புதியவை

புதன், 25 ஜூலை, 2012

நோன்பு கஞ்சி.....



வரிசையாக வைக்கப்பட்ட-
நான்கு அடுப்புகள்!

கழுவி கொவுத்தி-
வைத்திருக்கும்-
சட்டிகள்!

ஒரு பக்கம்-
தேங்காய் திருக-
ஒரு கூட்டம்!

பூண்டை தோல் -
உரிக்க ஒரு-
கூட்டம்!

அரிசியை ஓட்டை-
போட்டு -எடுத்து செல்லும்
எலி கூட்டம்!

சிறு உதவிகளுடன்-
அன்றைக்கு உதவும்-
இளையர்கள்!

டேய் !-
மாப்ள!-
மருமகனே!-என
உறவு முறையுடன்-
கூப்பிடும்-
பெரியவர்கள்!

தெரிந்து செய்த-
தப்புகளுக்கு-
கிடைக்கும் பெரியவங்க-
திட்டுகள்!

அதே வயது ஒத்தவர்-
"ஏன்பா!? சின்ன பசங்கள-
திட்டுறே"!என கிடைக்கும்
ஆதரவுகள்!

திட்டுகள் நமக்கு-
ஒன்றும்-
புதிதில்ல!

அதைபற்றியெல்லாம்-
கவலை பட்டதே-
இல்லை!

ஆதரவா சொன்ன-
வார்த்தையாலே!

எங்கோ உரைக்கிறது-
பட்ட மிளகாய்-
கடித்தது போல!


உதிரும் இலைகள்-
முளைப்பதுண்டு-
கிளைகளிலே!

"உதிர்ந்த "உறவுகள்-
திரும்புவதில்லை!-
இவ்வுலகிலே!

"மறைந்த "உறவுகளை-
நினைக்கையிலே!

கண்களோ குளிக்கிறது-
கண்ணீரிலே!

இரண்டு சட்டி கஞ்சி-
ஊரில் வாங்கிட -
வருபவர்களுக்கு!

மற்ற இரண்டும்-
பள்ளியில் நோன்பு-
திறப்பவர்களுக்கு!

மாலை நேர-
வேலை-
தூக்கு சட்டியுடன்-
குழந்தைகள்!

தூக்கு சட்டிய தூக்கியவர்களை-
தூக்கி கொண்டுவரும்-
"வாப்பாக்கள்"!

அந்தி பொழுதும்-
வந்தது!

வரிசையாக வைக்க பட்ட-
நோன்பு கஞ்சிகளுடன்-
குண்டாளங்கள்!

அதன் அருகில்-
வைத்திருக்கும்-
பேரீத்தம் பழங்கள்!

பிரயாணத்தில்-
இருந்தவர்கள்!

வியாபாரம் செய்ய-
வந்தவர்கள்!

பெரிவர்கள்!
சின்னவர்கள்!

அவர்களுக்கு பிடித்த-
இடங்களில் அமர்ந்தார்கள்!

யாரையும் "ஒதுங்கிட"-
சொல்லவில்லை!

அந்த உரிமை-
எவருக்கும் இல்லை!

இறைவா!
உன்னுடைய உணவை கொண்டே-
என்னுட நோன்பை திறக்கிறேன்-
என்னிடம் இருந்து ஏற்றுகொள்வாயாக!
என்பதை அரபியில்-
சொல்லப்பட்டது!

அதனை அனைத்து-
வாய்களும் சொல்லியது!

பேரீத்தம் பழங்களை-
தின்றார்கள்!

கஞ்சிய -
குடித்தார்கள்!

எனக்கோ தோன்றிய-
சில எண்ணங்கள்!

பார பட்சம்-
காண கூடாதுன்னு-
பள்ளி சீருடை!

பாகு பாடு இல்லாம-
நோன்பை திறக்கவா!?-
நோன்பு கஞ்சி முறை...!!!?

கஞ்சி இதமான-
சூட்டுடன்-
தொண்டையில்-
இறங்கியது!

எல்லோர் பசியை போக்க-
கஞ்சி காய்ச்ச உதவியதை-
எண்ணுகையில்-
மனதின் ஓரத்தில்-
இனித்தது....!!

ப்ரியமுடன்-
சீனி ஷா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்