புதியவை

திங்கள், 9 ஜூலை, 2012

பசியிலிருந்து...


அரக்க பறக்க-
ஓடுகிறோம்-
வாழ்நாள்-
முழுவதும்!

ஒரு கணமாவது-
நிதானித்திட-
மறக்கிறோம்!

சிலர் வாழ்வதற்காக-
பணத்தை தேடி கொண்டு!

பலர் பணத்தினுள்-
வாழ்வை தேடி கொண்டு!

உச்சி வெயிலின்-
உக்கிரத்தை -
அனுபவிக்காதவர்கள்-
உண்டோ!?

பசியில் கொதிக்கும்-
வயிற்றின் வலியை-
அறிந்தவர்கள்-
நம்மில் எத்தனை பேர்-
உண்டோ!?

"குடிச்சவனுக்கு"-
தெரியாது-
சாக்கடையும்!
சந்தனமும்!

பசியில இருக்கும்-
உறவுகளை-
மறக்கலாமோ-
பந்தங்களும்!
பாசங்களும்!

முதியோர் இல்லங்கள்-
பெருகி வரும்-
காலம் இது!

"முடியாதவர்களையா-"
கவனிக்க போகுது!?

அன்று -
தானிய அமைச்சர்-
அதிகமாக நோன்பிருந்தார்!

பிரதானிகளில்-
ஒருவர்-காரணம்
அறிய ஆவல் கொண்டார்!

பதிலும் கிடைத்தது-
நான் பசியின் -
வலி அறிந்தால்தான்-
மக்களின் பசியை-
புரிந்து கொள்ள முடியும்-
என்றார்!

இன்று-
"விலைவாசியை கட்டுபடுத்த-
என்னிடம் மந்திர கோல் இல்லை"

"தானியங்களை பாதுகாக்க-
சாக்குகள் இல்லை"-என
"பொறுப்பாக(!!!)-
பதிலுரைத்தவர்!

இவரை ஆதரிக்கும்-
ஒரு அணி!

"இருப்பதை"-
இடிப்பார்கள்!

"இல்லாததை"-
இருக்கு-என்பார்கள்!

சேது திட்டத்திற்கு-
பாதை - திட்டங்கள்-
வகுத்தவர்கள்!

ஆட்சி இழந்ததும்-
"சேதுவுக்கு" மத-
சாயம் பூசுபவர்கள்!

இவர்கள்-
ஆதரவில்-
ஒருவர்!

இது மற்றொரு-
அணி!

"இவர்கள்"-
"ஆண்ட போதும்"-
"ஆளும்போதும்"-
மாறிடவில்லை!

நாட்டின்-
நிலை!

இவர்கள் ஆதரிப்பவர்களால்-
மாறும் என-
நம்பலாமோ!-
இனி!?

ஆண்டிடும் காலம்தான்-
வாராத -
"பசியிலிருந்து விடுதலை"-
தர ஒரு அணி....!!

ப்ரியமுடன்-
சீனி ஷா.


2 கருத்துகள்:

  1. சூப்பர் சீனி.
    அழகான கவிதை; அருமையான கருத்து!
    ரசிக்க மட்டுமல்ல..
    சிந்திக்கவும்தான்!

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்