புதியவை

வெள்ளி, 15 ஜூன், 2012

பள்ளிக்கு ஓட்டுப் போடுங்கள்



பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய ஒப்பிலான் சகோதர சகோதரிகளே!

ஒரு சில வல்லரசு நாடுகளில் எந்த ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதாக இருந்தாலும் அதை Face book  போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள்.
சமீபத்தில் கூட ஒரு நாட்டில் பல சட்ட நிபுணர்களால் பல நாட்களாக சிந்தித்து தொகுக்கப்பட்ட பல்வேறு சட்டத் தீர்வுகளை Face book -ல் வெளியிட்டார்கள். அந்த மக்களிடம் கருத்துக் கேட்டார்கள். எந்த சட்டங்களுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்ததோ அதை பரிசீலனை செய்து அவற்றை அந்த நாட்டின் அரசுச் சட்டங்களாக அமுல்படுத்தினார்கள். 
இது சரியா? தவறா? என்று கூற நாம் வரவில்லை. நாட்டின் சட்டங்களை முடிவு செய்வதில் இந்த முறையைப் பின்பற்றாவிட்டாலும் ஒரு சில காரியங்களில் இவ்வாறு கருத்துக் கணிப்பு கேட்டு முடிவு செய்வதும் அதிக ஓட்டுப் பெற்ற ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. 


அந்த அடிப்படையில் நம் ஊர்வாசிகளின் நீங்காத நெடுநாளைய கனவு புதுப் பள்ளிவாசல் கட்டுவது என்று அறிகிறோம். இதற்கு நம் ஊர் மக்களிடம் எந்தளவு ஆர்வம் உள்ளது? முயற்சி உள்ளது? என்று அறிய நாமும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்த ஆசைப்பட்டோம். இந்த இணைப்பில் சென்று உங்கள் ஓட்டைப் பதிவு செய்யுங்கள். உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும் தாராளமாக கருத்து சொல்லுங்கள். இதில் உங்களுக்கு பூரண உரிமை உண்டு. நன்றி. வஸ்ஸலாம்.

2 கருத்துகள்:

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்