புதியவை

திங்கள், 10 டிசம்பர், 2012

வந்தார் வளந்தவர் மீண்டும்..

ஒப்பிலானுக்கு வந்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் ஒரு தொழுகை அழைப்பாளர்.
((المؤذنون أطول الناس أعناقاً يوم القيامة)) رواه مسلم
நபி (ஸல்) கூறினார்கள்:
நாளை மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் (முஅத்தின்கள்) காணப்படுவார்கள்.’'  ( நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-631) 
இந்த ஹதீஸிற்கு பல்வேறு விளக்கங்களை அறிஞர் பெருமக்கள் தந்துள்ளனர். அதில் ஒன்று:
மறுமையில் அவர்களுக்கு வழங்கப்படும் மலைபோன்ற நன்மைகள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அதை அவர்கள் எட்டி எட்டி பார்ப்பர்கள் இந்த நிலையைத்தான் கழுத்து நீண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 
இப்பொழுது நம் ஊரில் பணிசெய்துகொண்டிருக்கும் முஅத்தினுக்கு எட்டி எட்டிப் பார்க்கவேண்டிய கஷ்டமெல்லாம் இருக்காது என்று நினைக்கிறேன். ஆல்ரெடி கழுத்து நீளம்தான். 
யார் அவர்? கொஞ்சம் யோசியுங்கள் பார்க்கலாம். அட.. நீங்க நெனச்சது சரிதான்..ஏறகனவே இருந்துவிட்டு சிங்கை சென்று மீண்டும் வந்திருக்கிற அதே முஸ்தகீம்தான். நூருல் முஸ்தகீம்.
ஒப்பிலானிலேயே இப்பொழுது இவரது உயரத்திற்கு ஆள் கிடையாது. 
பாங்கு சொல்லும் மைக் ஸ்டாண்டை முழுவதுமாக உயர்த்திய பிறகும் சற்று குனிந்துகொண்டுதான் இவர் பாங்கு சொல்லவேண்டியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். உயரமாக இருப்பதினால் சுவரில் இருக்கும் பள்ளியை சுலபமாக அடிப்பதில் வல்லவர். ஆனால் குணத்தால் ரொம்ப நல்லவர்.

வியாழன், 6 டிசம்பர், 2012

வெளிச்சம்!

"இருந்ததை"-
இடித்தார்கள்!

"இல்லாததை-"
இருக்குது-
என்கிறார்கள்!

அரசே-
கமிசன்கள்-
அமைத்தார்கள்'

உலக சாதனைக்கு-
பதியலாம்-
அத்தனை-
தவணை -
நீட்டிப்புகள்!

அக்கமிசன்-
சொன்ன-
முக்கிய -
குற்றவாளிகள் மேல்-
பாய மறுக்குது-
வழக்குகள்!

அப்போ-
எதற்கு-
நடத்திட-
உத்தவு-
பிறப்பிக்கணும்-
கமிசன்கள்!

தெரியாமல்-
நடந்தால்-
விபத்தினால்-
மரணம்!

அனைவரும்-
பார்க்க-
நடந்ததுவோ-
அக்கிரம-
கொலைவெறியாகும்!

எல்லோரும்-
பார்க்க!

அரசுகளும்-
மௌனிக்க!

பாதுகாப்பு-
படைகளும்-
கண்ணை-
மூடி கொண்டிருக்க!

நடந்து-
முடிந்தது-
அச்சம்பவம்!

குத்தி-
கிழித்து-
தொங்கி கொண்டிருக்கிறது-
மதசார்பற்ற நாடு-என்ற
சொல்லாகும்!

உலகே-
தேசத்தை-
அகிம்சை-
பூமி-
என்றது!

இல்லை-
இனி-
அடாவடி பூமி-என
இச்செயல்-
சொல்லி சென்றது!

"மாட்டிறைச்சி -
சாப்பிடுவதை-
நிறுத்தி விடு-
இம்மக்கள் -
மாடுகளை-
புனிதமாக-
கருதுகிறார்கள்-என
தனயன்-
ஹுமாயுனுக்கு-
அறிவுறுத்திய-
பாபரே!

புனிதமாக-
மதிப்பதை கூட-
தவிர்க்க சொன்ன-
நீயா!!

அம்மக்கள்-
உயிராக
மதிக்க கூடிய-
வழிபாட்டு தளத்தை-
இடித்திருப்பாயா!?

அதில்-
வேறொரு -
வழிபாட்டு தளத்தை-
எழுப்பிருப்பாயா!!?

சந்தேகம்-
இல்லாமலில்லை!

உண்மை-
உறங்கியே-
கிடைப்பதில்லை!

விழுந்த-
கடப்பாரை-
இறை இல்லத்தில்-
மட்டும்-
இல்லை!

இறையாண்மையின்-
இதயத்திலும்-
விழுந்த இடி-என்பதை
மறுப்பதற்கில்லை!