புதியவை

செவ்வாய், 24 ஜூலை, 2012

நோன்பு காலங்களில்...



ஊரு உலகமெல்லாம்-
சுற்றி வருவேன்!

உறங்க மட்டுமே-
வீடு வருவேன்!

மழையில் நனைந்த-
கோழியை போல-
"குன்னி" கொண்டு-
உறக்கம் கொள்வேன்!

தாயே-
பனி பெய்யும் காலத்திலும்-
கோழி ஆனமும்-
கொத்து பரோட்டாவும்-
வாங்கி வருவாள்!

"எந்திரிச்சி "வந்தால்-
என்ன !?-
கேட்டவர்கள் எத்தனையோ!

"எந்திரிச்சி" போடா-என
இதுவரை சொல்லாதவள்-
என்தாயே!

மற்றவர்களுக்கு-
நான் "எப்படியோ"-
தெரிகிறேன்!

பெற்ற தாயிக்கோ-
இன்னும் குழந்தையாகவே-
நான் தெரிகிறேன்!

தாயே-
உன் பாசத்துக்கு-
ஈடு கெட்ட என்னால்-
முடியுமா!?-
தெரியல!

உன்னை மனம்-
நோகாமல் வைத்து கொள்ள-
முடியுமான்னு-
எனக்கு தெரியல...!!!
---------------------------
சரிவர கட்டாத-
கைலியுடன்-
வரும் பாலகன்!

நச்சரிப்பு தாளாமல்-
சில்லறை எடுத்து கொடுக்கும்-
அப்பன்!

வாங்கிய காசை-
விறு விறு என பொய்-
யாசகரிடம்-
கொடுக்கிறது-
பிஞ்சு கைகள்!

கண்டும் காணாமலும்-
கடந்து போனவர்கள்-
எத்தனையோ பேர்கள்-
மத்தியில்!

"பொடி பயல்"-என
நான் நினைத்தவன்!

என்னையவும்-
வெட்கித்து-
தலை குனியவைத்தவன்!

ஆம்-
கடந்து போனவர்களில்-
நானும் ஒருவன்!


ப்ரியமுடன்
சீனி ஷா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்