புதியவை

வெள்ளி, 20 ஜூலை, 2012

நீங்க ஆளுங்க....!!



போராட்டமாக-
தெரிந்தது-
தாய் மொழிக்கு!

பெரும் போராட்டமானது-
பிணை கிடைக்க-
மகள் "மொழிக்கு"!

கருணையில கூட-
விடுவிக்கல-
சிறுபான்மை கைதிகளை!

ஏறெடுத்து கூட-
பார்க்கல -அவர்கள்
கண்ணீர்களை!

"திகாரின்" முன்னால்-
காண முடிந்தது-
கலங்கிய கண்களை!

நாட்டு மக்களே-
குடும்பம்-
என்றவர்கள்!

குடும்பத்துக்கே-
நாடு-
என்றானார்கள்!

ஆட்சியோ-
இல்லையோ-
போயிடுவாங்க-
கொட நாடு!

மின்சாரம்-
இல்லாமலும்!

விலைவாசி-
உயர்வாலும்!

தமிழ் நாடே-
நீ!-
வாடு!

படித்த மக்கள் வேலை-
டாஸ் மாக் கடையிலே!

படிக்காதவர்கள்-
நிறுவகிக்கிரார்கள்-
கல்லூரிகளை!

"அவர்கள்" விற்றதை-
அரசு -
விக்கிறது!

அரசு-
நடத்தியதை-
"அவர்கள்"நடத்துகிறார்கள்!

கம்பீரத்துடன்-
கடன் பெறலாம்-
மாணவர்கள்!

சொல்கிறார்கள்-
அதிகாரத்தில்-
உள்ளவர்கள்!

வட்டிக்கு மேல-
வட்டியை போட்டு-
மாணவன் வாழ்வையும்-
சூனியமாக்கிடுவார்கள்!

வலிய வலிய-
கடன் கொடுத்த-
ஐரோப்பா நிலை-
என்னாச்சி!?

பொருளாதார-
மந்ததுல-
விழுந்தாச்சி!

நம்ம நாட்டு கதி-
என்னாகும்-
அண்ணாச்சி!?

கொடுக்குற மாதிரி-
கொடுப்பீங்க!

பிடுங்குற மாதிரி-
பிடுங்குவீங்க!

அதுல ஒரு-
உதாரணம்!

விவசாய கடன்-
தள்ளு படி!

ஏன் விவசாயிகள்-
தற்கொலைகள் தெரியவில்லையே-
நின்றபடி!?

மக்கள் நாங்க-
அதெல்லாம்-
மறந்துருவோம்ங்க!

நீங்களே!
"மாறி மாறி-
ஆளுங்க!!

ப்ரியமுடன்-
சீனி ஷா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்