புதியவை

சனி, 28 ஜூலை, 2012

பக்கத்து வீடு...



உற்றத்தாரும் ,சுற்றத்தாரும்
இருக்கலாம்-
ஊரளவு!

பரிதவிப்பின்போது-
ஓடி வருவது-
பக்கத்து வீடு-
உறவு!

"மூத்தவர்கள்"-
முக சாயலை வைத்து-
சொல்லி விடுவார்கள்-
இன்னாரென்று!

இளையர்கள்-
பக்கத்து வீட்டுக்காரன் -
பெயர் கூட தெரியாமல்-
இருக்கிறார்கள்-
இன்று!

கண்டம் விட்டு-
கண்டம்-
நேசம் கொள்கிறார்கள்!

அண்டை வீட்டுக்காரனுடன்-
சண்டை செய்கிறார்கள்!

எண்களை அழுத்தினால்-
பல மையிலுக்கு அப்பாலும்-
உடனடி தொடர்பு!

பக்கத்துல இருப்பவர்களிடம்-
பல வருட துண்டித்து போன-
உறவு!

அன்றைக்கு -
அக்கம் பக்கமே-
அன்புக்கு பிரதானமானது!

இன்றைக்கு -
"நிழல்" உறவுகளுக்கு-(சீரியல்)
எந்நேரமும் கண்ணீர்வடிப்பது!

தகப்பனுக்கு-
ஒன்னு!

தாயிக்கு-
ஒன்னு!

பிள்ளைக்கு-
ஒன்னு!

ஆளுக்கொரு-
தொலை காட்சி!

உறவுகளோ-
பாழா போச்சி!

இதுல எங்கே-
இவர்கள் வாழ-
பக்கத்துக்கு வீட்டாரையும்-
நினைச்சி!?

அன்று-
விசேசமா சமைத்தாலும்-
பக்கத்துக்கு வீட்டுக்கும்-
சேர்த்து சமைப்பார்கள்!

இன்று-
அற்ப விசயங்களுக்கும்-
பேசாமல் இருக்கிறார்கள்!

அண்டை நாடுகளுடன்-
பிரச்னை-
ஆயுத குவியலுக்கு-
உதவும்!

அண்டை வீட்டாருடன்-
சண்டை-
"வறட்டு" எண்ணங்களுக்கு-
வழி வகுக்கும்!

"அண்டை வீட்டாருக்கு-
காற்று வராதபடி-
சுவர்களை எழுப்பாதீர்கள்!

அண்டை வீட்டார்-
பசியோடு இருக்கையில்-
தான் மட்டும் வயிறு முட்ட-
தின்பவன்-என்னை சார்ந்தவன்
அல்ல-"
நபிகளார் சொன்னது!

இன்ன மதம்-
இன்ன இனம்-என
சொல்லிடாதது!

ஆதலால்-
இனம் ,மதம்,
மொழி கடந்து-
பக்கத்துக்கு வீட்டாருடன்-
பரிவோடு நடப்பது-
நன்மை பயக்கவல்லது!

ப்ரியமுடன்-
சீனி ஷா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்