புதியவை

சனி, 14 ஜூலை, 2012

துறவறமும்- இறை வரமும்!



படைத்தவனே!
பரிபாலிப்பவனே!

உணர்ச்சி வெளிப்பாடாய்-
மானுட உற்பத்திக்கு-
வழி வகுத்தாய்!

உணர்வுள்ள மனிதனுக்கு-
"அளவோட" உணர்ச்சி-
வெளிக்காட்ட -
"வழி காட்டி"தந்தாய்!

வெள்ளத்தை -
அணை போட்டு தடுக்காவிட்டால்-
ஊருக்கு ஆபத்து!

"தடுத்தே" வைத்தால்-
அணைக்கு ஆபத்து!

அளவாக திறந்து விட்டால்-
அணையும் பிழைக்கும்!

நாடும்-
தழைக்கும்!

அது போன்றே-
நீயே!

துறவறத்தை -
வாழ்வாக்காதவனே!

வாழ்வினுள்ளே-
துறவறத்தை-
வைத்தவனே!

"படைப்புகளை"-
தவிர்த்து-
படைத்தவனை-
வணங்கிட சொன்னவனே!

ஒரு நாளைக்கு-
இருபத்து நான்கு மணி நேரம்-
வைத்தவனே!

ஐந்து நேர வணக்கத்தை-
கடமையாக்கியவனே!

ஐந்து நேரத்திற்கு ஆகும்-
நேரம்-ஐம்பது நிமிடம்தானே!

வருடத்தில் பதினோரு மாதம்-
"நல்லவற்றை புசியுங்கள்"-
என்றவனே!

ஒரு மாதகாலம்-
மட்டும் -
குறிப்பிட்ட நேரத்திற்கு-
தடை விதித்தவனே!

வட்டியை தடுத்தவனே!

வியாபாரத்தை-
ஆகுமாக்கியவனே!

"இருப்பதில்" சிறிதளவு-
"இல்லாதவர்களுக்கு"-
கொடுப்பது கடமை என்றவனே!

பொருளாதார வசதி-
இருக்குமேயானால்-
புனித யாத்திரை-
மேற்கொள்ள சொன்னவனே!

குறிப்பிட்டு-
ஒதுக்கிய நேரங்களும்!
குறிப்பிட்ட கால-
"ஒதுங்கல்"களும்!

குறிப்பிட்ட அளவு-
கொடுப்பதுவும்!
குறிப்பிட்ட அளவுக்கு மேல்-
இருக்கும்போது-
குறிப்பிட்ட இடத்திற்கு-
செல்வதுவும்!

வாழ்வையே-
துறக்கவில்லை!

வாழ்வினுள்ளே-
துறவு நிலை!

துறவு நிலையவும்-
இலகுவாக்கிய-
இறைவா !
இது உன் -
வரமே!

கடலை மையாகவும்-
மரங்களை எழுது கோலாகவும்-
ஆக்கினாலும்- உன்
கண்ணியத்தை எழுதிட முடியாதன-
சொன்னவனே!

நான்-
என்னத்த எழுதிட முடியும்-
இந்த "அற்ப"துளியில்-
வந்தவனே......!!


ப்ரியமுடன்-
சீனி ஷா.


2 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனை.
    சகோதர மதத்தைச் சார்ந்தவர்களுக்கும்
    நம் மார்க்கத்து மகிமையை
    எளிமையாக புரியவைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்