இன்ஷா அல்லாஹ் வரும் 27-12-2011 செவ்வாய் காலை 9.30 மணியிலிருந்து பகல் 1-00 மணி வரை
நமது ஒப்பிலான் தரீக்குல் ஜன்னா ஜும்ஆ பள்ளியில் கடலாடி வட்டாரத்திலுள்ள ஊர்களிலிருந்து இவ்வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற சுமார் 20 புனித ஹாஜிகளுக்கு வரவேற்பும் பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கடலாடி வட்டார உலமா சபையினரும் ஒப்பிலான் ஜமாத்தினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். விழா சிறக்கவும் இனி வரும் காலங்களில் இதைவிட அதிகமான நபர்கள் ஹஜ்ஜுக்கு செல்லவும் தாங்கள் அனைவரும் துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்