புதியவை

திங்கள், 30 ஜூலை, 2012

யார் பிணங்கள்....!?கும்பகோணத்தில்-
கொடூர சம்பவம்-
நடந்தேறியது!

ஒரு "பூவின்" மீது-
பேருந்து-
ஏறி இறங்கியது!

"தீர்ப்பு" சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகள்-
எரிப்பு!

"கருத்து கணிப்பு"-
வெளியிட்டதுக்கு-
ஊழியர்களோட-
எரிப்பு!

இத்தகைய தொண்டர்கள்-
கொண்ட கட்சிகள் -
மாறி மாறி ஆளும்-
அரசியல் நடப்பு!

"ரத்த யாத்திரை"-
புகழ்!

"ரத்த காட்டேரி"-
புகழ்!

"இதுகளுக்கு"-
நாட்டை ஆளும்-
ஆசைகள்!

கணிக்கலாம்-
இவ்வாறு-
யாரால் நடந்தது-
அதிக கொலைகள்!

அவருக்கே கொடுக்கலாம்-
"சீட்டுகள்"!

யாரோ செய்த பாவத்திற்கு-
யாரையோ கொல்லும்-
பாவிகள்!

ஆயிரக்கணக்கில்-
கொலைகள் "பார்த்தும்"-
பதவி ஆசைகொண்ட-
படுபாவிகள்!

எத்தனை-
போலி தாக்குதல்கள்!

உயிர் போன பிறகே-
விசாரணைகள்!

இருந்தது-
முள்ளி வாய்க்காலாய்!

மாறியது-
கொலைகளின் கால்வாயாய்!

காஷ்மீரத்து மக்கள்-
காட்டு மிராண்டி-
அடக்குமுறைகள்!

ஆண் பெண்-
நட்பை பயன்படுத்தி-
"நாசம்"செய்யும்-
நாய்கள்!

பெண்களின் அங்கங்களை-
படம் பிடித்து-
பகிர்ந்து கொள்ளும்-
கொடூரர்கள்!

உலகில் -
பசி தெரியாமல் -
சில நூறு பேர்கள்!

உணவே -
தெரியாதவர்களோ-
பல கோடிகள்!

அகிலத்தில்-
அறிவியல் வளர்ச்சிக்கு-
பஞ்சமில்லை!

அன்புக்குத்தான்-
இடமில்லை!

அணு குண்டுகளுக்கோ-
குறைவில்லை!

இத்தனையவும் பார்த்து -
உணர்வற்று இருப்பவர்கள்-
உயிருள்ளவர்களா!?

உணர்ச்சியற்று-
உணர்வற்று கிடக்கும்-
நாங்கள் பிணங்களா!?

இப்படியெல்லாம்-
கேட்பவர்கள்!

மயான காட்டில்-
அநியாயமாக கொல்லப்பட்டு-
"அடக்கப்பட்டவர்கள்!"

ப்ரியமுடன்-
சீனி ஷா.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

யார் கொடுப்பது...!?இருக்கும் ஒரு மிடறு-
தண்ணீரை அடுத்தவருக்கும்-
பகிர்ந்து அருந்துபவனுக்கு!

நதி நீரை-
கடலில் விட்டாலும்-
அண்டை மாநிலத்துக்கு-
கொடுக்க மறுக்கும்-
அழிச்சாட்டிய காரர்களுக்கு!

சில பல காரணங்களால்-
பேசாமல் இருந்தும்-
மனதார நேசிப்பவர்களுக்கும்!

வாய் கிழிய வாழ்த்தி விட்டு-
மனதுக்குள்-
புழுங்குபவர்களுக்கு!

அட்டூழியங்கள் செய்து கொண்டு-
ஆட்சி கட்டிலில்-
அலங்கரிப்பவர்களுக்கு!

அநீதி இழைக்கபட்டவன்-
நீதி கிடைக்காமலே-
இறப்பவர்களுக்கு!

அநாதை சொத்தை ஆட்டையவும்-
அவர்கள் சோத்தில் மண்ணள்ளி-
போட்டவர்களுக்கும்!

அனாதைகளிடம்-
ஆதரவாக நடந்தவர்களுக்கும்!

கோள் மூட்டி-
பல உறவுகளை-
பிரித்தவர்களுக்கு!

பிறர் மீது தவறிருந்தும்-
உறவுகள் பிரிந்திட கூடாதுன்னு-
"அதை"தாங்கி கொண்டவர்களுக்கு!

கடன் கேட்கும்போது-
அலையா அலைந்து-
கேட்க போனவனை-
அடிக்க முயல்பவனுக்கு!

வாங்கிய கடனை-
கட்ட முடியலையே-
மனம் குமுறுபவர்களுக்கு!

கட்டியவளை-
கண்ணியத்துடன்-
நடத்துபவர்களுக்கு!

கண்ணியம் எதற்கு-
கட்டியவளுக்கு-என
நடப்பவர்களுக்கு!?

நியாயவான்களுக்கு-
நியாயமும்-
அநியாயகாரனுக்கு-
தண்டனையும்-
கொடுக்க அதிகாரம்-
உலகில் யாருக்கு-
இருக்கு!?

நிச்சயமாக-
சத்தியமாக-
ஒரு நாள்-
படைத்தவனிடம்-
நியாயமான -
தீர்ப்பு இருக்கு!


ப்ரியமுடன்
சீனி ஷா.
சனி, 28 ஜூலை, 2012

பக்கத்து வீடு...உற்றத்தாரும் ,சுற்றத்தாரும்
இருக்கலாம்-
ஊரளவு!

பரிதவிப்பின்போது-
ஓடி வருவது-
பக்கத்து வீடு-
உறவு!

"மூத்தவர்கள்"-
முக சாயலை வைத்து-
சொல்லி விடுவார்கள்-
இன்னாரென்று!

இளையர்கள்-
பக்கத்து வீட்டுக்காரன் -
பெயர் கூட தெரியாமல்-
இருக்கிறார்கள்-
இன்று!

கண்டம் விட்டு-
கண்டம்-
நேசம் கொள்கிறார்கள்!

அண்டை வீட்டுக்காரனுடன்-
சண்டை செய்கிறார்கள்!

எண்களை அழுத்தினால்-
பல மையிலுக்கு அப்பாலும்-
உடனடி தொடர்பு!

பக்கத்துல இருப்பவர்களிடம்-
பல வருட துண்டித்து போன-
உறவு!

அன்றைக்கு -
அக்கம் பக்கமே-
அன்புக்கு பிரதானமானது!

இன்றைக்கு -
"நிழல்" உறவுகளுக்கு-(சீரியல்)
எந்நேரமும் கண்ணீர்வடிப்பது!

தகப்பனுக்கு-
ஒன்னு!

தாயிக்கு-
ஒன்னு!

பிள்ளைக்கு-
ஒன்னு!

ஆளுக்கொரு-
தொலை காட்சி!

உறவுகளோ-
பாழா போச்சி!

இதுல எங்கே-
இவர்கள் வாழ-
பக்கத்துக்கு வீட்டாரையும்-
நினைச்சி!?

அன்று-
விசேசமா சமைத்தாலும்-
பக்கத்துக்கு வீட்டுக்கும்-
சேர்த்து சமைப்பார்கள்!

இன்று-
அற்ப விசயங்களுக்கும்-
பேசாமல் இருக்கிறார்கள்!

அண்டை நாடுகளுடன்-
பிரச்னை-
ஆயுத குவியலுக்கு-
உதவும்!

அண்டை வீட்டாருடன்-
சண்டை-
"வறட்டு" எண்ணங்களுக்கு-
வழி வகுக்கும்!

"அண்டை வீட்டாருக்கு-
காற்று வராதபடி-
சுவர்களை எழுப்பாதீர்கள்!

அண்டை வீட்டார்-
பசியோடு இருக்கையில்-
தான் மட்டும் வயிறு முட்ட-
தின்பவன்-என்னை சார்ந்தவன்
அல்ல-"
நபிகளார் சொன்னது!

இன்ன மதம்-
இன்ன இனம்-என
சொல்லிடாதது!

ஆதலால்-
இனம் ,மதம்,
மொழி கடந்து-
பக்கத்துக்கு வீட்டாருடன்-
பரிவோடு நடப்பது-
நன்மை பயக்கவல்லது!

ப்ரியமுடன்-
சீனி ஷா.வெள்ளி, 27 ஜூலை, 2012

மண்ணின் மைந்தர்கள் -தொடர் 7தேடல்-
தொடங்கியது!

சில-
கிராமங்கள்-
அடங்கியது!

சிலர்-
முறைத்தனர்!

பலர்-
வரவேற்றனர்!

பெயர்கள்-
கேட்கப்பட்டது!

உடல் அளவுகள்-
எடுக்கப்பட்டது!

தேதிகள்-
குறிக்கப்பட்டது!

அந்நாளும்-
நெருங்கியது!

"ஆட்களை"-
வாகனம்-
இறக்கியது!

புது ஆடைகள்-
அணிந்தனர்!

முகங்கள்-
மலர்ந்தனர்!

காணப்பட்டனர்-
ஒட்டிய தேகத்துடன்!
அதிக வாட்டத்துடன்!

ஆம்-
அவர்கள்-
ஏழைகள்!

"அழைத்தவர்களும்"-
இல்லை-
செல்வமிக்கவர்கள்!

பசியை அறியாதவன் அதன் -
பரிதவிப்பை அறியமாட்டான்!

வஞ்சகம் கொண்ட நெஞ்சன்-
வாஞ்சையுடன் நடக்க மாட்டான்!

தொடங்கியது-
ஊர்வலம்!

முடிவுற்றத்கு-
பள்ளிவளாகம்!

ஒவ்வொரு பெயராக-
வாசிக்கப்பட்டது!

வந்த சிறவர்கள் மனம்-
சந்தோஷ பட்டது!

பெயருள்ள சிறுவன்-
அழைத்து செல்லப்பட்டான்!

அழுது கொண்டே-
திரும்பி வந்தான்!

காரணம்-
விருத்தசேனம்(சுன்னத்)-
செய்யபட்டான்!

வந்தவர்கள்!
அழைத்தவர்கள்!
உள்ளூர் சொந்தங்கள்!

அன்போட பகிர்ந்து கொண்டு-
அரவணைப்பாக-
விருந்துண்டார்கள்!

நேரம்-
கடந்தது!

வாகனம்-
வந்தது!

சிரித்து வந்த-
பாலகன்கள் அழுது கொண்டு!

தாயோட ஒட்டி கொண்டு!

தகப்பன்மார்கள்-
வந்த கண்ணீரை -
மறைக்க முடியாமல்!

நானும் நண்பர்களோட-
வந்து சென்ற உறவுகளை-
மறக்க முடியாமல்!

பிறப்பதற்கு முன்-
தந்தையை இழந்தார்!

பிறந்து பின்னாட்களில்-
தாயை இழந்தார்!

"மறைவதற்கு" முன்-
உலகம் மறையுவரை-
மனித மனங்களை-
வென்றார்!

ஏழையாக-
வாழ்ந்தார்!

எழைகளுடனேயே-
வாழ்ந்தார்!

அவர் அரியணைகளில்-
அமர்ந்திடவில்லை!

அமர்ந்த இடங்களெல்லாம்-
அரியணையாகியது!
முஹம்மது மேத்தா(கவிஞர் மு.மேத்தா)
சொன்னார்!

அவர்தான்-
மலையளவு பகை கொண்டவர்களிடையே-
மனிதத்தை வளர்த்த-
நபிகள் பெருமானார்!

என்னருமை!
சொந்தங்களே!

ஏழைகளும்-
நம் மனித உறவுகளே!

குறைந்த பட்சம்-
ஒரு ஏழைக்காவது-
உதவுங்களேன்....!

சிறு முயற்சியாக -
தொடங்கியது!

பத்து வருடங்களாக-
நீடிக்கிறது!

சிறு நண்பர்கள்கள்-
வட்டமானது!

அல் முபீன் தப்ஸ் குழு-
என்பது!

யா அல்லா!
எங்கள் பணியை பொருந்தி-
கொள்வாயாக!

கடைசி காலம் வரை-
தொடர்ந்திட செய்வாயாக!


ப்ரியமுடன்-
சீனி ஷா.


புதன், 25 ஜூலை, 2012

நோன்பு கஞ்சி.....வரிசையாக வைக்கப்பட்ட-
நான்கு அடுப்புகள்!

கழுவி கொவுத்தி-
வைத்திருக்கும்-
சட்டிகள்!

ஒரு பக்கம்-
தேங்காய் திருக-
ஒரு கூட்டம்!

பூண்டை தோல் -
உரிக்க ஒரு-
கூட்டம்!

அரிசியை ஓட்டை-
போட்டு -எடுத்து செல்லும்
எலி கூட்டம்!

சிறு உதவிகளுடன்-
அன்றைக்கு உதவும்-
இளையர்கள்!

டேய் !-
மாப்ள!-
மருமகனே!-என
உறவு முறையுடன்-
கூப்பிடும்-
பெரியவர்கள்!

தெரிந்து செய்த-
தப்புகளுக்கு-
கிடைக்கும் பெரியவங்க-
திட்டுகள்!

அதே வயது ஒத்தவர்-
"ஏன்பா!? சின்ன பசங்கள-
திட்டுறே"!என கிடைக்கும்
ஆதரவுகள்!

திட்டுகள் நமக்கு-
ஒன்றும்-
புதிதில்ல!

அதைபற்றியெல்லாம்-
கவலை பட்டதே-
இல்லை!

ஆதரவா சொன்ன-
வார்த்தையாலே!

எங்கோ உரைக்கிறது-
பட்ட மிளகாய்-
கடித்தது போல!


உதிரும் இலைகள்-
முளைப்பதுண்டு-
கிளைகளிலே!

"உதிர்ந்த "உறவுகள்-
திரும்புவதில்லை!-
இவ்வுலகிலே!

"மறைந்த "உறவுகளை-
நினைக்கையிலே!

கண்களோ குளிக்கிறது-
கண்ணீரிலே!

இரண்டு சட்டி கஞ்சி-
ஊரில் வாங்கிட -
வருபவர்களுக்கு!

மற்ற இரண்டும்-
பள்ளியில் நோன்பு-
திறப்பவர்களுக்கு!

மாலை நேர-
வேலை-
தூக்கு சட்டியுடன்-
குழந்தைகள்!

தூக்கு சட்டிய தூக்கியவர்களை-
தூக்கி கொண்டுவரும்-
"வாப்பாக்கள்"!

அந்தி பொழுதும்-
வந்தது!

வரிசையாக வைக்க பட்ட-
நோன்பு கஞ்சிகளுடன்-
குண்டாளங்கள்!

அதன் அருகில்-
வைத்திருக்கும்-
பேரீத்தம் பழங்கள்!

பிரயாணத்தில்-
இருந்தவர்கள்!

வியாபாரம் செய்ய-
வந்தவர்கள்!

பெரிவர்கள்!
சின்னவர்கள்!

அவர்களுக்கு பிடித்த-
இடங்களில் அமர்ந்தார்கள்!

யாரையும் "ஒதுங்கிட"-
சொல்லவில்லை!

அந்த உரிமை-
எவருக்கும் இல்லை!

இறைவா!
உன்னுடைய உணவை கொண்டே-
என்னுட நோன்பை திறக்கிறேன்-
என்னிடம் இருந்து ஏற்றுகொள்வாயாக!
என்பதை அரபியில்-
சொல்லப்பட்டது!

அதனை அனைத்து-
வாய்களும் சொல்லியது!

பேரீத்தம் பழங்களை-
தின்றார்கள்!

கஞ்சிய -
குடித்தார்கள்!

எனக்கோ தோன்றிய-
சில எண்ணங்கள்!

பார பட்சம்-
காண கூடாதுன்னு-
பள்ளி சீருடை!

பாகு பாடு இல்லாம-
நோன்பை திறக்கவா!?-
நோன்பு கஞ்சி முறை...!!!?

கஞ்சி இதமான-
சூட்டுடன்-
தொண்டையில்-
இறங்கியது!

எல்லோர் பசியை போக்க-
கஞ்சி காய்ச்ச உதவியதை-
எண்ணுகையில்-
மனதின் ஓரத்தில்-
இனித்தது....!!

ப்ரியமுடன்-
சீனி ஷா

செவ்வாய், 24 ஜூலை, 2012

நோன்பு காலங்களில்...ஊரு உலகமெல்லாம்-
சுற்றி வருவேன்!

உறங்க மட்டுமே-
வீடு வருவேன்!

மழையில் நனைந்த-
கோழியை போல-
"குன்னி" கொண்டு-
உறக்கம் கொள்வேன்!

தாயே-
பனி பெய்யும் காலத்திலும்-
கோழி ஆனமும்-
கொத்து பரோட்டாவும்-
வாங்கி வருவாள்!

"எந்திரிச்சி "வந்தால்-
என்ன !?-
கேட்டவர்கள் எத்தனையோ!

"எந்திரிச்சி" போடா-என
இதுவரை சொல்லாதவள்-
என்தாயே!

மற்றவர்களுக்கு-
நான் "எப்படியோ"-
தெரிகிறேன்!

பெற்ற தாயிக்கோ-
இன்னும் குழந்தையாகவே-
நான் தெரிகிறேன்!

தாயே-
உன் பாசத்துக்கு-
ஈடு கெட்ட என்னால்-
முடியுமா!?-
தெரியல!

உன்னை மனம்-
நோகாமல் வைத்து கொள்ள-
முடியுமான்னு-
எனக்கு தெரியல...!!!
---------------------------
சரிவர கட்டாத-
கைலியுடன்-
வரும் பாலகன்!

நச்சரிப்பு தாளாமல்-
சில்லறை எடுத்து கொடுக்கும்-
அப்பன்!

வாங்கிய காசை-
விறு விறு என பொய்-
யாசகரிடம்-
கொடுக்கிறது-
பிஞ்சு கைகள்!

கண்டும் காணாமலும்-
கடந்து போனவர்கள்-
எத்தனையோ பேர்கள்-
மத்தியில்!

"பொடி பயல்"-என
நான் நினைத்தவன்!

என்னையவும்-
வெட்கித்து-
தலை குனியவைத்தவன்!

ஆம்-
கடந்து போனவர்களில்-
நானும் ஒருவன்!


ப்ரியமுடன்
சீனி ஷாதிங்கள், 23 ஜூலை, 2012

தினம் ஒரு ஹதீஸ் - 19

உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர்கள் விடுபட்ட நோன்புகளை மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்க வேண்டும்                            அல் குர் ஆன் - 2: 185

முடிந்தளவாவது....தின்ன முடியாமல்-
திணறுபவர்கள்-
ஒரு பக்கம்!

பசியால்-
பரிதவிப்பவர்கள்-
மறுபக்கம்!

ஆயிரம் கழிவறை கொண்ட-
மாடி உள்ள-பங்களா
சொந்தம் ஒருவனுக்கு!

ஆயிரம் பேருக்கு -
ஒரு கழிவறை வீதம்-
இல்லை-
பலபேருக்கு!
உடலில் உள்ள கொழுப்புதனை-
தின்னு கொள்ளும்-
பசியால் உடம்புகள்!

உயிரையே பசியினால்-
இழக்கும் -
எத்தனையோ உடல்கள்!

உலகமெல்லாம் காண-
முடிகிறது -
பிறந்த மண்ணை விட்டு-
விரண்டோடிய மக்களை!

ஆனாலும்-
நாகரிக உலகம் என-
சொல்லிட நமக்கும்-
வெட்கம் இல்லை!

எல்லா "சத்தும் " கூடி-
மாத்திரை போடும்-
ஒரு கூட்டம்!

எந்த ஊட்ட சத்தும்-
இல்லாமல்-
மடியும் இன்னொரு கூட்டம்!

மானம் மறைக்க -
ஆடை வாங்க -
பணம் இல்லாமல்-
எத்தனையோ-
பெண்கள்!

பணத்துக்காக ஆடை-
களையும்-
எத்தனையோ-
"கேவலங்கள்"!

விலங்குகளை-
காப்பாற்ற எத்தனை-
விழிப்புணர்வுகள்!?

மனிதனையும் -
காப்பாற்ற நம்மால் ஆனா-
உதவிகளை செய்யுங்கள்!

பெருமானார் மொழி-
படைப்புகளை நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!

"இருந்ததையெல்லாம்"-
தானம் செய்தார்கள்-
நம் முன்னோர்கள்!

"முடிந்தளவாவது"-
தானம் செய்யலாமே-
இன்று-
பூமியில் "இருப்பவர்கள்!"

ப்ரியமுடன்-
சீனி ஷா.

சனி, 21 ஜூலை, 2012

துண்டிக்க வேணாம்...!வந்த-
"வழியும்"!

தங்கிய-
"அறையும்"!

பால்கொடுத்த-
மார்பும்!

வளர்த்த -
சொந்தங்களும்!

அமுதூட்டிய -
கைகளும்!

பாசம் தந்த-
மனங்களும்!

எல்லாமே -
ஒண்ணுதான்!

பெற்ற பிள்ளைகளிடமோ-
குணநலன்களோ-
வேறுதான்!

நம்மோடு பிறந்து-
வளர்ந்தவர்களிடமே -
"மாறு பாடுகள்"-
என்றால்!

வரும் மருமகள்-
நம்மை போலவே-
எப்படி இருப்பாள்!?

அவள்-

பிறந்ததும்!

வளர்ந்ததும்!

பழக்க வழக்கமும்!

பேச்சு முறையும்!

வேறு பாடாக-
இருந்திருக்கும்!

இரு வேறு-
உறவுகள்!

எப்படி உடனே-
காண முடியும்-
மாற்றங்கள்!

"வந்தவள்"-
வீட்டுக்கு வந்த-
வேலைக்காரி அல்ல-
அவள்!

வாழ வந்த-
வம்ச விருத்திக்கு வந்த-
உறவு அவள்!

கணவன் -
மனைவிகளுக்கிடையே-
பிரச்சனைகள்-
குறைவு!

"இவர்களின்"உறவுகளுக்கிடையே-
பேராசைகள்தான்-
நிறைவு!

"உங்கள் "குடும்பங்களின்-
பேராசையால்!

வாழ வேண்டிய-
இரு உள்ளங்கள் வாட வேண்டுமோ-
நிராசையால்!

ஊரான் பிள்ளையை-
"ஊட்டி"வளர்த்தால்-
தன் பிள்ளையை-
"கொடைக்கானல்"வளர்க்குமா!?-என
கேட்க கூடாது!

கர்பவதியான-
மருமகளை-
ஊட்டி வளர்த்தால்-
அவள் வயிற்றில் உள்ள-
நமது உயிர் வளர்வதை-
மறந்திடலாகாது!

வாழ்வில் இரணம்-
கூடிடவும்!
ஆயுள் கூடிடவும்-
உறவுகளுடன்-
சேர்ந்து வாழுங்கள்!
நபி மொழியே!

இதை விட -
எந்த வார்த்தைகள்-
எழுதி உறவின் மேன்மையை-
நான் மொழிய..!!?

ப்ரியமுடன்-
சீனி ஷா.

தினம் ஒரு ஹதீஸ் - 18

(நோன்பு நோற்றிருக்கும்) ஒருவர், மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும். ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்                 நூல் ; புகாரி ; 1933

வெள்ளி, 20 ஜூலை, 2012

தினம் ஒரு ஹதீஸ் - 17

யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்                அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி)                 நூல் : புகாரி ; 37

நீங்க ஆளுங்க....!!போராட்டமாக-
தெரிந்தது-
தாய் மொழிக்கு!

பெரும் போராட்டமானது-
பிணை கிடைக்க-
மகள் "மொழிக்கு"!

கருணையில கூட-
விடுவிக்கல-
சிறுபான்மை கைதிகளை!

ஏறெடுத்து கூட-
பார்க்கல -அவர்கள்
கண்ணீர்களை!

"திகாரின்" முன்னால்-
காண முடிந்தது-
கலங்கிய கண்களை!

நாட்டு மக்களே-
குடும்பம்-
என்றவர்கள்!

குடும்பத்துக்கே-
நாடு-
என்றானார்கள்!

ஆட்சியோ-
இல்லையோ-
போயிடுவாங்க-
கொட நாடு!

மின்சாரம்-
இல்லாமலும்!

விலைவாசி-
உயர்வாலும்!

தமிழ் நாடே-
நீ!-
வாடு!

படித்த மக்கள் வேலை-
டாஸ் மாக் கடையிலே!

படிக்காதவர்கள்-
நிறுவகிக்கிரார்கள்-
கல்லூரிகளை!

"அவர்கள்" விற்றதை-
அரசு -
விக்கிறது!

அரசு-
நடத்தியதை-
"அவர்கள்"நடத்துகிறார்கள்!

கம்பீரத்துடன்-
கடன் பெறலாம்-
மாணவர்கள்!

சொல்கிறார்கள்-
அதிகாரத்தில்-
உள்ளவர்கள்!

வட்டிக்கு மேல-
வட்டியை போட்டு-
மாணவன் வாழ்வையும்-
சூனியமாக்கிடுவார்கள்!

வலிய வலிய-
கடன் கொடுத்த-
ஐரோப்பா நிலை-
என்னாச்சி!?

பொருளாதார-
மந்ததுல-
விழுந்தாச்சி!

நம்ம நாட்டு கதி-
என்னாகும்-
அண்ணாச்சி!?

கொடுக்குற மாதிரி-
கொடுப்பீங்க!

பிடுங்குற மாதிரி-
பிடுங்குவீங்க!

அதுல ஒரு-
உதாரணம்!

விவசாய கடன்-
தள்ளு படி!

ஏன் விவசாயிகள்-
தற்கொலைகள் தெரியவில்லையே-
நின்றபடி!?

மக்கள் நாங்க-
அதெல்லாம்-
மறந்துருவோம்ங்க!

நீங்களே!
"மாறி மாறி-
ஆளுங்க!!

ப்ரியமுடன்-
சீனி ஷாவியாழன், 19 ஜூலை, 2012

பயணிகள்....வறுமையானவர்கள்!
செழுமையானவர்கள்!

பங்களாவாசிகள்!
பரதேசிகள்!

கல்விமான்கள்!
கல்லாதவர்கள்!

நியாயத்திற்காக -
செத்தவர்கள்!

நியாயத்தை-
சாகடித்தவர்கள்!

வள்ளல்கள்!
வழங்காதவர்கள்!

உத்தமர்கள்!
ஊதாரிகள்!

எழுதி -
எழுச்சி பெற-
செய்தவர்கள்!

எழுத்தில்-
விஷ அம்பை-
எய்தவர்கள்!

பொன்னானவர்கள்!
மண்ணா போனவர்கள்!

ஆண்ட மக்கள்!
அடிமை மக்கள்!

ரத்தம் பார்த்து-
துடித்தவர்கள்!

ரத்தம் பார்க்க-
துடிப்பவர்கள்!

பேச்சில் -
விளாசியவர்கள்!

"விளாசியதில்"-
மூச்சை நிறுத்தியவர்கள்!

மலை போல்-
நிமிர்ந்தவர்கள்!

மழை போல்-
விழுந்தவர்கள்!

பசிக்கு-
புசித்தவர்கள்!

புசிக்கவே-
சுவாசிக்கிறவர்கள்!

எத்தனை பேர்-
வரவு!

அத்தனை பேரும்-
செலவு!

"போனவர்கள்"-
வந்தவர்கள்!

"போக போகிறவர்கள்"-
"இருக்கிறவர்கள்"!

"வர போகிறவர்களும்"-
"போகிறவர்கள்"!

மண்ணிலிருக்கும்-
நீர் ஆவியாகிறது!

விண்ணிலிருந்து-
அதுவே-
மழையாகிறது!

இது ஒரு-
சுழற்சி முறை!

நல்லதும்-
கேட்டதும்-
தலை தூக்குவது-
உலகின் நிலை!

இன்று-
கருதிடபடுகிறார்கள்!

"இப்படிதான்"-
வாழனும் -என்பவர்கள்!
அறிவீனர்களாக!

"எப்படியோ"-
வாழ்ந்தால் சரி-என்பவர்கள்
அறிவாளிகளாக!

ஒண்ணுதான்-
நகர பேருந்தும்!
நம் வாழ்வும்!

"எங்கிருந்து புறப்பட்டோமோ"-
"அங்கேயே சேர்கிறோம்!"

பரிசோதனையாளர்-
சோதிக்கையில்-தெரியும்!
யாரிடம் பயண சீட்டு-
இல்லை- என்று!

இறப்புக்கு பின்தான்-
தெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!


ப்ரியமுடன்-
சீனி ஷா.
புதன், 18 ஜூலை, 2012

தினம் ஒரு ஹதீஸ் - 16

(அல்லாஹ்) அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்கு செவியையும், பார்வையும் உள்ளத்தையும், ஏற்படுத்தினான். (நீங்கள்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்                அல் குர் ஆன் - 67:23

செவ்வாய், 17 ஜூலை, 2012

தினம் ஒரு ஹதீஸ்-15

பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள் பிறையைப் பார்க்காமல் நோம்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்படடால் (முப்பது நாட்களா) எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்                           அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)                     நூல் ; புஹாரி 1906

"நடந்திடும்" கவிதை....!சிரிப்பதும்-
அழுவதும்!

அழுவதற்கு முன்-
சிணுங்குவதும்!

தூக்கிட அழைத்திடும்போது-
தாயோட ஒட்டிகொள்வதும்!

அவசரகதியில் செல்லும்போது-
தூக்கிட சொல்லி-
கை அழைக்கும்போது!

பிஞ்சு விரல்களால்-
உன் தலையை -
சொரிந்து கொள்வதும்!

அவ்விரல்கள் கொண்டு-
என்தலையில்-நீ!
அடிப்பதுவும்!

என் தாயிக்கு வலிப்பதுபோல்-
உன் கையில் செல்லமாய்-
அடிப்பதுவும்!

"பெருசு"களின் -
கவலைகளை -
மொக்கை வாய் சிரிப்பிலே-
போக்குவதும்!

மடித்த ஆடைகளை-
கலைத்து போடுவதும்!

விளையாட்டு பொருட்களை-
உடைத்திடுவதும்!

நீ!
வாய் பேசிட சப்தம்-
எழுப்பிடும்போதும்!

உறவுகள் ஒவ்வொருவரும்-
"தன்னை" அழைத்ததாக-
எண்ணி கொள்வதும்!

உன்னை குளிக்க வைக்க-
நீ!- குடும்பத்தையே-
நனைந்திட வைப்பதுவும்!

உன்-
அப்பனாவது பரவாயில்லை-
உன்னை விட!

என்னை குழந்தையின்போது-
குளிக்க வைத்த ஆச்சா(பாட்டி)-
சொல்லி விட!

உன் சேட்டையோ-
என் சேட்டையை மிஞ்சி விட!

"கூடுதலா" மரியாதை-
கிடைத்து விட!

சிறுமகிழ்வு-
என் மனதோட!

என் எண்ணங்களின்-
எழுத்தை கவிதை என்கிறார்கள்!

பெருந்தன்மையாக-
பெரிய மனதுடையவர்கள்!

மழலைகளே-
உங்களது அசைவுகளெல்லாம்-
மொழி பெயர்த்திட முடியாத-
கவிதைகளாக தெரிகிறீர்கள்!


ப்ரியமுடன்-
சீனி ஷா.

திங்கள், 16 ஜூலை, 2012

தினம் ஒறு ஹதீஸ் - 14

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவற்றில் ஒன்று) அப்பாவிகளாகன, இறை நம்பிக்கை கொண்ட,கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.                     அபூஹூரைரா (ரலி)                      நூல் : புஹாரி :2766

 துரத்தும்  எண்ணங்கள்....பொத்தி வளர்த்த புள்ளை-
போதையில கிடக்குறான்-
தெரு நாயோட!

கூன் விழுந்த முதுகோட-
தாயானவள் -
தேடி அலைகிறாள்-
கவலை தோய்ந்த முகத்தோட!

அரசோ !-
"விற்றதை" சாதனையாக-
சொல்லுது-
பந்தாவோட!

சட்டமே சொல்லுது-
குற்றம் நிரூபிக்கும் வரை-
"ஒருவன்"குற்றவாளி-
இல்லை-என!

ஊடகங்கள் ஊளையிடுது-
அவனை தீவிரவாதி-
என!

"அதிகாரிகள் "சொல்வதையெல்லாம்-
வெளியிடுவதற்கு!

தட்டச்சு இயந்திரம் -
போதும் -அதற்க்கு!

"பத்திரிக்கை "என்ற-
பேர்-எதற்கு!?

"வேஷம்" கட்டுபவர்கள்-
பிறந்தநாளுக்கு-
சுற்றுலா போய்டுவார்-
வெளி நாட்டுக்கு!

"வேலை வெட்டி "இல்லாமல்-
"இவன்"கொண்டாடுறான்-
கொடுமைக்கு!

உண்ணா விரதம்-
இருக்காங்களாம்!

காரணம்-
"அவரு" படம்-
நடிக்கலையாம்!

நடித்தால் அவருக்கு-
காசு!

வேலைக்கு போனால்தான்-
உனக்கு அடுத்த வேலை-
சோறு!

"முட்டிகொள்வார்கள்-"
ஒரு வயித்தில் பிறந்தவர்கள்-
வாழும்போது!

முட்டி முட்டி அழுவார்கள்-
யாராவது ஒருவர்-
"தவறி" விட்ட போது!

தனி தொகுதி-
கொடுத்தாச்சி!

"தனி" குவளை முறை-
மாறிடிச்சி!!?

எவ்வளவோ -
அவலங்கள் -
ஒவ்வொரு நாளும்!

"அவை" அலைக்கழிக்குது-
என்னையவும்!

ஆற்று மணலில்-
சட்டை இல்லாமல்-
படுத்தும்!

வானத்தை வெறித்தே-
பார்த்தும்!

தூக்கம்தான்-
வரவில்லை!

"துரத்திய எண்ணங்கள்"-
எழுதும்வரை-
விடவில்லை!


ப்ரியமுடன்-
சீனி ஷா.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

'முபல்லிகா' பட்டம் பெற்ற ஒப்பிலான் மாணவிகள்

நிஸ்வான்

முகவை மாவட்டம் ஒப்பிலானைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கு ஏர்வாடி மக்தூமிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியில் 'முபல்லிகா' பட்டம் வழங்கப்பட்டது. 


1. ஜனாப் சீனி முஹம்மது அவர்களின் புதல்வி நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா
2. ஜனாப் சீனி சம்சு அவர்களின் புதல்வி சம்சு நிஸா 


இவர்கள் இருவரும் ஏர்வாடி மக்தூமிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக 'முபல்லிகா' பாடப்பிரிவில் பயின்று வந்தனர். அவர்களுக்கும் அவர்களோடு பயின்ற மற்ற சில மாணவிகளுக்கும் இன்று  (15-07-2012) அந்த கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முபல்லிகா' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 
இதில் நம் ஒப்பிலான் ஜமாத்தார்களும் பெண்களும் உறவினர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் நம் ஊர் ஹிதாயத்துன்- நிஸ்வான் மகளிர் மதரஸாவில் அந்த இளம் ஆலிமாக்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கியும் கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் நன்றாக செய்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.


கண்ணியத்திற்குறிய இளம் ஆலிமாக்களே!
மதரசா சூளையில் 
மலர்ந்த செங்கற்கள் நீங்கள். 
நீங்கள் அடிக்கல்லாக 
அடுக்கப் படவில்லையானால் 
இறையச்சக் கோட்டை 
எழுவது எப்படி? 
உங்களைக் 
கண்ணியப் படுத்தும் போதெல்லாம் 
நாங்கள் 
புண்ணியப் படுத்தப் படுகிறோம்.  

சனி, 14 ஜூலை, 2012

தினம் ஒரு ஹதீஸ்-13

அல்லாஹ் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை. குழந்தையைப் பெறுவதுமில்லை! ஒருவர் வாழ்நாள் வழங்கப்படுவதும். குறைக்கப் படுவதும் (அல்லாஹ்வுடைய) பதிவேட்டில் எழுதாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது               அல்குர் ஆன்- 35-11

துறவறமும்- இறை வரமும்!படைத்தவனே!
பரிபாலிப்பவனே!

உணர்ச்சி வெளிப்பாடாய்-
மானுட உற்பத்திக்கு-
வழி வகுத்தாய்!

உணர்வுள்ள மனிதனுக்கு-
"அளவோட" உணர்ச்சி-
வெளிக்காட்ட -
"வழி காட்டி"தந்தாய்!

வெள்ளத்தை -
அணை போட்டு தடுக்காவிட்டால்-
ஊருக்கு ஆபத்து!

"தடுத்தே" வைத்தால்-
அணைக்கு ஆபத்து!

அளவாக திறந்து விட்டால்-
அணையும் பிழைக்கும்!

நாடும்-
தழைக்கும்!

அது போன்றே-
நீயே!

துறவறத்தை -
வாழ்வாக்காதவனே!

வாழ்வினுள்ளே-
துறவறத்தை-
வைத்தவனே!

"படைப்புகளை"-
தவிர்த்து-
படைத்தவனை-
வணங்கிட சொன்னவனே!

ஒரு நாளைக்கு-
இருபத்து நான்கு மணி நேரம்-
வைத்தவனே!

ஐந்து நேர வணக்கத்தை-
கடமையாக்கியவனே!

ஐந்து நேரத்திற்கு ஆகும்-
நேரம்-ஐம்பது நிமிடம்தானே!

வருடத்தில் பதினோரு மாதம்-
"நல்லவற்றை புசியுங்கள்"-
என்றவனே!

ஒரு மாதகாலம்-
மட்டும் -
குறிப்பிட்ட நேரத்திற்கு-
தடை விதித்தவனே!

வட்டியை தடுத்தவனே!

வியாபாரத்தை-
ஆகுமாக்கியவனே!

"இருப்பதில்" சிறிதளவு-
"இல்லாதவர்களுக்கு"-
கொடுப்பது கடமை என்றவனே!

பொருளாதார வசதி-
இருக்குமேயானால்-
புனித யாத்திரை-
மேற்கொள்ள சொன்னவனே!

குறிப்பிட்டு-
ஒதுக்கிய நேரங்களும்!
குறிப்பிட்ட கால-
"ஒதுங்கல்"களும்!

குறிப்பிட்ட அளவு-
கொடுப்பதுவும்!
குறிப்பிட்ட அளவுக்கு மேல்-
இருக்கும்போது-
குறிப்பிட்ட இடத்திற்கு-
செல்வதுவும்!

வாழ்வையே-
துறக்கவில்லை!

வாழ்வினுள்ளே-
துறவு நிலை!

துறவு நிலையவும்-
இலகுவாக்கிய-
இறைவா !
இது உன் -
வரமே!

கடலை மையாகவும்-
மரங்களை எழுது கோலாகவும்-
ஆக்கினாலும்- உன்
கண்ணியத்தை எழுதிட முடியாதன-
சொன்னவனே!

நான்-
என்னத்த எழுதிட முடியும்-
இந்த "அற்ப"துளியில்-
வந்தவனே......!!


ப்ரியமுடன்-
சீனி ஷா.


வெள்ளி, 13 ஜூலை, 2012

கெளம்பிட்டாரு....மைனரு ..!!குளு குளு-
குளியல்கள்!

முகத்தில்-
தடவி கொண்ட-
நுரைகள்!

மழுக்கென-
செய்துகொண்ட-
முகசவரங்கள்!

சட்டை பையினுள்-
பண பையும்!

பண பையுனுள்-
பணமும்!

ஆடைக்குள்-
மனிதன் -
என்பவனும்!

மனிதனுக்குள்-
காம வெறி-எனும்
பேயும்!

வாடகை வாகனம்-
இடம் நோக்கி -
பயணிக்கும்!

இவனுள்ளே-
அம்மிருகம்-
கோர பற்களுடன்-
சிரிக்கும்!

கடந்தது-
சில புற வழி-
சாலைகள்!

தெரிந்தது-
அந்த எல்லைகள்!

பேசி முடிக்கப்பட்டது-
பேரங்கள்!

கொல்லும்-
தின்னும்!

தின்னும்போதாவது-
சாகும்!

ஒரே வலி!
ஒரே வேதனை!

மிருகங்களின்-
வேட்டை-
காட்டில்!

குதறபடுவதுண்டு!
சீரழிப்புகளும்-
உண்டு!

தினம்தினம்-
சித்திரவதை!

வேறு வேறு-
"ரூபத்தில்"நடக்கும்-
வதை!

மனிதன் என-
சொல்லி கொள்பவர்கள்-
வேட்டை-
இருட்டில்!

"வந்தவர்கள்"-
வாழ்வு தொலைந்திருக்க!

"வருபவர்கள்-
வாழ்வை தொலைக்க!

இக்காட்சியை-
காணும்போதெல்லாம்!

மனசாட்சி சொல்லும்-
இவ்வாறெல்லாம்!

"பூச்சி மருந்து-
அடித்து செத்த -
புழுகளாகவும்!"

அப்பூச்சியை தின்னுட்டு-
சாகும் குருவிகளாகவும்"!
வையகத்தில் இப்போது-
சாதாரணமாக -
பார்க்கபடுது!

"தப்புகள்"-
"சரியாக"!

"சரியானவன்"-
தப்பானவனாக!


ப்ரியமுடன்!
சீனி ஷா.

வியாழன், 12 ஜூலை, 2012

காதலா..!? காதலா..!?பார்த்து-
பார்த்து!

பேசி-
பேசி!

பழகி-
பழகி!


தெருவுல போறவங்க-
பழகுறத-
பார்க்க-
பார்க்க!

புறம் பேச-
பேச!

"இவர்கள்"-
பேசியதும்-
முடியல!

பழகியதும்-
முடிக்கல!

"எல்லை"எதுதானும்-
தெரியல!

இரவிலும்-
கை பேசி!

விடிந்து-
இருட்டும் -
வரைக்கும்-
கை பேசி!

ஏற்றிய பணமும்-
தீர்ந்தது-
பேசி பேசி!

இருட்டு-
பகலாகியது!

பகல் இன்னும்-
பிரகாசம் ஆகியது!

நேரமும் காலமும்-
பாழாகியது!

செய்யும் காரியங்களை-
தள்ளி போடுபவன்-
மனிதனே!

கால நேரத்தோட-
செய்வது-
இயற்கையே!

உதிர்ந்த-
இலைகள்!

முளைபிக்க ஆரம்பித்தது-
கிளைகள்!

நாட்கள்-
நகர்ந்தது!

காலங்கள்-
கடந்தது!

அதே-
பூங்காவும்!

அதே-
காய்களும்-
கனிகளும்!

மாறாத-
மரங்கள்!

மாறிய-
மனிதர்கள்!

சந்திப்பு-
எதிர்பாராதது!

சந்தித்தது-
"அந்த"இருவர்!

அதே-
ஜோடி!

செல்கிறார்கள்-
கண்டுகொள்ளாதபடி!

அப்பெண்-
அவள் மணாளனுடன்!

அவன்-
அவனது மணாளியுடன்!

நின்றே இருந்த-
மரங்கள்!

கோபத்தில் கொட்டிய-
சில வார்த்தைகள்!

ஓ!

மானுடமே!

உண்மையை விளங்கிடனும்-
உன் மனமே!

ஷாஜகான்-
மனைவி பதினாலாவது-
பிரசவத்தில்-இறந்தாள்!

அவன் உள்ளம்-
வெதும்பியது -
பிரிந்ததால்-
பிரியத்தால்!

அங்கே -
அவன் கொண்ட-
நேசம் உண்மை!

தேசத்தின் மீது -
வைத்த பாசம்-
உண்மை!

எழுப்பினான்-
நேசத்தை-
கட்டிடமாக!

மண்ணில் நிலவொளியின்-
வண்ணமாக!

மன்னன் கொண்டது-
உண்மை காதல்!

இன்றோ-
"பெரும்பாலோர்"கொள்வது-
"பச்சையான" ஊடல்!

உங்கள்-
"ஆசையான"-
விருப்பத்திற்கு!

ஏன் இழுக்குறீர்கள்-
"அந்த தம்பதிகள் போல்"-
நாம் என பேசி-
வம்பிற்கு!?

ப்ரியமுடன்-
சீனி ஷா.
புதன், 11 ஜூலை, 2012

தினம் ஒரு ஹதீஸ்-12

நபி (ஸல்) அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை                         அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)                   நூல்: புகாரி 592

தினம் ஒரு ஹதீஸ்-12

நபி (ஸல்) அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை                         அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)                   நூல்: புகாரி 592

மண்ணின் மைந்தர்கள் தொடர்-6


ல காலம் ஒப்பற்ற ஒப்பிலானில் ஜமாத் தலைவராக இருந்து மறைந்த ஜனாப் N.U.யாசீன் அவர்கள் மறைந்ததும் அவர்களின் மீது ஒரு இரங்கற் பாடல் இயற்றுமாறு ஒப்பிலான் அல்முபீன் தப்ஸ் குழு பாடகர் செய்யது அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அடியேன் இயற்றி பல நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடப்பட்டு வருகிற ஒரு பாடல்..
பாடலை வாசிக்கும் முன் ஒரு நபிமொழியை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

oppilan
மாவட்ட அளவில் மார்க்க போட்டி
விழாவின் போது...
''உங்களில் மறைந்தோரின் நல்லவைகளைப் போற்றுங்கள். தீயவற்றை விமர்சிக்காதீர்கள். அவர்களின் செயல்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள்''.

முத்துக்கு முத்தாக..


அன்புக்கு அன்பாக
பண்புக்கு பண்பாக
பாசமுள்ள தலைவர் எங்கள் யாசீன் வந்தாக!
பாங்கான மக்களுக்கெல்லாம் நல்வழி தந்தாக!
         
 (அன்புக்கு அன்பாக)

போதைகளை ஒழித்துக் கட்ட
பாதைகளை அமைத்தவரே!
புர்காவை போடவைத்து
புண்ணியங்கள் சேர்த்தவரே!
சீரழிவைப் பார்த்துவிட்டால்
சீறுகிற சிங்கமடா!
ஏழைகளை வாழவைக்கும்
ஏற்றமுள்ள தங்கமடா!!
          
 (அன்புக்கு அன்பாக)

ஊராரும் மறக்கவில்லை
உற்றாரும் வெறுக்கவில்லை
உம்போன்ற தலைவர் இங்கே
எப்போதும் பிறக்கவில்லை
நீர் போட்ட சட்டங்களால்
மது பாட்டில் திறக்கவில்லை
உம் ஆட்சி இல்லாமல்
ஊர் இன்று சிறக்கவில்லை

மௌனங்கள்"!


ஊதாரி பேச்சி-
உருப்படாத பேச்சி!

ஆத்திரக்காரன் பேச்சி-
அரை புத்தி பேச்சி!

அறிவாளியின் மௌனமோ-
அறிவின் முதிர்ச்சி!
------------------------------
கடலின் அலை-
ரசனை தரும்!

கடலின் மௌனமோ-
புயலை தரும்!
------------------

மொட்டுக்கள் மௌனம்-
களைவது-
மலர்வதற்கு!

மலைகள் மௌனம்-
களைவது!-
நில சரிவிற்கு!

பனி மலை மௌனம்-
களைவது-
கடல் மட்டம்-
கூடுவதற்கு !

அநீதியை கண்டும்-
பொங்கிடாதவன்-சமம்
பிணத்திற்கு!
-------------------
யோகியின் -
மௌனம்-
தியானம்!

"தியான பீடத்தில்"-
தீஞ்ச வாசம்-
காமம்!
------------------
ப்ரியமுடன்-
சீனி ஷா

செவ்வாய், 10 ஜூலை, 2012

தினம் ஒரு ஹதீஸ் -11

இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்கு பின் பேசுவதையும்  நபி (ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தார்கள்      அறிவிப்பவர்;அபூபர்ஸா(ரலி) நூல்; புஹாரி;568

திங்கள், 9 ஜூலை, 2012

ஜாதி மத பேதமின்றி கூடிடுதே கூட்டமேகாதர் சாஹிபு வலியுல்லாஹ்
ஐந்து ஏக்கர்

  • நரிப்பையூர் அருகில் ஐந்து ஏக்கரில் கடற்கரையோரம் துயில்கொண்டிருக்கும் தூயவர்; 
  • சன்மார்க்கத்திற்காக நடந்த அறப்போரில் தன் இன்னுயிரை அற்பணித்து அடங்கப்பட்டுள்ள அமரர்; 
  • அஷ்-ஷஹீத் காதர் சாஹிபு வலியுல்லாஹ் (ரலி) அவர்களின் கந்தூரி விழாவில் அரங்கேற்றுவதற்காக அடியேன் எழுதிக் கொடுத்த ஒரு சிறிய பாடல்.

மெட்டு:   அன்பை சுமந்து சுமந்து...


வல்லோன் அருளால் பிறந்தீர்
மேலோன் வழியாய் சிறந்தீர்
காதர் வலியே எங்கள் நாதா..
நாதர் நபியின் வழிப் பேரா..
              (வல்லோன்)


நீர் அடைந்த சோதனைகள் 
நான் நினைத்து வாடுகிறேன்
நீர் அளித்த போதனைகள் 
நான் அறிந்து பாடுகிறேன்
மார்க்கத்தினை மண்ணகத்தில்
மங்கிடாமல் பரப்பினீர்
போர்க்களத்தில் எதிரிகளை
மிஞ்சிடாமல் துரத்தினீர்
காதர் வலியே எங்கள் நாதா..
நாதர் நபியின் வழிப் பேரா..
              (வல்லோன்)


வானவரும் தீனவரும்
வாழ்த்துகின்ற காதர் ஷஹீத்
தீனமுதைப் பாய்ச்சுகின்ற
தீரர் எங்கள் காதர் ஷஹீத்
ஜாதி மத பேதமின்றி கூடிடுதே கூட்டமே
ஆதி முதல் அந்தம் வரை ஆண்டவனின் நாட்டமே
காதர் வலியே எங்கள் நாதா..
நாதர் நபியின் வழிப் பேரா..
              (வல்லோன்)

பசியிலிருந்து...


அரக்க பறக்க-
ஓடுகிறோம்-
வாழ்நாள்-
முழுவதும்!

ஒரு கணமாவது-
நிதானித்திட-
மறக்கிறோம்!

சிலர் வாழ்வதற்காக-
பணத்தை தேடி கொண்டு!

பலர் பணத்தினுள்-
வாழ்வை தேடி கொண்டு!

உச்சி வெயிலின்-
உக்கிரத்தை -
அனுபவிக்காதவர்கள்-
உண்டோ!?

பசியில் கொதிக்கும்-
வயிற்றின் வலியை-
அறிந்தவர்கள்-
நம்மில் எத்தனை பேர்-
உண்டோ!?

"குடிச்சவனுக்கு"-
தெரியாது-
சாக்கடையும்!
சந்தனமும்!

பசியில இருக்கும்-
உறவுகளை-
மறக்கலாமோ-
பந்தங்களும்!
பாசங்களும்!

முதியோர் இல்லங்கள்-
பெருகி வரும்-
காலம் இது!

"முடியாதவர்களையா-"
கவனிக்க போகுது!?

அன்று -
தானிய அமைச்சர்-
அதிகமாக நோன்பிருந்தார்!

பிரதானிகளில்-
ஒருவர்-காரணம்
அறிய ஆவல் கொண்டார்!

பதிலும் கிடைத்தது-
நான் பசியின் -
வலி அறிந்தால்தான்-
மக்களின் பசியை-
புரிந்து கொள்ள முடியும்-
என்றார்!

இன்று-
"விலைவாசியை கட்டுபடுத்த-
என்னிடம் மந்திர கோல் இல்லை"

"தானியங்களை பாதுகாக்க-
சாக்குகள் இல்லை"-என
"பொறுப்பாக(!!!)-
பதிலுரைத்தவர்!

இவரை ஆதரிக்கும்-
ஒரு அணி!

"இருப்பதை"-
இடிப்பார்கள்!

"இல்லாததை"-
இருக்கு-என்பார்கள்!

சேது திட்டத்திற்கு-
பாதை - திட்டங்கள்-
வகுத்தவர்கள்!

ஆட்சி இழந்ததும்-
"சேதுவுக்கு" மத-
சாயம் பூசுபவர்கள்!

இவர்கள்-
ஆதரவில்-
ஒருவர்!

இது மற்றொரு-
அணி!

"இவர்கள்"-
"ஆண்ட போதும்"-
"ஆளும்போதும்"-
மாறிடவில்லை!

நாட்டின்-
நிலை!

இவர்கள் ஆதரிப்பவர்களால்-
மாறும் என-
நம்பலாமோ!-
இனி!?

ஆண்டிடும் காலம்தான்-
வாராத -
"பசியிலிருந்து விடுதலை"-
தர ஒரு அணி....!!

ப்ரியமுடன்-
சீனி ஷா.


சனி, 7 ஜூலை, 2012

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை!
மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.


1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!


தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்! 


இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.


கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!


2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும். 


3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.


4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.
5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.
6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.
ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது


7. நீண்ட நாட்களுக்கு...


 நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும். 


8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.
9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.


அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.


என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம். 


10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.


சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.


சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.


பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.

தகவல்:இணையத்திலிருந்து

கருணையிலுமா கபடம்...!?எத்தனையோ-
மாற்றம்-
உலகிலே!

எப்போதுதான்-
மாறுமோ-
அநீதிகளே!

கடுமையாக -
நடத்தபட்டார்கள் -
கைதிகள்!

நம் பார்வைக்கு-
சுதந்திர தியாகிகள்!

வெள்ளையர்களுக்கு-
அடிமைகள்!

"அவர்கள்"ஏற்றிய-
கொடும்சட்டங்களே!

இன்றும் -
நடை முறையிலே!

அது சரி!

என்ன வித்தியாசம்-
வெள்ளைகாரர்கள்-
அடக்கு முறைக்கும்!
இப்போது-
"இருப்பவர்களுக்கும்"!

அன்றைக்கு-
அரிக்கேன் விளக்கு-
போராட்டம்-
நடந்துச்சி!

இன்றைக்கு-
சிறை நிரப்பு போராட்டம்-
நடந்துச்சி!

இரண்டுக்கும்-
என்னய்யா வேறு காரணங்கள்-
சொல்லபட்டுச்சி!?

இன்று -
சிறு மாற்றம்!

"ஆட்சி"!
"கட்சி"!

மாறியதா-?
ஜனங்களின்-
அவல காட்சி!?

எரி பொருள்-
ஏறுதாம்-
எகிறுது தேசிய-
எதிர்க்கட்சி!

விலையை நிர்ணயிக்க-
பெட்ரோலிய நிறுவனங்களுக்கே-
அனுமதி கொடுத்தது-
மக்கா!
மறந்தா போச்சி!?

ஸ்விஸ் வங்கி -
கருப்பு பணத்தை-
கொண்டு வருவாங்களாம்!

"போட்டதெல்லாம்-"
யாருங்கய்யா!,?

சுப்பனும் -
குப்பனுமாய்யா!?

மாறி மாறி-
ஆட்சி பண்ணுவீங்க!

தேர்தல் நேரத்துல-
வீர வசனம்-
பேசுவீங்க!

மக்கள் வாயில-
மண்ணை அள்ளி போடுவீங்க!

எப்படியோ-
போங்க!

தலைவர்கள் பிறந்தநாள்-
பொது மன்னிப்பில்-
"பொதுவாக" நடந்துக்கங்க!

7 வருட சிறைவாசிகள்-
பொது மன்னிப்பில்-
இடம் பெறலாம்!

அதுலயும்-
ஏன் முரண்பாடாம்!

சிறப்பு சலுகை-
கேட்கவில்லை!

அச்சலுகையில்-
சிறுபான்மையினர்களுக்கு-
ஏன் இடம் இல்லை....!?

ப்ரியமுடன்-
சீனி ஷா.

(அர்ப்பணம்; சிறைகைதிகளுக்காக போராடும்
நல்லுள்ளங்களுக்கு...)

வெள்ளி, 6 ஜூலை, 2012

பருவத்திலே.....காற்றின் ஈரப்பதம்-
மேகமாகிறது!

மழையோ-
"பருவம்"தவறினால்-
விவசாயி கன்னம்-
ஈரமாகிறது!

விவசாயிகள்-
நாட்டின் முதுகெழும்பு-
என்றார்கள்!

அதனால்தானோ-
"வளைத்து" விட்டார்கள்!?

விதைக்கிறவர்களே!

மண்ணிலே!

தேடுகிறீர்கள்!
மானுடத்துக்கு-
உணவு தானியங்கள்!

உங்கள் வாழ்வோ-
இடர்பாடுகளிடையே!

மண்ணோட -
மலந்து கிடக்க-
மது குடிக்கிரவனும்-
விக்கிரவனும்!-
அடங்கி விடுகிறான்-
கௌரவம் என்ற-
பேரிலே!
-----------------------

"பருவம் "வந்த பெண்ணை-
கரை சேர்க்க முடியாமல்!-
ஏழை தகப்பன்களின்-
கண்களே குளமாகுது!

ஏழ்மை சகோதரிகள்-
இளமையோ-
எரிதணலில் இட்ட-
தாளாகுது!

உழவெடுக்க!
வண்டி இழுக்க!

பந்தயம் ஓட!
ஜல்லி கட்டில் ஓட!

வித விதமான-
மாடுகள் விற்பனைக்கு-
சந்தையிலே!

நடு நிலை பள்ளி!
உயர் நிலை பள்ளி!

பட்டதாரி!
"பட்டத்துல" பாதி!

உள் நாடு!
வெளி நாடு!

விலை வித்தியாசப்படும்-
மாடுகள் -மன்னிக்கவும்-
மாப்பிள்ளைகள்-
விற்பனையிலே!

வளர்த்தவர்களுக்கு-
என்ன?-
உரிமை இருக்கு!?

மாடோ-
மகனோ-
போன பிறகு-
விற்பனைக்கு!

தாரை தப்பட்டைகளின்-
சப்தத்துக்கு பயந்து ஓடி-
மாட்டிடும்-பலம் கொண்ட-
யானைகள் கூட்டம்!

காசை பார்த்து-
ஆசையில் மயங்கி-
தன் மானத்தை-
இழக்கலாமோ-!,?
இளைஞர் பட்டாளம்!
-------------------------
ப்ரியமுடன்-
சீனி ஷா.
வியாழன், 5 ஜூலை, 2012

ஐந்து ஏக்கரில் கந்தூரி விழா
இன்ஷா அல்லாஹ் வரும் 08-07-2012 ஞாயிறு மாலையிலிருந்து இரவு வரை 
நரிப்பையூர் ஐந்து ஏக்கரில் அமைந்திருக்கும் மகான் அஷ்-ஷஹீது காதர் சாஹிபு வலியுல்லாஹ் நினைவிடத்தில் கந்தூரி விழா நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற இருக்கின்றன. அதில் அனைத்து ஜமாத்தார்களும் நண்பர்களும் திரளாக கலந்து சிறப்பிக்கும்படி விழாக்கமிட்டியாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


மாலை அசருக்குப் பின்: குர்ஆன் தமாம் செய்து அபூர்வ துஆ ஓதப்படும்.


6.00 மணி அளவில்: கொடியேற்றம்


தொடர்ந்து கந்தூரி நேர்ச்சை வழங்கப்படும்


இரவு 9.00 மணியளவில் : இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.


அனைவரும் வருக!  அறிவமுதம் பருக!!


                                                                                             இப்படிக்கு 
                                                                                  விழாக்கமிட்டியாளர்கள்
                                                                                     ஒப்பிலான் & சிங்கை                                                                                                         
                                                                                         மற்றும் சென்னை.மகளே...என் உயிரின்-
வழி வந்த-
உயிரே!

உயிரணு ஒன்னை-
உருவமாக்க இடம்-
தந்தவளின் -உரு
கொண்டவளே!

என் வாழ்வு-
விளங்கவில்லை-உன்
தாய் "வரும்வரை!"

என் தாயின் பாசம் -
புரியவில்லை- நீ!
எனக்கு மகளாக-
பிறக்கும் வரை!

பாடசாலை கேள்வியை-
என்னிடம்- கேட்பாய்!

தெரியாததுபோல்-
தலை அசைத்தால்-
"ஐயோ" என செல்லமாய்!

உன் தலையிலேயே-
தட்டி கொள்வாய்!

என் தாயிடம்-
அதே கேள்வியை கொண்டு-
செல்வாய்!

என் தாயோ-
வாழ்வில் பாடம்-
படித்தவள்!

வகுப்பு பாடம்-
அறியாதவள்!

என் தாயோ தெரியாது என-
தலையாட்டினாள்!

யாருக்குமே தெரியல-
என- சொல்லி கொண்டு!

பதிலை நீயே -
சொன்னாய்-
அதட்டி கொண்டு!

இங்கே நீ!
ஆசிரியை ஆனாய்!

என் தாயோ-
மாணவி ஆனாள்!

கேட்பதுண்டு-
சிலர்!

சந்தோசம் கிடைப்பது-
வெற்றியிலா! ?

தோல்வியிலா!?

வித்தியாசப்படும்-
யாரிடம் தோற்கிறோம்-
என்பதிலே!

இதுவே -
என் பதிலே!

கல்வி கற்பதில்தான்-
உள்ளது- கண்ணியம்!

ஆடை குறைப்புதான்-
சுதந்திரம் என்பது-
போலி பெண்ணியம்!

சீன தேசம் சென்றேனும்-
சீரிய கல்வியை தேடு-
நபிகளார் மொழி!

"அறியாதவர்கள்"-
விமர்சனத்திற்கும்-
அடைத்து வைப்பவர்களுக்கும்-
நபிகளார் மீதா!?-
பழி!?

என் ஈராக்குலைகலான-
பெண் குழந்தைகளே!

இன்று-
உலகில் சுதந்திரம்-
என்ற -மாயை உள்ளது!

அது-
"எப்படியும்" வாழலாம்-
என்கிறது!

வாகனம் ஓட்டுபவனுக்கே-
கட்டுபாட்டு விதிகள்-
இருக்கு!

கட்டுப்பாடு -
தேவையில்லையோ-
மனித வாழ்விற்கு!?

ப்ரியமுடன்-
சீனி ஷா.திங்கள், 2 ஜூலை, 2012

செஞ்ச பாவம்தான் என்ன....?(2 )விடுதலை பெற்ற-
அறுபது ஆண்டிலேயே!

என்ன மாற்றம்-
வந்துவிட்டது-
நாட்டிலே!?

தேசம் என்றால்-
அனைத்து மக்களும்-
வாழத்தானே!?

ஓன்று மட்டும்-
வாழ மற்றதெல்லாம்-
அழிந்திடனுமோ!?

ஒன்றை கொன்று-
மற்றொன்று வாழ்வது-
காடு!

ஒரே பக்கம் வளர்ச்சி-
அனைத்து பக்கமும்-
தளர்வதா-நாடு!?

ஒன்று-
மக்களுக்கு வாழ-
வழி செய்யுங்கள்!

அல்லது-வாழ நினைப்பவர்களின்
வழியை -
மறைக்காதீர்கள்!

உரிமை கேட்டால்-
"பிரிவினை "-என
பிதற்றுகிறார்கள்!

அரசுகளே! நீங்களே-
நியமித்த "கமிசன்கள்"-
சொல்லவதையும்-
மறுக்குறீர்கள்!

அல்லது-
மறந்து விடுகிறீர்கள்!

ஆந்திரா தந்த-
இட ஒதுக்கீடை-
நீதி மன்றம் தடுக்குது!

"மதவெறி நாயகர்கள்"-
வழக்குகள்-
கிடப்பில் கிடக்குது!

நீதி தேவதை-
கண்களை கட்டி உள்ளது!
பாரபட்சம் பார்க்க -
கூடாதென்பதற்கா!?

இல்லை - குருடாகவே
உள்ளதை -
மறைப்பதுக்கா!?

ஏன் இப்படி-
ஒடுக்கபடுகிறது-
சமூகம்!?

எதற்கு-
ஒடுக்குதலை -செய்கிறது
அரசு நிர்வாகம்!

வாழ வழி-
இல்லை!

வேலை-
வாய்ப்பில்லை!

படிக்க-
இட ஒதுக்கீடு-
இல்லை!

ஆனால்-
குற்றமற்றவனுக்கும்-
இடம் இருக்கு-
சிறைகளிலே!

உண்மை-நிரந்தரமா
உறங்காது!

பொய்கள் எந்நாளும்-
பொழைக்காது!

சத்தியம்-
சாகாது!

அசத்தியம்-
நீண்ட காலம்-
வாழாது!

ப்ரியமுடன்
சீனி ஷா.

(குறிப்பு;மகாராஷ்ட்ராவில் உள்ள பதினைந்து
சிறைகளில் அடைபட்டு கிடக்கும்-
மூவாயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.25 .4 சதவிகிதம் வழக்காட வழக்கறிஞர் கூட இல்லை.ஆதாரம் Tata institute of social sciences (TISS)ஆய்வு செய்தது ;)
செஞ்ச பாவம்தான் என்ன...?(1 )இம்மண்ணில் -
பிறந்ததா!?

இம்மண்ணை -
நேசிப்பதா! ?

எம்மண்ணில் நாம்-
பிறக்கணும் என-
முடிவெடுக்க முடியாததா!?

சிறுபான்மை-
மக்களாக-
இருப்பதா!?

பெரும்பான்மையாக-
சுதந்திரத்திற்காக-
மடிந்ததா!?

ஷாஜகான்-
நாட்டுக்கு தலைநகர்-
டில்லியை உருவாக்கியதா!?

வருமானம் கொட்டும்-
தாஜ் மகாலை-
கட்டியதா!?

ஆட்சி மாறும்போதெல்லாம்-
காட்சி மாறால்-
கொடியேற்ற உதவும்-
செங்கோட்டை அமைத்ததா!?

கப்பம் கட்டிய-
கோழைகளிடையே-
கடும்சினம் கொண்டு-
பகதூர் ஷா-விடுதலைக்காக
வீறுகொண்டதா!?

சிறையில் கிடைக்கையிலே-
தன் தவ புதல்வங்கள்-
தலையை தாம்புலதட்டில்-
கண்டும் கலங்காமல்-
இருந்ததா! ?

போராளிகள் இப்படிதான்-
காட்சி அளிப்பார்கள்-என
அவர் மகிழ்ச்சியுற்றதா!?

மரணதருவாயிலும்-
அடக்கம் செய்ய இந்தியாவில்-
இடம் இல்லையா!?-என
கலங்கியதுவா!?

"அடிபடிந்தவர்களின்"-
வாரிசுகள் - அரசபரம்பரை
என பந்தா செய்வதா!?

பகதூர் ஷாவின் குடும்பம்-
இன்றும் வாடகை வீட்டில்-
இருப்பதா!?

கவச உடைகூட-
அணிய கால அவகாசம்-
எடுத்துகொள்ளாம-"திப்பு"
போராடி மடிந்ததுவா!?

வலிகள்தான்-
எத்தனை!

வலைபதிவு-
உணருமா-!?அந்த
வலிகளை!?

(தொடரும்......)


ப்ரியமுடன்-
சீனி ஷா