புதியவை

சனி, 2 ஜூன், 2012

வேர்கள்!



நம் மழலைகளுக்கும்-
நம் மணாளிக்கும்!

நமது-
தாய்களுக்கும்!
தாய்களின்-
சேய்கலான-
நமக்கும்!

நம் உடன்பிறப்புகளுக்கும்!
அவர்களின்-
உயிரின் உருவங்களுக்கும்!

தாயாக-
நம்மை வளர்த்தவர்கள்!
மாரோட நம்மை-
சேர்த்து கொண்டவர்கள்!

விதைகள்-
வளரும்வரை-
தேவை-
வேலிகள்!

வளர்ந்த விதைகள்-
வேலிகளை-ஒதுக்குவதா!?
முறைகள்!

நாம்-
முதுகு தண்டின் வழி-
வரவுகள்!
'ஆச்சா'-'அப்பா'மார்களே-
நமது வேர்கள்!

பெரியவர்களை-
மதிக்காதவர்களும்!
சிறுவர்கள் மீது-
அன்பு செலுத்தாதவர்களும் -
என்னை சார்ந்தவர்கள் அல்ல-
நபி மொழி !

அது தானே-
நம் அனைவரின்-
வழி!

ப்ரியமுடன்!
சீனி ஷா.



2 கருத்துகள்:

  1. பெரியோரை நாம் மதித்தால் நம்மை மதிக்கிற பிள்ளைகள் நமக்கு கிடைப்பார்கள்
    விதை விதைத்தால் விதை அறுக்கலாம்

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்