புதியவை

திங்கள், 18 ஜூன், 2012

மர்ஹூம் உதுமான் கனி பற்றி ஒரு குறிப்பு

 S. உதுமான் கனி
தமிழ் நாட்டின் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள ஒப்பிலான் எனும் ஊரில் 1957ஆம் ஆண்டு பிறந்த திரு உதுமான் கனி, இளம் வயதிலேயே பெற்றோருடன் சிங்கை வந்தார். தெலுக் குராவ் தொடக்கப் பள்ளியிலும், விக்டோரியா பள்ளியிலும் பயின்றார். பின்னர், லண்டன் பல்கலைக் கழகத்தில் பாரிஸ்டர் அட் லா (LL.B. Hons) பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்து தம் சுய முயற்சியில் முன்னேறிய திரு கனி, 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விழாவில் நடுவராகப் பணியேற்றிருந்தபோது காலமானார்.

இலக்கியப் பணி
1977ஆம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய திரு கனியின் முதல் சிறுகதையான `அஸ்தமத்தின் நிர்வாணப் பிரதிபலிப்பு', அதே ஆண்டில் தமிழ் முரசில் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் எழுதிய பல சிறுகதைகள், கவிதைகள், சிங்கை, தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்தன. `இளையவன்' என்ற புனை பெயரிலும் எழுதியுள்ளார். தகவல் கலை அமைச்சு வெளியிட்ட Asean Anthology, நா. கோவிந்தசாமி தொகுத்த `சிங்கப்பூர்ச் சிறுகதைகள்', சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றில் இவரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.




தமிழில் சிறந்த பேச்சாற்றல் கொண்ட திரு கனி, சிங்கைத் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார்.

அஃறிணை உயர்திணை : சிறுகதைகள்
சிங்கப்பூர் : S. Uthuman Ghani Associates, 2002.
RSING 894.811372 UTH


நன்றி:
http://libguides.nl.sg/content.php?pid=341831

மேலும் ஆங்கிலத்தில் இவரைப் பற்றி அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க.

1 கருத்து:

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்