புதியவை

திங்கள், 23 ஜூலை, 2012

முடிந்தளவாவது....



தின்ன முடியாமல்-
திணறுபவர்கள்-
ஒரு பக்கம்!

பசியால்-
பரிதவிப்பவர்கள்-
மறுபக்கம்!

ஆயிரம் கழிவறை கொண்ட-
மாடி உள்ள-பங்களா
சொந்தம் ஒருவனுக்கு!

ஆயிரம் பேருக்கு -
ஒரு கழிவறை வீதம்-
இல்லை-
பலபேருக்கு!
உடலில் உள்ள கொழுப்புதனை-
தின்னு கொள்ளும்-
பசியால் உடம்புகள்!

உயிரையே பசியினால்-
இழக்கும் -
எத்தனையோ உடல்கள்!

உலகமெல்லாம் காண-
முடிகிறது -
பிறந்த மண்ணை விட்டு-
விரண்டோடிய மக்களை!

ஆனாலும்-
நாகரிக உலகம் என-
சொல்லிட நமக்கும்-
வெட்கம் இல்லை!

எல்லா "சத்தும் " கூடி-
மாத்திரை போடும்-
ஒரு கூட்டம்!

எந்த ஊட்ட சத்தும்-
இல்லாமல்-
மடியும் இன்னொரு கூட்டம்!

மானம் மறைக்க -
ஆடை வாங்க -
பணம் இல்லாமல்-
எத்தனையோ-
பெண்கள்!

பணத்துக்காக ஆடை-
களையும்-
எத்தனையோ-
"கேவலங்கள்"!

விலங்குகளை-
காப்பாற்ற எத்தனை-
விழிப்புணர்வுகள்!?

மனிதனையும் -
காப்பாற்ற நம்மால் ஆனா-
உதவிகளை செய்யுங்கள்!

பெருமானார் மொழி-
படைப்புகளை நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!

"இருந்ததையெல்லாம்"-
தானம் செய்தார்கள்-
நம் முன்னோர்கள்!

"முடிந்தளவாவது"-
தானம் செய்யலாமே-
இன்று-
பூமியில் "இருப்பவர்கள்!"

ப்ரியமுடன்-
சீனி ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்