புதியவை

ஞாயிறு, 27 மே, 2012

திருத்தப்படவேண்டிய திருமணச் சடங்குகள்-நாடகம்4

oppilan
arsath

நாடகம் பகுதி-1 ஐ படிக்க இங்கே அழுத்தவும்

                                     காட்சி-7

பஷீர் பாய் சலீம் பாயின் பரிதாபமான நிலை கண்டு இறங்குகிறார் அவர் சலீமை சந்தித்து பேசுகிறார்:
''சலீம் பாய்.. இப்ப நடந்த எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருந்தேன். ஒரு சமுதாயத்துல ஒரு சிலர் செய்யிறத வச்சு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தப்பா எடை போடக்கூடாது. உங்களுடைய மன உறுதியை நான் பாராட்டுறேன். உங்களுக்கு சம்மதம்னா உங்க பொண்ண எம் பையனுக்கு எடுத்துக்கிறேன். நயா பைசாக்கூட வேணாம். என்ன சொல்றீங்க?''

உன்மையாவா சொல்றீங்க?

''ஆமாங்க சலீம் பாய். மார்க்கமும் ஒழுக்கமும் உள்ள பொண்ணைத்தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன். உன்மையான வெற்றி அதுலதானே இருக்கு? நம்ம நபி (ஸல்) அவர்கள்கூட அழகாச் சொன்னாங்களே:
''பொதுவா பொண்ணு பார்க்குறவங்க பணத்தப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு; பரம்பரையப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு; அழகைப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு. ஆனாஒழுக்கத்தைப் பார்த்து முடிக்கிறவங்கதான் வெற்றி பெற முடியும் ''
அப்படின்னு சொன்னாங்க இல்லையா? அதனாலதான் உங்க பொண்ணை நான் தேர்ந்தெடுத்தேன். அதுமட்டுமில்ல.. புதுசா முஸ்லிமான உங்க குடும்பத்துல நான் பெண்ணெடுத்தா எனக்கு டபுள் நன்மை உண்டு. அது பெரும் பாக்கியம். அதனால கவலைப் படாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.

''ரொம்ப நன்றிங்க.. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுசப் போட்டு வப்பான்''

காட்சி-8
(பஷீரும் மகன் அப்துல்லாஹ்வும்):



மகனே அப்துல்லாஹ். இங்கே வாயேன் ஒரு நல்ல செய்தி.


என்ன வாப்பா சொல்லுங்க


மகனே உனக்கு ஒரு நல்ல இடத்துல பொண்ணு பார்த்திருக்கேன்


வாப்பா.. இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்?


என்ன ராசா இப்படி சொல்லுற? உனக்கு 24 வயசாச்சு.மூன்றாம் எட்டில் முடிக்காதது திருமணம் அல்ல என்று முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. நீ சரின்னு சொன்னா மேற்கொண்டு காரியத்தப் பார்க்கலாம். என்ன சொல்ற?


வாப்பா.. உங்க பேச்சுக்கு எப்ப நான் மறுபேச்சு பேசியிருக்கேன்.  நீங்க செய்தா அது சரியாத்தான் இருக்கும். ஆனா ஒரு விஷயம். நான் யாரைக் கல்யாணம் செய்யணும்னு நீங்க முடிவு பண்ணின மாதிரி கல்யாணம் எப்படி நடக்கணும்னு நான் முடிவு பண்ணுறேன்.. ஓகேயா?


ஓகே. சொல்லு எப்படி நடக்கணும்?


என்னோட கல்யாணம் முழுக்க முழுக்க சுன்னத்தான முறைப்படி நடக்கணும். வெள்ளியிலே ஜும்ஆ பள்ளியிலே....


அப்படின்னா என்ன? கொஞ்சம் விளக்கமா சொல்லுவேன்


பல நபிமார்களுக்கும் நல்லோர்களுக்கும் கல்யாணம் நடந்த வெள்ளிக் கிழமையிலே என்னோட கல்யாணமும் நடக்கணும். பெரிய அலங்காரத் தோரணமோ ஆடம்பரமோ இல்லாம பள்ளியிலே எளிமையா நடக்கணும். பத்திரிக்கைக்கூட அடிக்க வேணாம் வாப்பா.


பத்திரிக்கை இல்லாம எப்படிப்பா?


சரி. சிம்பிளா அடிங்க. ஆனா அந்த பத்திரிக்கையில மொய் வாங்குவதில்லை என்பதை முக்கியமா காட்டிடுங்க. அப்புறம் சுன்னத்தான தப்ஸ் ஊர்வலம் இருந்தா நல்லது. மத்தளம் கொட்டு இல்லாம ஆட்டம் பாட்டம் இல்லாம தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்காம குடி கும்மாளம் இல்லாம நல்ல முறையில இருக்கணும்.


சரி.. அப்புறம்?


முகத்தையே மறைக்கிற அளவுக்கு மாலை போடாம சிம்பிளா ஒரே ஒரு மாலை போதும். மாப்பிள்ளை என்பதற்கு ஒரு அடையாளமாகவும் நறுமணமாகவும் இருக்கும். அதுமட்டுமில்ல.. மலர்கள் இருக்கும் சபையில் மன இறுக்கம் மன அழுத்தம் ஏற்படாது என்பது மருத்துவம். அதனால ஒரு ஒரே ஒரு மாலை போதும்.
oppilan


சரிப்பா.. வீடியோவுக்கு சொல்லிரவா?


வீடியோவா? அறவே வேண்டாம். ஃபோட்டோ எடுக்கிறதப் பத்திக்கூட யோசிக்கணும் வாப்பா. ஏன்னா ஃபோட்டோ எடுக்கிற சாக்குல ஜமாத்த காக்க வச்சிரக்கூடாது. அதனால நிறைய பேரோட பொன்னான நேரமும் வீணாகி வேலையும் கெட்டுப் போயிடும். நம்ம சக்திக்கு தக்கவாறு ஒரு சில ஆடுகளையாவது அறுத்து வலீமா விருந்து கொடுத்துறணும். அதுல ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்துறணும். ஏன்னா ஏழைகளை விட்டு விட்டு பணக்காரங்களை மட்டும் கூப்பிட்டு கொடுக்கிற விருந்து தரங்கெட்ட விருந்து அப்படின்னு நம்ம நபி (ஸல்) சொல்லியிருக்காங்க.


சரி மகனே. நான் போயி ஆட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துர்றேன். இந்தா ஒரு 50,000 ஐ நீ வச்சிக்க.


50,000 மா? ஏன் வாப்பா எனக்கு அம்பதாயிரம்?


உனக்கில்லப்பா. உன்னோட ஃபிரண்ட்சுக்கு பார்ட்டி வைக்கணுமில்ல. அதுக்குத்தான்.


என்ன வாப்பா. நீங்களே இப்படி பேசலாமா?


அதில்லப்பா. எம் மகன் கல்யாணம். நிறைய பேர் வந்து வாழ்த்தணும்னு எனக்கு ஆசை இருக்காதா? இப்பவெல்லாம் 'தண்ணீ'  வாங்கிக் கொடுத்தானே கல்யாணத்துக்கு வர்றாங்க?


அதுக்காக..? அனாச்சாரத்தை செய்யமுடியுமா? நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. 'தண்ணீ 'வாங்கிக் கொடுத்தான் கல்யாணத்துக்கு வருவாங்கன்னா அப்படி ஒரு நட்பே எனக்குத் தேவை இல்லை. அவங்க வந்து வாழ்த்தித்தான் நான் வாழணும்னு அவசியமில்லை.


வெரிகுட் வெரிகுட். எம்புள்ளன்னா எம்புள்ளதான். அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்துட்டடா!
                                                             ------------

காட்சி-9
 (சலீம் பாய்,  கரீம் பாய்)



''அஸ்ஸலாமு அலைக்கும் கரீம் பாய்''

''வ அலைக்குமுஸ் சலாம் சலீம் பாய் இப்ப என்ன விஷயமா வந்தீங்கஅதேன் அன்னைக்கே சொன்னேன்லநமக்குள் சம்பந்தம் இல்லைன்னுஇப்ப எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு வந்தீங்கநல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதாதா?''

கரீம் பாய்.. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்எம் மக ஆயிஷாவுக்கு ஒரு நல்ல இடம் அமைஞ்சிருக்கு கைக்கூலி நயாப் பைசாக்கூட இல்ல அந்த கல்யாணத்துக்கு முதல் அழைப்பே உங்களுக்குத்தான்நீங்கதான் அதைத் தலைமை தாங்கி நடத்தி தரணும்.''

என்னது நானாநிஜமாவா சொல்றீங்க?

ஆமா நிச்சயமா நீங்க கல்யாணத்துக்கு வரணும்.

ஆகா... சலீம் பாய் நீங்க நீங்கதான். என்ன பெருந்தன்மை உங்களுக்கு! உங்களை எப்படியெல்லாம் ஒதுக்கினேன்நீங்க எவ்வளவு தூரம் என்னை மதிக்கிறீங்க?!

கரீம் பாய்.. என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு வழிகாட்டி இல்லையாநான் நரகத்தின் படுகுழியில் கிடந்தேன்நீங்கதான் கைகொடுத்து கலிமா சொல்லிக் கொடுத்து சொர்க்கத்திற்கு சொந்தக்காரனாக மாத்துனீங்கஅதனால இந்த கல்யாணம் உங்க துஆவுலதான் நடக்கணும்.

''இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வர்றேன்.''

அல்லாஹ்வின் கிருபையால் சலீமின் இல்லத் திருமணம் கரீம் பாய் தலைமையில் ஜமாத்தார்கள் புடைசூழ இனிதே நடந்தது..
மிக எளிமையாக!

வாங்க வாசகர்களே! நாமும் அந்த முன்மாதிரி திருமணத்தை வாழ்த்திட்டு 'வலீமா' விருந்தை ஒரு பிடி பிடிச்சிட்டு வருவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்