புதியவை

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உயர்ந்த தலைவர் உமர் கத்தாப்

oppilan

ஒப்பற்ற ஒப்பிலானின்
அப்பழுக்கற்ற மண்ணின் மைந்தர்!
பிறந்த மண்ணிலும் -தற்போது
இறந்த மண்ணிலும்
சிறந்த மனிதராய்த்
திகழ்ந்த புனிதர்

இறைவழியில் இன்முகத்துடன்
பெருந்தொகையை அள்ளித் தரும்
பெருந்தகை !

பள்ளி கட்டுவதற்கு
அள்ளித் தந்தவர் -புதிய
பள்ளி கட்டுவேன் என
சொல்லிச் சென்றவர்!

அறிஞர்கள் என்றால்
அவ்வளவு பிரியம்!
பழகிப் பார்த்தோருக்கு
 நன்றாகவே புரியும்!

சொந்த ஊர்
வந்த ஊர்
எந்த ஊரிலும்-இவர்
தந்த தீர்ப்புக்கு
தலைவணங்குவோர் ஏராளம்!
தீராத சிக்கல்களும்
தீரும் இவர் மூலம் !

கையில் குடையோடு
மிடுக்கு நடையோடு
பளிச்சென்ற உடையோடு
அவர் வருகின்ற
அழகு...அப்பப்பா!

அந்த கம்பீர கலங்கரை விளக்கு-இன்று
காணாமல் போனதே..
அந்த அகழ் விளக்கு -இன்று
அணைந்து விட்டதே!

இனி-
எப்ப்டி கிடைக்கும்
இப்படி ஒரு தலைமை ?
அப்படியே கிடைத்தாலும்
முறைப்படி இவர்தான்
அதற்கும் முதன்மை !

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஜனாப் உமர்கத்தாப் வபாத்

தகவல் : Shanavas Abdul Kader (singapore ) 

ப்பிலான் முன்னாள் ஜமாத் தலைவர்
ஜனாப் உமர்கத்தாப் அவர்கள் சிங்கப்பூரில்
வபாத்தாகிவிட்டார்கள் (17-08-2013 சனிக் கிழமை)
1981 ல் I O B கிளை ஒப்பிலானில் துவக்கம் 

  • எங்கள் ஊரின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் காரணியாக திகழ்ந்தவர்
  • மேக்ஸ்வெல் அங்காடிக்கடைத்தொகுதியில் புகழ் பெற்ற உணவுக்கடை 
  • மார்க்க அறிஞர்களுடன் நட்பு என்று ஒப்பிலானின் அடையாளமாக இருந்தவர்
  • ஒரு சிறு கிராமத்தில் தேசிய வங்கியை
    • துவங்க என்னை ஊக்குவித்து வழி நடத்திய 
    பெரு ந்தகையாளர்

அவருடைய மறைவு பேரிழப்பு அவரின் புதல்வர்கள் மற்றும்
உறவினர்கள் அணைவருக்கும் ஆழ் ந்த
அனுதாபங்கள்.


                                       இப்படிக்கு 
                      ஷா நவாஸ் அப்துல் காதர் சிங்கை 

திங்கள், 15 ஜூலை, 2013

பரவசத்துடன் நடந்த பட்டமளிப்பு விழா

அல்ஹம்து லில்லாஹ் !
அல்லாஹ்வின் கிருபையால்
கடந்த 30 ந் தேதி நம் ஒப்பிலானில் ''முபல்லிகா'' பட்டமளிப்பு விழா விமரிசையாக நடந்து முடிந்தது .

11 மாணவிகள் பட்டம் பெற்ற இவ்விழாவைக் காண நம் ஊரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் அணிஅணி யாய்த திரண்டிருந்தனர்

மாணவிகளின் சார்பில் அவர்களது உறவினர்கள் பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர்
அப்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்கள் இதோ உங்களுக்காக !