புதியவை

புதன், 20 ஜூன், 2012

வெள்ளை "அசரத்!


கொட்டு மேளங்கள்!
குதிரை ஊர்வலங்கள்!

கரகாட்டம்!
சண்டை போடும்-
கிரக ஆட்டம்!

விடிய விடிய-
திரைப்படங்கள்!
முடியாத-
ஆடல் பாடல்கள்!

வலைக்குள் செல்லும்-
மீனுக்கு தெரியாது-
மாட்டிடுவோம்-
என்று!

பொறிக்குள் செல்லும்-
எலிக்கு தெரியாது-
"திரும்ப " மாட்டோம்-
என்று!

பழக்கப்பட்ட-
அனாச்சாரங்கள் தெரியவில்லை-
தவறென்று !

தொடர்ந்தது-
இதே நிலை!

நியமித்தார்கள்-
இமாமாக-
புதிய நபரை!

அப்துல் மாலிக் ஆலிம்-
அவர்களை!

அவர் செய்ய துணிந்த-
காரியம் லேசாகபட்டது இல்ல!

வாழை பழத்தில்-
ஊசி சொருகுவது-
போலல்ல!

கோடாரியை வீசினார்-
கற்பாறை எனும்-
அனாச்சாரங்கள் மேல!

தவறுகளை-
சுட்டிக்காட்டினார்!

நெருப்பு சுட்டவுடன்-
கையை எடுப்பது போல்-
ஒதுங்கினார்கள்-
ஊரார்!

அன்று முதல்-
இன்று வரை!

அந்த அனாச்சாரங்கள்-
நடந்தேறவே இல்லை!

ஒரு வீடு பற்றிகொள்வதால்-
பக்கத்துக்கு வீட்டில்-
தீ படரா விட்டாலும்-
புகை படாமல்-
இருப்பதில்லை!

துணி மூட்டைக்குள்-
கட்டி வைத்தாலும்-
மல்லிகை -
வாசம் வீச-
மறுப்பதில்லை!

மாற்றங்களையும்-
யாரும் தடுக்கவும்-
முடிவதில்லை!

யா அல்லாஹ்!
அசரத் அவர்களின்-
நற்கருமங்களை ஏற்றுகொல்வாயாக!

எங்களையும் தவறுகளில்-
விழாமல் பாதுகாப்பாயாக!

எங்கள் அனைவரையும்-
நரக நெருப்பில் இருந்து-
காப்பாயாக!

சொர்க்க சோலையில்-
சேர்திடுவாயாக!

எங்கள் இறைவா!

உன்னையே நாங்கள்-
வணங்குகிறோம்!

உன்னிடமே -
உதவியை நாடுகிறோம்!


ப்ரியமுடன்-
சீனி ஷா.

5 கருத்துகள்:

  1. அப்பப்பா.. அனல் தெறிக்கும் வரிகள்
    அருமையான வார்த்தைகள்.

    //கோடாரியை வீசினார்-
    கற்பாறை எனும்-
    அனாச்சாரங்கள் மேல!//

    சில நேரங்களில் அப்படித்தானே
    வீசவேண்டியதுள்ளது?
    கோபப்படவேண்டிய நேரத்தில் கோபப்படாதவன்
    கழுதையைப் போன்றவன் என்று அறிஞர் ஷாஃபிஈ கூறுவது உண்மைதானே?

    பதிலளிநீக்கு
  2. ஒப்பிலானில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய namathu ஹஜ்ரத்தை பற்றி எழுதி இருப்பது அருமை. அல்ஹம்துலில்லாஹ் அல்லா உங்களுக்கு நற் கூலி வழங்குவனாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து சொன்ன சகோ, உங்களுக்கு நன்றி,
      ஆனால் நீங்கள் யார் என்று தெரிந்தால்
      நன்றாக இருக்கும்.
      உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம் ப்ளீஸ் ..

      நீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்