புதியவை

வியாழன், 7 ஜூன், 2012

உணவக உழைப்பாளியான உள்ளூர்வாசிகளே...

செய்வது-
சில்லறை வணிகம்!

சிதறிடாதது-
உங்களது-
உள்ளம்!

தலை கால்-
தெரியாமல் ,
ஆடுற உலகம்-
நாலு காசை -
'பார்த்த'பின்னாலே!

கொண்ட தொழிலை-
விடலியே-கை நிறைய
காசு -
'பார்த்த பின்னாலே'!

நூலை அசைத்தால்-
ஆடும்-
வானில் பறக்கும்-
பட்டம்!

வேர்களை கொண்ட-
பெரும் மரங்கள்-
நமது அசைப்பினால்-
காணுவதில்லை-
ஆட்டம்!

'கறைகள்' படிந்த-
கைகளுண்டு!

கண்ணாடி குடுவைகளினால்-
கீறல் தான்- உங்கள்-
கைகளில் உண்டு!

'சராமாரியான' பாதிப்பு-
சுழன்று அடிக்கும்-
காற்றினால்!

வயோதிகம் வந்தது-
உங்களுக்கு-
சுழன்ற காலத்தினால்!

நாட்டை ஏய்த்து-
ஏப்பம் விடுபவர்கள்-
வருகிறார்கள்-
பந்தாவாக!

உழைத்து உரமேறிய-
உடலைகொண்டவர்களே-
நீங்களோ இருக்கீங்க-
சாந்தமாக!

நேற்றைய பயணம்-
மிதி வண்டியில்!

இன்றைய-
மதிப்பு பல-
கோடிகளில்!
Ramthev baba

இந்த 'பாபாவுக்கு'-
ஆர்வமாம்-
ஊழலை ஒழிப்பதில்!

இதுபோன்ற -
நாடகங்கள் சாதாரணம்-
நம் நாட்டில்!

உழைப்பாளிகளே-
உங்களுக்கு கண்ணும்-
கருத்தும்-
உழைப்பில்!

உணவில் சிறந்தது-
தன் உழைப்பில்-
உண்பது-நபி மொழி!

உங்களை -
செம்மை படுத்திருக்கும்-
அம்மொழி!

ப்ரியமுடன்!
சீனி ஷா.

2 கருத்துகள்:

  1. நல்ல கவிதை நண்பா.
    தொடருங்கள் உங்கள்
    எழுத்துப் பணியை.
    நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசரத்!
      உங்களுடைய வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்