புதியவை

திங்கள், 11 ஜூன், 2012

மண்ணின் மைந்தர்கள்-தொடர்-3

(Marhoom) HAJA MOHIDHEEN
இன்று (ஜூன் 10)அன்னாரின் நினைவு நாள். 

மறைந்து ஓராண்டு ஆகியும் நினைவு நீங்கவில்லை. 
மறைந்தது போன்றே தெரியவில்லை. 

நடக்கும் பொழுதும் இருக்கும் பொழுதும் படுக்கும் பொழுதும் அவர் நம் கூடவே இருப்பது போல ஓர் உணர்வு. 

குறைந்த வயதிலேயே ஜமாஅத் தலைவராகப் பொறுப்பேற்று திறனாக நடத்தியவர். 

நீண்ட காலமாக பள்ளிக்கூடத்திற்கு அருகில் கிடந்த பயங்கரமான பள்ளத்தை உடனடியாக மண்ணிட்டு மூடி மக்கள் நடந்து செல்ல நல்ல பாலம் அமைத்துக் கொடுத்தவர். 
வட்டார அளவில் மதரஸாக்களுக்கான மார்க்க அறிவுப் போட்டி நடத்தியதில் பெரும் களப்பணியாற்றியவர். 

மதரஸாவின் மேம்பாட்டிற்கு தேவையான நல்ல திட்டங்களை நாம் எடுத்துச் சொன்னால் உடனே வரவேற்பார். அதற்கான வசதிகளை உடனுக்குடன் செய்து தருவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார். மதரஸா மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை, பேக் , குறைந்த உயரம் கொண்ட தரமான டெஸ்க் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் கூறியபோது அதை உடனே அமுல் படுத்தினார். 

ஒப்பிலான் ஹிதாயத்துன் நிஸ்வான் பெண்கள் மதரஸாவை மீண்டும் தொடங்கி திறம்பட நடத்தி வந்தவர்.

மார்க்க அறிஞர்களை மதித்து நடப்பவர். ஆலிம்களிடத்தில் அந்நியோன்யமான, அளவு கடந்த அன்பும் நட்பும் உள்ளவர். 
வயது குறைந்த ஹாஃபிழ்களைக் கூட பாசத்துடனும் மரியாதையுடனும் ''ஹாஃப்ஸா'' ஹாஃப்ஸா'' என்று மூச்சுக்கு முன்னூறு முறை அவர் உதடு தித்திக்க உச்சரிக்கும் பொழுது நம் உள்ளமெல்லாம் குளிரும். நியாயத்தை உரத்து முழங்குபவர். அநியாயத்தை துணிந்து எதிர்ப்பவர். 

இதுபோன்ற தலைவர்களை இழந்தது ஒப்பிலானுக்கு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். 

மண்ணின் மைந்தர்கள் வரிசைத் தொடர் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.

5 கருத்துகள்:

 1. ஆமாம்! அசரத்!

  நல்ல மனிதர் மச்சான் காஜா அவர்கள்!
  அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலிகளை வழங்குபவனாக!
  நாம் எல்லோரும் அவர்களுக்காக -
  துவா செய்வோமாக!

  அசரத்!
  உங்கள் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சீனி..
   அவரைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்.
   அவரைப் பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன்.

   நீக்கு
 2. உண்மை உண்மை மறக்கப்பட முடியாத ஒரு உண்மை. சாச்சா காஜா மைதீன் அவர்கள் ஊருக்காக தன்னை தியாகம் செய்திருப்பது உண்மையே. அவர்களின் ஆயுள் காலத்தை ஊருக்காகவை கழித்தவர் அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்து அவர்களுக்கு சொர்க்கத்தை வழங்குவானாக ஆமின்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
   அன்புள்ள சகுபர்,
   உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 3. உங்கள் அனைவருக்கும் நன்றி........!

  பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்