அன்று,
உழைப்பவனின் உழைப்பை
மதிப்பிடத்தான்
பணம்.
இன்று,
உறவுகளின் பாச
அளவீட்டுக் கருவியை
மாறிப் போனது
இந்தப் பிணம்.
முயற்சிக்கு முன்னுரிமை
இருந்தது
அன்று.
அதிஷ்டத்துக்குள் பூமி
மூழ்கிப்போனதால்,
முயற்சிப்பவன் எல்லாம்
மூச்சடைகிறான்
இன்று.
உறவுகளுக்கும்,
உயிரோட்டமில்லை.
முயற்சிக்கும்,
முன்னுரிமையில்லை.
உறவுகளில்
உயிரோட்டம் இருந்தால்,
(இன்று)தாயை
தள்ளிவைக்கமாட்டான் பிள்ளை.
முயற்சியே
முதல் என்றால்,
என்றோ முன்னேரியிருப்பான்.
மீனவனுடன் விவசாயி??
அசாத்தியத்தை
சாத்தியமாக்கி விட்ட உலகம்,
சாத்தியத்தை இன்று
அசாத்தியம் என்கிறது.
தீ
சுட்ட காய வலியை விட,
உலகை நினைத்து எழுதும்
வரியோடு வலிக்கிறது
என் இதயம்.
காகிதத்தில்
கவி கிறுக்குகிறேன்,
கண்டு கொள்பவர்
யாருமில்லை.
குரலை எழுப்பி
கூச்சலிடுகிறேன்,
கேட்பவரும்
அருகிலில்லை.
என் இயலாமையை மறைத்து,
உங்களிடம் ஒப்படைக்கிறேன்?
இவ் வரிகளையும் இவ்வுலகையும்.
புரண்டு போன பூமியை
நிமிர்த்த முயற்சிப்பீர்கள்
என்ற நம்பிக்கையில்.
இஸ்லாமிய கீதங்கள்
2 மாதங்கள் முன்பு
good msg!
பதிலளிநீக்குThank u
நீக்குநல்ல செய்தி மேலும் பல செய்திளை தருக
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குஎப்படி இர்க்க மாப்ள