புதியவை

சனி, 26 மே, 2012

இங்குமா டெங்கு?


 


தென்மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த டெங்கு காய்ச்சல், இப்போது வேகமாக சென்னையிலும் பரவிவருகிறது.


தென்மாவட்டங்களான, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு பலபேர் பலியாகிக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவியது. தென் மாவட்டங்களில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளது.


இதைத் தொடர்ந்து சென்னையிலும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் டெங்கு காய்ச்சலுக்கான சோதனை நடத்தப் பட்டது. இந்நிலையில் எழும்பூரை சேர்ந்த ஓர் பெண்ணுக்கும், அயனாவரம் சேர்ந்த ஓர் இளைஞருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதாக கண்டுபிடிக்கப பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போத்தனூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலிருந்து தலா ஒருவரும், திருப்பூர் மாவட்டத்திலிருந்து 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கோவை மாநகராட்சி கூறியுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=474423


ஒப்பிலானிலும் ஒரு சில குழந்தைகளுக்கு இந்த விஷக் காய்ச்சல் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த காய்ச்சல் பரவுவதற்கான காரணங்களும் அதைத் தடுப்பதற்கான தக்க ஆலோசனையும் வழங்கப்பட்டது. 

  • தெருக்களில் கழிவுநீர் தேங்க விடாமலும் 
  • கழிவுநீர் ஓடைகளின் ஓரமாக தடுப்பு மருந்து தெளிக்கவும் 
  • குடிநீரை காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து அருந்தவும் 
  • இந்த காய்ச்சல் பரவும் காலத்தில் முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கஷாயம் குடித்து வந்தால் இந்த நோய் அண்டவே அண்டாது என்றும் வலியுறுத்தப்பட்டது. 
  • உலகில் பரவும் நோய்களில் 80 % தண்ணீரால்தான் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை நினைவூட்டப்பட்டது.
இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
டெங்கு காய்ச்சல் குறித்து டாக்டர். க. இராஜேந்திரன் எழுதிய விரிவான கட்டுரை காண இங்கே அழுத்தவும்

11 கருத்துகள்:

  1. கருத்துள்ள தகவல்கள் அடங்கியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி,
      உங்கள் வரவுக்கும்
      கருத்துக்கும்
      மிக்க நன்றி!

      நீக்கு
  2. அல்லாஹ்வின் கிருபையால் இந்த செய்தியின் எதிரொலியாக ஒப்பிலானில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.
    முதல் கட்டமாக வீட்டுக்கு வீடு கிணறுகளில் கிருமி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் தெருக்களில் ஓடும் கழிவுநீரை அகற்ற அல்லது குறைந்த பட்சம் மருந்தாவது தூவ வேண்டுமென ஒப்பிலான் ஊராட்சி மன்றத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே தேவையான நடவடிக்கைதான்.
      தொடருங்கள் உங்கள் சேவையை.

      நீக்கு
  3. mika thevaiyaana muyarchi ithupool matra oorkalilum muyarsiththaal nallathu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலோசனைக்கு மிக்க நன்றி.
      தொடர்ந்து கருத்துரையிடுங்கள்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஆலோசனைக்கு மிக்க நன்றி.
      தொடர்ந்து கருத்துரையிடுங்கள்.

      நீக்கு
  5. மருந்து தெளிப்பதனால் மற்றும் இந்த டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியாது. வீடுகளில் உள்ளவர்கள் அன்றாடம் தங்கள் வீடுகளில் உள்ள தேங்கி கிடக்கும் தண்ணீரை உடனடியாக நீக்க வேண்டும். வீட்டுக்கு முன்னால் பாத்திரம் கழுவி விட்டு தண்ணீரை அப்படியே விட்டு விட்டு செல்வது தவிர்க்க பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வீட்டுக்கு முன்னால் பாத்திரம் கழுவி விட்டு தண்ணீரை அப்படியே விட்டு விட்டு செல்வது தவிர்க்க பட வேண்டும்//

      உண்மைதான் சகோ.
      ஆனால் எவ்வளவுதான் சொன்னாலும் சமுதாயம்
      இதை காதில் வாங்கமாட்டேங்குதே..
      பூனைக்கு யார் மணி கட்டுவது?
      திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
      திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல
      அதுகளாப் பார்த்து திருந்தணும்

      நீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்