புதியவை

வியாழன், 19 ஜூலை, 2012

பயணிகள்....



வறுமையானவர்கள்!
செழுமையானவர்கள்!

பங்களாவாசிகள்!
பரதேசிகள்!

கல்விமான்கள்!
கல்லாதவர்கள்!

நியாயத்திற்காக -
செத்தவர்கள்!

நியாயத்தை-
சாகடித்தவர்கள்!

வள்ளல்கள்!
வழங்காதவர்கள்!

உத்தமர்கள்!
ஊதாரிகள்!

எழுதி -
எழுச்சி பெற-
செய்தவர்கள்!

எழுத்தில்-
விஷ அம்பை-
எய்தவர்கள்!

பொன்னானவர்கள்!
மண்ணா போனவர்கள்!

ஆண்ட மக்கள்!
அடிமை மக்கள்!

ரத்தம் பார்த்து-
துடித்தவர்கள்!

ரத்தம் பார்க்க-
துடிப்பவர்கள்!

பேச்சில் -
விளாசியவர்கள்!

"விளாசியதில்"-
மூச்சை நிறுத்தியவர்கள்!

மலை போல்-
நிமிர்ந்தவர்கள்!

மழை போல்-
விழுந்தவர்கள்!

பசிக்கு-
புசித்தவர்கள்!

புசிக்கவே-
சுவாசிக்கிறவர்கள்!

எத்தனை பேர்-
வரவு!

அத்தனை பேரும்-
செலவு!

"போனவர்கள்"-
வந்தவர்கள்!

"போக போகிறவர்கள்"-
"இருக்கிறவர்கள்"!

"வர போகிறவர்களும்"-
"போகிறவர்கள்"!

மண்ணிலிருக்கும்-
நீர் ஆவியாகிறது!

விண்ணிலிருந்து-
அதுவே-
மழையாகிறது!

இது ஒரு-
சுழற்சி முறை!

நல்லதும்-
கேட்டதும்-
தலை தூக்குவது-
உலகின் நிலை!

இன்று-
கருதிடபடுகிறார்கள்!

"இப்படிதான்"-
வாழனும் -என்பவர்கள்!
அறிவீனர்களாக!

"எப்படியோ"-
வாழ்ந்தால் சரி-என்பவர்கள்
அறிவாளிகளாக!

ஒண்ணுதான்-
நகர பேருந்தும்!
நம் வாழ்வும்!

"எங்கிருந்து புறப்பட்டோமோ"-
"அங்கேயே சேர்கிறோம்!"

பரிசோதனையாளர்-
சோதிக்கையில்-தெரியும்!
யாரிடம் பயண சீட்டு-
இல்லை- என்று!

இறப்புக்கு பின்தான்-
தெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!


ப்ரியமுடன்-
சீனி ஷா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்