புதியவை

செவ்வாய், 17 ஜூலை, 2012

"நடந்திடும்" கவிதை....!



சிரிப்பதும்-
அழுவதும்!

அழுவதற்கு முன்-
சிணுங்குவதும்!

தூக்கிட அழைத்திடும்போது-
தாயோட ஒட்டிகொள்வதும்!

அவசரகதியில் செல்லும்போது-
தூக்கிட சொல்லி-
கை அழைக்கும்போது!

பிஞ்சு விரல்களால்-
உன் தலையை -
சொரிந்து கொள்வதும்!

அவ்விரல்கள் கொண்டு-
என்தலையில்-நீ!
அடிப்பதுவும்!

என் தாயிக்கு வலிப்பதுபோல்-
உன் கையில் செல்லமாய்-
அடிப்பதுவும்!

"பெருசு"களின் -
கவலைகளை -
மொக்கை வாய் சிரிப்பிலே-
போக்குவதும்!

மடித்த ஆடைகளை-
கலைத்து போடுவதும்!

விளையாட்டு பொருட்களை-
உடைத்திடுவதும்!

நீ!
வாய் பேசிட சப்தம்-
எழுப்பிடும்போதும்!

உறவுகள் ஒவ்வொருவரும்-
"தன்னை" அழைத்ததாக-
எண்ணி கொள்வதும்!

உன்னை குளிக்க வைக்க-
நீ!- குடும்பத்தையே-
நனைந்திட வைப்பதுவும்!

உன்-
அப்பனாவது பரவாயில்லை-
உன்னை விட!

என்னை குழந்தையின்போது-
குளிக்க வைத்த ஆச்சா(பாட்டி)-
சொல்லி விட!

உன் சேட்டையோ-
என் சேட்டையை மிஞ்சி விட!

"கூடுதலா" மரியாதை-
கிடைத்து விட!

சிறுமகிழ்வு-
என் மனதோட!

என் எண்ணங்களின்-
எழுத்தை கவிதை என்கிறார்கள்!

பெருந்தன்மையாக-
பெரிய மனதுடையவர்கள்!

மழலைகளே-
உங்களது அசைவுகளெல்லாம்-
மொழி பெயர்த்திட முடியாத-
கவிதைகளாக தெரிகிறீர்கள்!


ப்ரியமுடன்-
சீனி ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்