ஒப்பிலான் மக்களுக்கு ஓர் நற்செய்தி.
நம் ஊரில் 11 மாணவிகள் இந்த ஆண்டு 'முபல்லிகா' பட்டம் பெற இருக்கிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நம் ஊரில் இயங்கி வந்த ஹிதாயத்துன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியில் 'முபல்லிகா' பிரிவில் பயின்று வந்த இம்மாணவியர் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து இம்மாதம் முப்பதாம் தேதி (30-06-2013) ஞாயிறு காலை 10 மணியளவில் மதரசா வளாகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முபல்லிகா ஸனது பெறுகிறார்கள்.
அவர்களுக்கு பாராட்டும் பரிசளிப்பும் நடைபெறும்.
விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் ''பெண்கள் சமுதாயத்தின் கண்கள்'' என்ற அருமையான வாழ்வியல் நூல் ஒன்றும் வெளியிடப்படுகிறது. சிறப்பாக நடைபெற, நல்லுள்ளம் கொண்ட அனைவரும் துஆ செய்யுங்களேன் !
![]() |
பட்டம் பெரும் மாணவிகள் |
![]() |
நிகழ்ச்சி நிரல் |
எல்லாம் வல்ல அல்லாஹ் விழா சிறக்க நல்லுதவி செய்வானாக!
பதிலளிநீக்குvaraverkiroam. Vaalthukiroam. Nalla seithi thaan.
பதிலளிநீக்குமேலும் வளர வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்கு