புதியவை

திங்கள், 9 ஜூலை, 2012

ஜாதி மத பேதமின்றி கூடிடுதே கூட்டமே



காதர் சாஹிபு வலியுல்லாஹ்
ஐந்து ஏக்கர்

  • நரிப்பையூர் அருகில் ஐந்து ஏக்கரில் கடற்கரையோரம் துயில்கொண்டிருக்கும் தூயவர்; 
  • சன்மார்க்கத்திற்காக நடந்த அறப்போரில் தன் இன்னுயிரை அற்பணித்து அடங்கப்பட்டுள்ள அமரர்; 
  • அஷ்-ஷஹீத் காதர் சாஹிபு வலியுல்லாஹ் (ரலி) அவர்களின் கந்தூரி விழாவில் அரங்கேற்றுவதற்காக அடியேன் எழுதிக் கொடுத்த ஒரு சிறிய பாடல்.

மெட்டு:   அன்பை சுமந்து சுமந்து...


வல்லோன் அருளால் பிறந்தீர்
மேலோன் வழியாய் சிறந்தீர்
காதர் வலியே எங்கள் நாதா..
நாதர் நபியின் வழிப் பேரா..
              (வல்லோன்)


நீர் அடைந்த சோதனைகள் 
நான் நினைத்து வாடுகிறேன்
நீர் அளித்த போதனைகள் 
நான் அறிந்து பாடுகிறேன்
மார்க்கத்தினை மண்ணகத்தில்
மங்கிடாமல் பரப்பினீர்
போர்க்களத்தில் எதிரிகளை
மிஞ்சிடாமல் துரத்தினீர்
காதர் வலியே எங்கள் நாதா..
நாதர் நபியின் வழிப் பேரா..
              (வல்லோன்)


வானவரும் தீனவரும்
வாழ்த்துகின்ற காதர் ஷஹீத்
தீனமுதைப் பாய்ச்சுகின்ற
தீரர் எங்கள் காதர் ஷஹீத்
ஜாதி மத பேதமின்றி கூடிடுதே கூட்டமே
ஆதி முதல் அந்தம் வரை ஆண்டவனின் நாட்டமே
காதர் வலியே எங்கள் நாதா..
நாதர் நபியின் வழிப் பேரா..
              (வல்லோன்)

5 கருத்துகள்:

  1. paadal vari!

    sinthikka vaikkirathu!

    pirappin nokkathai adainthaarkal-
    thelinthaarkal!

    porittaarkal!

    aanaal. naamo........!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நாம
      அவர்களுக்காக
      விழா எடுக்கிறோம் என்ற பெயரில்
      குடித்துவிட்டு
      கும்மாளம் போடுகிறோம்''
      அதைதானே சொல்ல வந்தீங்க சீனி?

      நீக்கு
  2. asarath!

    mathaasai "thinamum oru hatees"
    thodarai thodara sollunga.....

    பதிலளிநீக்கு
  3. சில விடயங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த பதிவு .. என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அரசே..
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்