புதியவை

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உயர்ந்த தலைவர் உமர் கத்தாப்

oppilan

ஒப்பற்ற ஒப்பிலானின்
அப்பழுக்கற்ற மண்ணின் மைந்தர்!
பிறந்த மண்ணிலும் -தற்போது
இறந்த மண்ணிலும்
சிறந்த மனிதராய்த்
திகழ்ந்த புனிதர்

இறைவழியில் இன்முகத்துடன்
பெருந்தொகையை அள்ளித் தரும்
பெருந்தகை !

பள்ளி கட்டுவதற்கு
அள்ளித் தந்தவர் -புதிய
பள்ளி கட்டுவேன் என
சொல்லிச் சென்றவர்!

அறிஞர்கள் என்றால்
அவ்வளவு பிரியம்!
பழகிப் பார்த்தோருக்கு
 நன்றாகவே புரியும்!

சொந்த ஊர்
வந்த ஊர்
எந்த ஊரிலும்-இவர்
தந்த தீர்ப்புக்கு
தலைவணங்குவோர் ஏராளம்!
தீராத சிக்கல்களும்
தீரும் இவர் மூலம் !

கையில் குடையோடு
மிடுக்கு நடையோடு
பளிச்சென்ற உடையோடு
அவர் வருகின்ற
அழகு...அப்பப்பா!

அந்த கம்பீர கலங்கரை விளக்கு-இன்று
காணாமல் போனதே..
அந்த அகழ் விளக்கு -இன்று
அணைந்து விட்டதே!

இனி-
எப்ப்டி கிடைக்கும்
இப்படி ஒரு தலைமை ?
அப்படியே கிடைத்தாலும்
முறைப்படி இவர்தான்
அதற்கும் முதன்மை !