புதியவை

வியாழன், 14 ஜூன், 2012

மண்ணின் மைந்தர்கள்-தொடர் 4



ஆரோக்கியமானவன்-
அடாவடியில்-
ஈடுபடுவதும்!

தெம்பா இருப்பவன்-
வம்பை தேடி-
அலைவதும்!

மலைகளையும்-
குடைந்து விடும்-
எலிகள் கூட்டம்!

பலசாலியவும்-
பலமிழக்க செய்யும்-
கவலை எனும்-
வாட்டம்!

கொள்கை கூட்டம் என-
சொல்லி கொண்டு-
கொள்ளை கூட்டம்-
ஆவதும்!


இந்திய இறையாண்மையை-
'இடித்து' ஒழித்து விட்டு-
இந்தியா ஒளிர்கிறது-
என்பவனும்!

'உரிமையானவர்களை'-
ஒதுக்கி விட்டு-
கள்ள தொடர்புகளை-
தொடர்பவர்களும்!

நெஞ்சை-
நிமிர்த்தி அலைகிறார்கள்-
இந்த ஈன பிறவிகள்!

மனிதத்தின் -
அவலங்கள்!

எனதருமை-
மாற்றுதிறனாலிகளே!

நீங்கள் உடல் -
குறை உள்ளவர்களல்ல!

மாற்று திறனாளிகள்-
செய்திடாத-
சாதனையே இல்லை!

எல்லோருக்கும் வெளிச்சம்-
தரும் மின் விளக்கு!

அதை கண்டுபிடித்த-
எடிசன் காது கேளாதவர்-
என்பதை-
விளங்கு!

'மறைத்த' பின்தான்-
உருவாகும் -
வரலாறு!

சிலபேர்களை -
இடையிலேயே வாரிடலாம்-
இடர்பாடு!

ஆனால் உங்களின்-
விடா முயற்சியினால்-
நீங்கள்-
வாழும் வரலாறு!

சாமானிய-
என்னை போன்றவர்களுக்கு-
நீங்களே!
தன்னம்பிக்கை வேர் !

'வரும்போது'-
பொட்டளவு-
துணி கிடையாது!

'திரும்பா'பயணத்தின்போது-
போர்த்திட-
துணி கிடைக்குமா?-
தெரியாது!

நண்பர்களே!
உங்களுக்காக-
வாழும்காலங்களில்-
பொன்னாடைகள்-
தவம் இருக்கிறது!


என் சொந்தங்களே !
நம் ஊரில்-
பிறந்து!


'இருப்பு'-
ராமேஸ்வரத்தில் -
வசித்து!

பெயரோ-
சம்சு மரைக்கார்!

மடி மேஸ்திரியாக -
இருக்கார்!

உடல் பலம்-
இழந்தாலும்!

உள்ளம் உறுதியுடன்-
இருக்கிறார்-
எந்நாளும்!

தன் பெண்பிள்ளைகளை-
ஒதுக்கிடவில்லை!

'பட்டங்கள்' வரை-
படிக்க வைக்கவும்-
தயங்கவில்லை!

இந்த படிக்காத-
மேதை!

உழைப்பாளி இவரை-
அறிமுகம் படுத்தியதில் -
மகிழ்ச்சியானது-
இந்நாளே!



ப்ரியமுடன்-
சீனி ஷா!

3 கருத்துகள்:

  1. இந்திய இறையாண்மையை-
    'இடித்து' ஒழித்து விட்டு-
    இந்தியா ஒளிர்கிறது-
    என்பவனும்!மனிதத்தின் -
    அவலங்கள்!

    பதிலளிநீக்கு
  2. இது போன்ற திறமையாளர்களை
    அடையாளப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு
    மிக்க நன்றி.
    சீனி.. உங்கள் மூலம்
    நம் வலைதளம்
    மெருகேறிக்கொண்டே இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்