடுபவர்கள்!

எங்கே சென்றாலும்-
பொறந்த மண்ணின்-
வாசத்தை-
மறக்காதவர்கள்!

அலைகளை-
எதிர்த்து-
மீன் பிடித்தவர்கள்-
எம் மூத்தவர்கள்!

எதிர்ப்புகளை-
கடந்து -
சாதிக்க முயல்பவர்கள்-
இளம்பட்டதாரிகள்!

நல்ல காரியம்-
அழைத்தால்-
சடைப்புகள் உண்டு!

இறப்பு செய்தி என்றால்-
பகமைதனை மறந்து-
பங்கு பெறுவோர்-
உண்டு!

தன் பசியை மட்டும்-
போக்கி கொள்வோர்-
உலகில் உண்டு!

மற்றவர்கள்-
பசியை போக்க-
முயலும் -
இளைஞர் பட்டாளமும்-
உண்டு!

நம்ம ஊரு என-
'ஒடுங்கி'கொள்ளாமல்-
மற்ற ஊர்மக்களுக்கும்-
'சுன்னத்' செய்பவர்களும்-
உண்டு!

ஒவ்வொரு ஊருக்கும்-
ஒரு வரலாறு-
உண்டு!

மனிதர்களில்-
சிலரே-
வரலாறில்-
இடம்பெறுவதுண்டு!

அந்த-
வரிசையில்-
நால்வர்!

நமதூர்-
தலைவர்கள்!

யாசின் அவர்கள்!
சீனி முசாபார் அவர்கள்!
சீனி மைதீன் அவர்கள்!
காஜா மைதீன் அவர்கள்!

மண்ணின் மைந்தர்கள் -
மண்ணுலகில் இல்லை!

நம் மனங்களை விட்டு-
அகல வில்லை!

நாட்டின் நீண்ட கால-
திட்டம்!

சேது சமுத்திர-
திட்டம்!

இத்திட்டத்தால்-
இலங்கைக்கே-
நட்டம்!

நம்ம நாட்டிலேயே-
எதிர்ப்பு என்பதே-
துரதிர்ஷ்டம்!

எமது!
உயிரின் உறவுகளே!

நமக்கும் கனவுகள்-
உள்ளது !

நிறைவேற்றபட-
வேண்டியது!

நிறைவேற-
கூடியது!

ஆம்!
புது பள்ளி வாசல் -
கட்ட வேண்டியவர்கள்-
நாம்!

ஒரு நாள்-
நம் எண்ணங்கள்-
நிறைவேறும்!

இறைவன் -
நாடுவான்!
புதிய பள்ளியை -
நாம் எழுப்புவோம்!

இன்ஷா அல்லா.....

ப்ரியமுடன்!
சீனி ஷா.

திங்கள், 28 மே, 2012

செய்தீர்க‌ளா?


1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?


2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?


3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?


4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?


5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?


6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?


7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?


8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?


9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?


10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)


11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?


12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?


13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?


14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?


15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?


16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?


17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?


18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?


19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?


20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?


21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?


22. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)


23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?


24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?


25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?




26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?






27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?


28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?


29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?


அஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா? 


30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?


31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?


32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?


33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?


34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?


35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?


36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?



ஞாயிறு, 27 மே, 2012

திருத்தப்படவேண்டிய திருமணச் சடங்குகள்-நாடகம்4

oppilan
arsath

நாடகம் பகுதி-1 ஐ படிக்க இங்கே அழுத்தவும்

                                     காட்சி-7

பஷீர் பாய் சலீம் பாயின் பரிதாபமான நிலை கண்டு இறங்குகிறார் அவர் சலீமை சந்தித்து பேசுகிறார்:
''சலீம் பாய்.. இப்ப நடந்த எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருந்தேன். ஒரு சமுதாயத்துல ஒரு சிலர் செய்யிறத வச்சு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தப்பா எடை போடக்கூடாது. உங்களுடைய மன உறுதியை நான் பாராட்டுறேன். உங்களுக்கு சம்மதம்னா உங்க பொண்ண எம் பையனுக்கு எடுத்துக்கிறேன். நயா பைசாக்கூட வேணாம். என்ன சொல்றீங்க?''

உன்மையாவா சொல்றீங்க?

''ஆமாங்க சலீம் பாய். மார்க்கமும் ஒழுக்கமும் உள்ள பொண்ணைத்தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன். உன்மையான வெற்றி அதுலதானே இருக்கு? நம்ம நபி (ஸல்) அவர்கள்கூட அழகாச் சொன்னாங்களே:
''பொதுவா பொண்ணு பார்க்குறவங்க பணத்தப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு; பரம்பரையப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு; அழகைப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு. ஆனாஒழுக்கத்தைப் பார்த்து முடிக்கிறவங்கதான் வெற்றி பெற முடியும் ''
அப்படின்னு சொன்னாங்க இல்லையா? அதனாலதான் உங்க பொண்ணை நான் தேர்ந்தெடுத்தேன். அதுமட்டுமில்ல.. புதுசா முஸ்லிமான உங்க குடும்பத்துல நான் பெண்ணெடுத்தா எனக்கு டபுள் நன்மை உண்டு. அது பெரும் பாக்கியம். அதனால கவலைப் படாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.

''ரொம்ப நன்றிங்க.. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுசப் போட்டு வப்பான்''

காட்சி-8
(பஷீரும் மகன் அப்துல்லாஹ்வும்):



மகனே அப்துல்லாஹ். இங்கே வாயேன் ஒரு நல்ல செய்தி.


என்ன வாப்பா சொல்லுங்க


மகனே உனக்கு ஒரு நல்ல இடத்துல பொண்ணு பார்த்திருக்கேன்


வாப்பா.. இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்?


என்ன ராசா இப்படி சொல்லுற? உனக்கு 24 வயசாச்சு.மூன்றாம் எட்டில் முடிக்காதது திருமணம் அல்ல என்று முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. நீ சரின்னு சொன்னா மேற்கொண்டு காரியத்தப் பார்க்கலாம். என்ன சொல்ற?


வாப்பா.. உங்க பேச்சுக்கு எப்ப நான் மறுபேச்சு பேசியிருக்கேன்.  நீங்க செய்தா அது சரியாத்தான் இருக்கும். ஆனா ஒரு விஷயம். நான் யாரைக் கல்யாணம் செய்யணும்னு நீங்க முடிவு பண்ணின மாதிரி கல்யாணம் எப்படி நடக்கணும்னு நான் முடிவு பண்ணுறேன்.. ஓகேயா?


ஓகே. சொல்லு எப்படி நடக்கணும்?


என்னோட கல்யாணம் முழுக்க முழுக்க சுன்னத்தான முறைப்படி நடக்கணும். வெள்ளியிலே ஜும்ஆ பள்ளியிலே....


அப்படின்னா என்ன? கொஞ்சம் விளக்கமா சொல்லுவேன்


பல நபிமார்களுக்கும் நல்லோர்களுக்கும் கல்யாணம் நடந்த வெள்ளிக் கிழமையிலே என்னோட கல்யாணமும் நடக்கணும். பெரிய அலங்காரத் தோரணமோ ஆடம்பரமோ இல்லாம பள்ளியிலே எளிமையா நடக்கணும். பத்திரிக்கைக்கூட அடிக்க வேணாம் வாப்பா.


பத்திரிக்கை இல்லாம எப்படிப்பா?


சரி. சிம்பிளா அடிங்க. ஆனா அந்த பத்திரிக்கையில மொய் வாங்குவதில்லை என்பதை முக்கியமா காட்டிடுங்க. அப்புறம் சுன்னத்தான தப்ஸ் ஊர்வலம் இருந்தா நல்லது. மத்தளம் கொட்டு இல்லாம ஆட்டம் பாட்டம் இல்லாம தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்காம குடி கும்மாளம் இல்லாம நல்ல முறையில இருக்கணும்.


சரி.. அப்புறம்?


முகத்தையே மறைக்கிற அளவுக்கு மாலை போடாம சிம்பிளா ஒரே ஒரு மாலை போதும். மாப்பிள்ளை என்பதற்கு ஒரு அடையாளமாகவும் நறுமணமாகவும் இருக்கும். அதுமட்டுமில்ல.. மலர்கள் இருக்கும் சபையில் மன இறுக்கம் மன அழுத்தம் ஏற்படாது என்பது மருத்துவம். அதனால ஒரு ஒரே ஒரு மாலை போதும்.
oppilan


சரிப்பா.. வீடியோவுக்கு சொல்லிரவா?


வீடியோவா? அறவே வேண்டாம். ஃபோட்டோ எடுக்கிறதப் பத்திக்கூட யோசிக்கணும் வாப்பா. ஏன்னா ஃபோட்டோ எடுக்கிற சாக்குல ஜமாத்த காக்க வச்சிரக்கூடாது. அதனால நிறைய பேரோட பொன்னான நேரமும் வீணாகி வேலையும் கெட்டுப் போயிடும். நம்ம சக்திக்கு தக்கவாறு ஒரு சில ஆடுகளையாவது அறுத்து வலீமா விருந்து கொடுத்துறணும். அதுல ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்துறணும். ஏன்னா ஏழைகளை விட்டு விட்டு பணக்காரங்களை மட்டும் கூப்பிட்டு கொடுக்கிற விருந்து தரங்கெட்ட விருந்து அப்படின்னு நம்ம நபி (ஸல்) சொல்லியிருக்காங்க.


சரி மகனே. நான் போயி ஆட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துர்றேன். இந்தா ஒரு 50,000 ஐ நீ வச்சிக்க.


50,000 மா? ஏன் வாப்பா எனக்கு அம்பதாயிரம்?


உனக்கில்லப்பா. உன்னோட ஃபிரண்ட்சுக்கு பார்ட்டி வைக்கணுமில்ல. அதுக்குத்தான்.


என்ன வாப்பா. நீங்களே இப்படி பேசலாமா?


அதில்லப்பா. எம் மகன் கல்யாணம். நிறைய பேர் வந்து வாழ்த்தணும்னு எனக்கு ஆசை இருக்காதா? இப்பவெல்லாம் 'தண்ணீ'  வாங்கிக் கொடுத்தானே கல்யாணத்துக்கு வர்றாங்க?


அதுக்காக..? அனாச்சாரத்தை செய்யமுடியுமா? நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. 'தண்ணீ 'வாங்கிக் கொடுத்தான் கல்யாணத்துக்கு வருவாங்கன்னா அப்படி ஒரு நட்பே எனக்குத் தேவை இல்லை. அவங்க வந்து வாழ்த்தித்தான் நான் வாழணும்னு அவசியமில்லை.


வெரிகுட் வெரிகுட். எம்புள்ளன்னா எம்புள்ளதான். அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்துட்டடா!
                                                             ------------

காட்சி-9
 (சலீம் பாய்,  கரீம் பாய்)



''அஸ்ஸலாமு அலைக்கும் கரீம் பாய்''

''வ அலைக்குமுஸ் சலாம் சலீம் பாய் இப்ப என்ன விஷயமா வந்தீங்கஅதேன் அன்னைக்கே சொன்னேன்லநமக்குள் சம்பந்தம் இல்லைன்னுஇப்ப எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு வந்தீங்கநல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதாதா?''

கரீம் பாய்.. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்எம் மக ஆயிஷாவுக்கு ஒரு நல்ல இடம் அமைஞ்சிருக்கு கைக்கூலி நயாப் பைசாக்கூட இல்ல அந்த கல்யாணத்துக்கு முதல் அழைப்பே உங்களுக்குத்தான்நீங்கதான் அதைத் தலைமை தாங்கி நடத்தி தரணும்.''

என்னது நானாநிஜமாவா சொல்றீங்க?

ஆமா நிச்சயமா நீங்க கல்யாணத்துக்கு வரணும்.

ஆகா... சலீம் பாய் நீங்க நீங்கதான். என்ன பெருந்தன்மை உங்களுக்கு! உங்களை எப்படியெல்லாம் ஒதுக்கினேன்நீங்க எவ்வளவு தூரம் என்னை மதிக்கிறீங்க?!

கரீம் பாய்.. என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு வழிகாட்டி இல்லையாநான் நரகத்தின் படுகுழியில் கிடந்தேன்நீங்கதான் கைகொடுத்து கலிமா சொல்லிக் கொடுத்து சொர்க்கத்திற்கு சொந்தக்காரனாக மாத்துனீங்கஅதனால இந்த கல்யாணம் உங்க துஆவுலதான் நடக்கணும்.

''இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வர்றேன்.''

அல்லாஹ்வின் கிருபையால் சலீமின் இல்லத் திருமணம் கரீம் பாய் தலைமையில் ஜமாத்தார்கள் புடைசூழ இனிதே நடந்தது..
மிக எளிமையாக!

வாங்க வாசகர்களே! நாமும் அந்த முன்மாதிரி திருமணத்தை வாழ்த்திட்டு 'வலீமா' விருந்தை ஒரு பிடி பிடிச்சிட்டு வருவோம்.

திருத்தப்பட வேண்டிய திருமணச் சடங்குகள்- நாடகம்3


                                        காட்சி-5

            (தரகரும், சலீமும் )


என்ன சலீம் பாய். நல்லா இருந்த நீங்க ரொம்ப டல்லா ஆயிட்டீங்களே என்ன விஷயம்?

அத ஏம்பா கேக்குறே. இந்த பொம்பளப் புள்ளகளைப் பெத்துட்டு வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு வாழவேண்டியதாயிருக்கு. அதுகள ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கிறவரை நிம்மதியே இல்லப்பா.

ப்பூ.. இவ்வளவுதானா விஷயம். கவலையை விடுங்க; கண்ணீரைத் தொடைங்க. ஒங்க பொண்ணுக்கு பொருத்தமான எடத்த நான் காட்டுறேன். ஆனா என்ன கொஞ்சம் செலவாகும்.

எவ்வளவு செலவாகும்?

சும்மா ஒரு 2 லட்சமும் 20 பவுனும்

என்னது.. 2 லட்சமும் 20 பவுனா?

இப்படி வாயைப் பொளந்தா எப்படி கொமர கரையேத்துறது? நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க. நம்ம துரை இருக்கிறாரே. எவ்வளவு கேட்டாலும் தருவாரு. அவர்கிட்ட வட்டிக்கு வாங்கி காரியத்த கச்சிதமா முடிச்சிரலாம்.

என்னது.. வட்டிக்கு வாங்கியா? அவன்கிட்ட வட்டிக்கு வாங்குறதும் ஒன்னுதான்; என் குமரை வெட்டிப் பொதைக்குறதும் ஒன்னுதான். அவன்கிட்ட வட்டிக்கு வாங்கி என் காரியத்த நான் முடிச்சிருவேன்..நாளைக்கு அவன் வந்து ஊரைக் கிழிக்கவா? அதனால அந்த பேச்சே வேணாம்.

சரி அப்படின்னா பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க?

ஏதோ தோது பண்ணுறேன்.. நீங்க ஆகவேண்டிய வேலையப் பாருங்க''

தரகர் செல்கிறார்.

(சலீம் பாய் தனக்குள்):
''பணத்துக்கு என்ன செய்யலாம்.. ஆங்.. ஜமாத்துல போய் உதவி கேட்டுப் பார்ப்போம்''


 (சலீம் பாய் ஜமாத் நிர்வாகியைச் சந்தித்து...):

அஸ் ஸலாமு அலைக்கும்.

வ அலைக்குமுஸ் ஸலாம் வாங்க சலீம் பாய் என்ன விஷயம்?

ஒன்னுமில்ல.. ஒரு சின்ன உதவி

என்ன சம்பளத்த கூட்டணுமா?

அதெல்லாம் ஒன்னுமில்ல. எம் மகள் ஆயிஷாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கேன். அடுத்த வாரம் கல்யாணம். எல்லாம் சேர்த்து ஒரு 7 லட்சம் செலவாகும். ஜமாத்திலிருந்து ஏதாவது உதவி செய்வீங்கன்னு வந்தேன்

சலீம் பாய்.. ஜமாத்திலிருந்து பெரிய உதவியெல்லாம் செய்ய முடியாது. வேணுமின்னா லட்டர் தாறோம். மக்கள்ட்ட கேட்டுப் பாருங்க; அப்படியே பக்கத்து ஊரு ஜும்ஆ வசூலையும் பாருங்க. இந்தாங்க லட்டர்.

லட்டரை கையில் வாங்கிக் கொண்டு கவலையுடன் சலீம் பாய்):
''ச்சே.. என்ன இது யாருட்டயும் கையேந்தாம எவ்வளவு கவுரமா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். இந்த சமுதாயம் என்னை பிச்சை எடுக்க வச்சிருச்சே. சரி என்ன செய்வது. குமருகளைப் பெத்தாச்சு. எல்லாம் பட்டுத்தான் ஆகனும்''

(மக்களை நோக்கி சலீம் பாய் ):
''மக்களே! நான் ஒரு நவ் முஸ்லிம். இரண்டு குமர்களை வச்சிக்கிட்டு சிரமப் படுகின்றேன். உங்களின் உதவியை நாடி வந்திருக்கின்றேன். அல்லாஹ்வுக்காக தாராளமாக உதவி செய்யுங்கள்''

கூட்டத்திலிருந்து ஒரு குரல்:
''ஆமாடா. கிளம்பி வந்துட்டாங்கே. இவனுகளுக்கு இதே பொழப்பாப் போச்சு. வாரம் வாரம் வந்துர்றாங்கே. இதுக்குத்தான் பள்ளிக்கு வரவே பயமா இருக்கு வந்தா பாக்கெட்டுல இருக்குற பத்து ரூபாயையும் அப்பிக்கிட்டு வுட்டுர்றாங்கெ
யா அல்லாஹ் என்ன இது? குமரையும்கொடுத்துட்டு கேவலத்தையும் கொடுக்குறீயே.. இது நியாயமா? மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சொல்லுவாங்களே.. இங்கே தண்ணீரைக் காணோமே. கண்ணீருதானே வருது?
(சலீம் பாய்  தாங்கமுடியாத சோகத்துடன் பாடல்  படித்துக் கொண்டே நடக்கிறார்:

யா அல்லாஹு.. அருட்கொடையாளனே..
துன்பங்கள் போக்கும் பேருபகாரனே
எங்கள் திருமணத்தின் துன்பச் சுமை தீராதா -அதனால் 
விளைந்த கொடுமைகளோ மாறாதா.. யா அல்லாஹ்!


பள்ளிவாசல் தோறும் தொடரும் குமருக்கான பிச்சைகள்
தன்மானம் இழந்தழுகும் பெண்ணைப் பெற்ற நெஞ்சங்கள்
திருமண சந்தையிலே மாப்பிள்ளைக்குப் பேரங்கள் 
கருவே கல்லறையாய் பெண்குழந்தை சிசுவுகள்
புதிதாய் மார்க்கம் வந்த புது முஸ்லிம் குடும்பங்கள் 
திருமணச் சுமையாலே மதம் மாறும் அவலங்கள் 
கருணை தயாளனே இது என்ன கொடுமைகள்
பரக்கத்தை தடை செய்யும் முசீபத்தின் அவலங்கள்


                                                     (எங்கள் திருமணத்தின்)


கஞ்சனும் காசை அள்ளி வீச வைக்கும் கல்யாணம்
வட்டிக் கடன் பட்டு சொத்தை விற்க வைக்கும் கல்யாணம் 
சமூகத்தின் பொருள்வளத்தை நாசமாக்கும் கல்யாணம்
தீமைக்கு தீமையாகி விளைந்து நிற்கும் கல்யாணம் 
வீண்விரைய செலவில் இறை சாபம் தேடும் கல்யாணம்
கவுரவம் தற்பெருமை காட்ட நடக்கும் கல்யாணம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 


                                                    (எங்கள் திருமணத்தின்)


சொர்க்கத்து பந்தமாகும் திருமணத்தின் உறவுக்கு
நரகத்து வேதனையாய் சுட்டெரிக்கும் செலவுகள்
மருந்துண்ண வைக்குகின்ற விருந்து முறைகேடுகள்
கைக்கூலிக்கு கமிஷன் வாங்கும் கல்யாணத்து தரகர்கள்
எளிமைத் திருமணங்கள் 'மஹர்' கொடுத்து நடக்கணும்
இது ஒரு வணக்கம் என்ற உண்மைதனை உணரணும் 
வேதனைத் தீயில் வாடும் பெண்ணினத்தைக் காக்கணும் மார்க்கமும் மனசாட்சியும் இனியாவது ஜெயிக்கணும்
                                                    (எங்கள் திருமணத்தின்)

காட்சி-6

சலீமின் சகோதரி மகன் கோபால் சலீமை நையாண்டி செய்கிறான்:)

மாமா. என்ன மாமா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. இப்ப பொலம்பி என்ன செய்ய? இதெல்லாம் மதம் மாறுவதற்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். அந்த சமுதாயத்துலதான் வரதட்சணைக் கொடுமை அதிகமா இருக்குன்னு தெரியாதா? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க 'உம்' என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. ஆயிஷாவுக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன். மாமா என்னதான் இருந்தாலும் நான் உங்க முறைமாப்பிள்ளை இல்லையா. அந்த உரிமையிலதான் கேட்கிறேன். ஆயிஷாவை எங்கிட்ட விட்டுருங்க.அஞ்சு பைசா கூட வேணாம். என்ன சொல்றீங்க?

''டே கோபாலு. வார்த்தயை அடக்கிப் பேசு. எங்கிட்ட சன்மானம் இல்லாம இருக்கலாம்; ஆனா தன்மானம் நிறைய இருக்கு. எங்கிட்ட வசதி இல்லாம இருக்கலாம்; ஆனா உறுதியான ஈமான் இருக்கு. இன்னொரு தடவை இப்படி வந்து கேட்டே.. சொந்தக்காரன்னு கூட பார்க்கமாட்டேன்; வெட்டிப் பொதச்சிருவேன்.

''அட போய்யா.. நல்லதுக்கு காலமில்லே''

கோபால் ஓடிவிடுகிறான்.

''யா அல்லாஹ். என்ன ஒரு சோதனை? என் ஈமானுக்கே ஆபத்தா? இதுக்கு வேற வழியே இல்லையா?''

                     நாடகம் பகுதி-4 ஐ படிக்க இங்கே அழுத்தவும்

திருத்தப்பட வேண்டிய திருமணச் சடங்குகள்- நாடகம்2

   காட்சி-3             

(கரீம், சலீம், ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகி)


கரீம்:
''அஸ் ஸலாமு அலைக்கும் தலைவரே

 அலைக்குமுஸ் ஸலாம்வாங்க கரீம் பாய்இது யாரு புதுசா இருக்கு?

நம்ம சரவனன்தான் கலிமா சொல்லிட்டாரு.

யாரு.... நம்ம சரவணனாசுப்ஹானல்லாஹ்முகத்துல என்ன ஒரு தெளிவு.. என்ன ஒரு பொழிவுசரி என்ன விஷயமா வந்தீக?

ஒன்னுமில்ல.. இவருக்கு ஹிதாயத் கிடைச்சிருச்சுஅதுபோல ஒரு வேலையும் கிடைச்சிருச்சுன்னா சந்தோஷமா இருப்பாருபாவம் கஷ்டப் படுராரு.
 தலைவர்:
கரீம் பாய்.. கஷ்டப்படுறவங்களுக்கும் கடன்படுறவங்களுக்கும் உதவி செய்யத்தானே நம்ம பைத்துல்மால் வச்சிருக்கோம் நம் ஊரில் இருக்கும் செல்வந்தர்களெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அவர்களுடைய ஜகாத் பணத்தையெல்லாம் கணக்கிட்டு நம்ம பைத்துல்மாலில் கொண்டுவந்து கொடுத்துடுவாங்கநாம அதை என்ன செய்கிறோம்இந்த மாதிரி புதுசா முஸ்லிமானவங்ககஷ்டப்படுறவங்ககடன் தொல்லையால் அவதிப்படுறவங்கபெண்குமர்களை வச்சிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிறவங்கபிள்ளைகளைப் படிக்க வைக்க பணம் இல்லாதவங்க இவங்களைத் தேடிப்போயி உதவி செய்கிறோம்அதனால கண்டிப்பா உங்களுக்கு உதவி செய்வோம்.
 நிர்வாகி:
ஆமாம்உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
 சலீம்:
பரக்கத்து 2 ஹரக்கத்து.

''அப்படின்னா?''

''2 பொம்பளப் புள்ள 2 ஆம்பளப் புள்ள.''

''ஆஹா..  பொம்பளப் புள்ளயை பரக்கத்துன்னு சொன்னீங்க பார்த்தீங்களாவெரிகுட்அல்லாஹ் உங்கள கைவிடமாட்டான்உங்க 2 பொம்பளப் புள்ளகளையும் நம்ம நிஸ்வான் மதரசாவுல சேர்த்துடுங்கஹிதாயத்துன்நிஸ்வான்.. நிச்சயமா ஹிதாயத் கிடைக்கும். 2 ஆம்பளப் புள்ளைகளுக்கும் சுன்னத் வைக்கனுமில்லையாகவலைப் படாதீங்கநம்ம ஊருல வாலிபர்கள் சிலர் ஏழைகளுக்கு இலவசமாக சுன்னத் வைக்கிறாங்கஅது மட்டுமில்ல.. நம்ம வாலிபர் சங்கம் பெரு நாள் அன்னக்கி அரிசிகளையும் ஆடைகளையும் உங்க வீட்டுக்கு வந்தே கொடுத்திடுவாங்கஉங்களை ஆதரிக்க இத்தனை கைகள் இருக்கும்போது நீங்க ஏன் கவலைப் படவேண்டும்உங்க நிரந்தர வேலைக்காக ஒரு ஏற்பாடு செய்கிறோம்இன்ஷா அல்லாஹ் இன்னையிலிருந்து நீங்கதான் நம்ம பள்ளியில முஅத்தின்சம்பளம் 5000. சம்மதமா?
 சலீம்:
ரொம்ப நன்றி தலைவரே.. ஜஸாக்கல்லாஹ்

                   (திரை மூடித் திறக்கிறது)
                                                        காட்சி- 4           
                                       
(சில வருடங்களுக்கு பிறகுரீமும்  சலீமும் சந்தித்துக் கொள்கின்றனர்

வாங்க சலீம் பாய்என்ன இந்த பக்கம்?

ஒன்னுமில்ல.. எம் மூத்த மக ஆயிஷா ஆலிமா பட்டம் வாங்கிருச்சுஆளாகி 5 வருஷமாச்சுஅதை ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கணுமில்லையா?

ஆமா கண்டிப்பா செய்யணும்வாங்க உட்கார்ந்து பேசுவோம்அம்மா பாத்திமா.. நம்ம சலீம் பாய் வந்திருக்காகசூடா ரெண்டு காப்பி கொண்டு வாம்மாம்.. நீங்க சொல்லுங்க

அதான் கரீம் பாய்.. நான் என்ன சொல்றேன்னா.. நம்ம ஆயிஷா அழகுலயும் கொறச்சலில்லஅறிவுலயும் கொறச்சலில்லஒழுக்கம்னா ஒழுக்கம் அப்படி ஒரு ஒழுக்கம்அதனால?

அதனால?!

அதனால உங்க மகனுக்கே ஆயிஷாவை நிச்சயம் பண்ணிரலாம்னு இருக்கேன்நீங்க சரின்னு சொன்னா..

என்னது.. எம் மகனுக்கு உம் மகளாஎன் வீட்டுல நீ சம்பந்தம் பண்ணுறதாமுதல்ல எடத்த காலி பண்ணு

நான் என்ன சொல்றேன்னா...

நீ ஒன்னும் சொல்லவேணாம்இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்குதாகெட் அவுட்.

என்ன கரீம் பாய் இப்படி ஆத்திரப் படுறீங்ககலிமா சொல்லிட்டா எல்லாருமே சமம்னு நீங்க சொல்லலையா?
பாகுபாடு பார்க்கக்கூடாதுன்னு பல தடவை உங்க வாயாலேயே சொல்லலையா?

சொன்னேன்அதுக்காக சம்பந்தம் பண்ணமுடியுமாஎம் பொண்டாட்டி செருப்பாலேயே அடிப்பா.

அப்படியா பாகுபாடு பார்த்தா அல்லாஹ் நெருப்பாலேயே அடிப்பானேஅப்ப என்ன செய்வீங்க?

''யோவ் ரொம்ப பேசாதே. முதல்ல எடத்த காலி பண்ணுய்யா.. சம்பந்தமாம் சம்பந்தம்.. யாருக்கிட்ட யாரு சம்பந்தம் பண்ணுறது.''

(வெளியேறுகிறார். கவலையுடன் நடக்கிறார்.)

'ச்சே.. கரீம் பாய் இப்படி பேசிட்டாரேஎன்ன பண்ணுறதும்.. வேற ஏதாவது விசாரிச்சுப் பார்ப்போம்ஒரு நல்ல இடம் கிடைக்காமலா போயிடும்?'
பாடல் ஒலிக்கிறது:
'' ஒரு கதவை மூடிவிட்டால் பல வழியைத் திறந்து வைப்பான்உண்மை பேசும் மானிடர்க்கே உறுதுணையாய் அவன் இருப்பான்''
  பாடல் மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.


திருத்தப்படவேண்டிய திருமணச் சடங்குகள்-நாடகம்1

manbaul hasanath
''அய்யா தரகரே.. இங்கே வாங்க எம் பையன் பாஷாவுக்கு ஒரு நல்ல பொண்ணா பாருங்க!''

''அப்படியா உங்க பையன் என்ன செய்கிறார்?''

''என்னய்யா இப்புடபொசுக்குன்னு கேட்டுப்புட்டேஎம்பையன் ஒரு பெரிய  வி..பி ய்யா!''

''வி..பி.ன்னா?''

''V...I...P... வேலை இல்லா பட்டதாரி''
.
''அடத்தூ..வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கான்னு சொல்லுங்க''

''அட ஆமாய்யாயோவ் தரகரே எம் பையனுக்கு நீ பாக்குற எடம் பெரிய எடமா இருக்கணும்''

''பெரிய எடம்னா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்துல குப்பைக் கொட்டுற இடம் இருக்கே அது போதுமா?''

''யோவ் அதில்லைய்யாபெரிய எடம்னா பசையுள்ள பார்ட்டி.''

''ஓ பசையுள்ள பார்ட்டியா?''

''அதேதான்இப்பவாவது புரிஞ்சிட்டியே போ.. போய் பார்த்துட்டு வா!''

(தரகர் தனக்குள் சொல்லிக் கொள்கிறார்):
'பசையுள்ள பார்ட்டிய எங்கே போய் தேடுறது..
ஆங்அந்தா இருக்கார் பசையுள்ள பார்ட்டி.'
 (பக்கத்தில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனை இழுத்து வருகிறார்)

''யோவ் என்னைய்யா போஸ்டர் ஒட்டுறவன இழுத்துக்கிட்டு வாறே?''

''நீங்கதான் பாய் கேட்டீங்க.. பசையுள்ள பார்ட்டின்னுஅதான்!''

''அய்யோ உன்னோட பெரிய வம்பாப் போச்சுய்யாபோயி நல்லா பணக்கார இடமாப் பார்த்துட்டு வாபோ!''

''சரிங்க பாய்.''

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து )
''பாய்.. ஒரு பெரிய இடம் சிக்கியிருக்குஅந்த ஆளுக்கு 2 பொண்ணுபெரிய பொண்ணு கொஞ்சம் கருப்பாத்தான் இருக்கும்.. ஆனா 2 லட்சம் தர்ராங்களாம்அடுத்த பொண்ணு அதைவிட கருப்பா இருக்கும்ஆனா 5 லட்சம் தர்ராங்களாம்.. நான் எதைப் பார்க்கட்டும்?''

''அப்படின்னா அதைவிட இன்னும் கருப்பா பாரு!''

''அடத்தூ.. நீயெல்லாம் ஒரு மனுஷனா?''

''சரி சரிகோவிச்சுக்காதேய்யாரொம்ப வேணாம்ஒரு 2 லட்சம் 20 பவுன் சிம்பிளா ஒரு இடம் பாருய்யா.''

''இது ஒனக்கு சிம்பிளா? 2 லட்சம் 20 பவுன் என்பது உனக்கு சிம்பிளா?''

''யோவ்.மொறப்படிப் பார்த்தா நான் 10 லட்சம் கேட்கணும்ஏதோ போனாப் போகட்டும்னு 2லட்சம் கேக்குறேன்.''

''என்னது 10 லட்சமாஎப்படி?''

''ஆமாய்யாஎம் பையனை பெத்து வளத்து ஆளாக்கியிருக்கேன்ல..அதுக்கு ஒரு 7 லட்சத்த போடுபடிக்க வச்சு பட்டதாரி ஆக்கியிருக்கேன்ல.. அதுக்கு ஒரு 2 லட்சத்த போடுநாளைக்கு அவனுக்கு கல்யாணம்னா விருந்து வைக்கனும்குரூப்புக்காரனுக்கு பார்ட்டி வைக்கனும்.. அதுக்கு ஒரு 1 லட்சத்த போடுஆக கொறஞ்சது 10 லட்சம் கேட்கணும்ஏதோ போனாப் போகட்டும்னு 2லட்சம் கேக்குறேன்.''

''ஏன்யாஇதெல்லாம் ஒரு பெத்த பிள்ளைக்கு தகப்பன் செய்யவேண்டிய கடமைகடமைக்குப் போய் கணக்கு பாக்குறீயேஇது நியாயமா?''

''யோவ்நியாயம் அநியாயமெல்லாம் இருக்கட்டும்சொன்ன வேலையை செய்யாகமிஷன் தர்றேன்.''

''கமிஷனா.. அப்ப ஓகே!''
                                     (திரை மூடித் திறக்கிறது)


                                       காட்சி-2 

சரவணன் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தில் கரீம் பாய் இஸ்லாமை எடுத்துச் சொல்கிறார் :

ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் மக்களேநாம் அனைவரும் சகோதரர்கள்ஆதம் ஹவ்வா என்ற ஒரு தாயின் மக்கள் நமக்குள் குலத்தாலோ நிறத்தாலோ ஏற்ற தாழ்வுகள் இல்லை.
 நாம் அனைவரும் ஒரே இறைவனின் படைப்புகள்அந்த இறைவனுக்கு முன்னால் அரசன் ஆண்டி ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லோரும் சமமே!
சரவணன் :
ஐய்யாஇந்த சமவுரிமைக்காகத்தானே நாங்க ஏங்குறோம்எங்கள ஒரு மனுஷனாவே மதிக்கமாட்டேங்குறாங்கய்யாநாங்க தொட்டா தீட்டுபட்டா தீட்டுங்குறாங்கஉயர்ஜாதி குடியிருக்கும் தெருவுல நாங்க நடக்கக்கூட உரிமை இல்லய்யாநடந்தா கால வெட்டுறாங்க தட்டிக்கேட்டா கழுத்த வெட்டுறாங்கஇதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையாங்க?
கரீம் பாய் :
தம்பி..  நம்ம நாட்டுல எத்தனையோ நல்லவங்க வந்து நச்சுன்னு மண்டையிலே ஒரைக்கிற மாதிரி நல்லாத்தான் சொல்லிட்டுப் போனாங்கசாதிகள் இல்லையடி பாப்பா அப்படின்னு பாரதியார் பளிச்சின்னு சொன்னார்தீண்டாமை ஒரு பாவச்செயல் அப்படின்னு நாட்டுத் தந்தை நல்லா சொன்னாரு. சொல்லி என்ன செய்யஇன்னமும் இந்த நாட்டுல பல கிராமங்கள்ல தீண்டாமைக் கொடுமை தலைவிரிச்சுத்தானே ஆடுதுபல டீக்கடைகள்ல இரண்டு டம்ளர் முறை இன்னும் இருக்கத்தானேசெய்யுதுமேல்ஜாதிக்கு ஒன்னு கீழ் ஜாதிக்கு ஒன்னுன்னு.
சரவணன் :
ஏம் பாய்.. இதுக்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா?
கரீம் பாய் :
ஏன் இல்லைபெரியார் முதல் பெரியார்தாசன் வரை சொன்ன ஒரே தீர்வு என்ன தெரியுமாஇன இழிவு ஒழிய இனிய மருந்து இஸ்லாம் ஒன்றுதான்எந்த சாதியா இருந்தாலும் கலிமா சொன்ன மறு நிமிடமே கண்ணியம் வந்துடும்மரியாதை கூடிடும்நீயும் மானமுள்ள ஒரு மனுஷனா தலை நிமிர்ந்து வாழலாம்
சரவணன் :
அப்படியா பாய்அப்படின்னா இப்பவே சொல்றேன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்  அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.

கரீம் பாய் :
ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.!
சரவணன் :
கரீம் பாய்.. எனக்கு கிடைத்த இந்த ஹிதாயத் என் மனைவி மக்களுக்கும் கிடைக்கனும்அவங்களும் நரகத்தை விட்டும் விடுதலையாகனும்.
கரீம் பாய் :
நிச்சயமாஅல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்போய் உங்க குடும்பத்துக்கும் கலிமா சொல்லிக் கொடுங்க.. போங்க.''

சரவணன் சலீமாக மாறிய சந்தோஷத்துடன் வீடு சென்றார்.

(அடுத்த நாள்....
சலீமும் கரீமும் மீண்டும் சந்திக்கின்றனர்)

''அஸ் ஸலாமு அலைக்கும் கரீம் பாய்எப்படி இருக்கீங்க?

 அலைக்குமுஸ் ஸலாம் சலீம் பாய்அல்லாஹ்வுடைய கிருபையிலே நல்லா இருக்கேன்அது சரி எங்கே கிளம்பிட்டீங்க?

தொழுகத்தான்.. பள்ளிக்குப் போய்க்கிட்டு இருக்கேன்பாங்கு சொல்ல பத்து நிமிஷந்தானே இருக்குமுன்கூட்டியே பள்ளிக்குப் போய் உளூ செய்துட்டு உட்காருவது நல்லதுதானே கரீம் பாய்?

அடடா சுப்ஹானல்லாஹ்பரம்பரை முஸ்லிம்கிட்டயே இந்த பழக்கம் இல்லையேநேத்துத்தான் கலிமா சொன்னீங்கஇன்னிக்கே இவ்வளவு ஈமானாமாஷா அல்லாஹ்சரி வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்.

(பள்ளிக்குள் நுழைகின்றனர்)

''சரி பள்ளிக்குள் வந்தாச்சு.. வாங்க முன் சஃப்புக்கு போயிரலாம்''

''முன் சஃப்புகாநானா?''

''ஏங்க சலீம் யோசிக்கிறீங்கஎப்ப கலிமா சொன்னீங்களோ அப்பவே உங்களுடைய பழைய அடையாளமெல்லாம் போயிருச்சுஇப்ப நீங்க ஒரு உயர்ந்த முஸ்லிம்நீங்க விரும்பினா முதல் வரிசையில மட்டுமல்ல அதுக்கு மேலே இமாமாக கூட நிக்கலாம்''

''என்னது இமாமாவா?''

''ஆமாம் முறைப்படி ஓதிப் படிச்சிட்டு இப்பவே நீங்க இமாமா கூட இருந்து எங்களுக்கு வழிகாட்டலாம்நான் ஏற்கனவே சொல்லலையாஅல்லாஹ்வுக்கு முன்னாடி அரசனும் ஆண்டியும் சமம்னு.''

சலீம் தொழுதுவிட்டு இறைவனிடம் இறைஞ்சுகிறார்:

''யா அல்லாஹ்.. சாக்கடையை விட்டுட்டு சத்தியத்திற்கு வந்துட்டேன்உனது உண்மையான மார்க்கத்தை ஒப்புக்கொண்டு விட்டேன்.எனது உறவினர் என்னை உதறிவிட்டனர்.எனது பங்காளிகள்கூட என்னைப் பகைத்துவிட்டனர்இப்பொழுது முழுமையாக உம்மேல தவக்குல் வச்சிருக்கேன்நீதான் கடைசி வரைக்கும் என்னைக் காப்பாத்தனும்ஆமீன்.''
கரீம் பாய் :
ஆமீன்ஆமீன்யாரப்பல் ஆலமீன்கவலைப் படாதீங்க சலீம் பாய்உங்களுக்கு உற்ற துணையா நாங்க இருக்கோம்கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்வாங்க நம்ம தலைவரைப் போய் சந்திப்போம்.