புதியவை

செவ்வாய், 5 ஜூன், 2012

நம் மதரஸாவிற்கு மாவட்ட உலமா சபை சான்று

oppilan
டந்த ஏப்ரல் மாதம் நம் மதரஸாவிற்கு வருகை தந்தார் முகவை மாவட்ட உலமா சபை ஆய்வாளர். நம் மாணவ மாணவிகளிடம் மார்க்கத்தின் பல அம்சங்கள் குறித்து வினாக்கள் வைத்தார். நாம் எதிர்பார்த்தது போலவே மாணவர்கள் தகுந்த விடைகளைத் தந்தனர். அல்ஹம்து லில்லாஹ். 
oppilan
அடேயப்பா.. இவ்வளவு பதக்கங்களா!
அது மட்டுமல்ல.. 
எக்கச் சக்கமா எக்கச் சக்கமா..
mathrasa
பட்டிமன்றம்
மாண்வர்களுக்கான சீருடை (uniform ) அனைவருக்கும் மதரஸாவின் அடையாளச் சின்னம் பதித்த ஒரே மாதிரியான பேக், அருமையான ப்ரேயர் பாடல் மாதந்தோறும் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி உற்சாகப் படுத்துதல் போன்ற நல்ல திட்டங்கள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ''இந்த மாவட்டம் முழுதும் ஆய்வுக்கு சென்றுவிட்டு வருகிறேன் என் பார்வையில் ஒப்பிலான் மதரஸா ஒரு முன்மாதிரி'' என்று நம் ஜமாத்தார்களிடம் தெரிவித்தார்.  இதல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக பல லட்சம் செலவழித்து மாவட்ட அளவில் மார்க்க அறிவுப் போட்டிகள் நடத்தி வருவதும் ஒப்பிலான் மாணவர்கள் பட்டிமன்றங்களில் அசத்துவதும் அருமை'' என்றார்.
 இதை மாவட்ட உலமா சபை ஆய்வுக் குறிப்பேட்டிலும் பதிவு செய்துகொண்டார். இது குறித்து சமீபத்தில் பார்த்திபனூரில் நடந்த மாவட்ட உலமா சபை பொதுக்குழுவிலும் குறிப்பிட்டு பாராட்டினார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. நம் மதரஸாவும் ஏனைய மதரஸாக்களும் சிறந்து விளங்க 
நாம் அனைவரும் துஆ செய்வோமாக.!

2 கருத்துகள்:

  1. இந்த பதிவு தம்பட்டம் அடிப்பதற்காக எழுதப்பட்டதல்ல..
    பொதுவாகவே மதரஸாக்களின் மீதும்
    மார்க்க கல்வியின் மீதும்
    மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதைக்
    கருத்தில் கொண்டு எழுதப்பட்ட
    உண்மைப் பதிவு.

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்