புதியவை

புதன், 17 அக்டோபர், 2012

விமர்சையாக நடைபெற்ற ஹாஜிகள் வழியனுப்பும் விழா


oppilan
அல்லாஹ்வின் அருளால் நமது ஒப்பிலானிலிருந்து இவ்வாண்டு 4 நபர்கள் புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். நேற்று அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் மட்டுமல்ல.. நம் ஒப்பற்ற ஒப்பிலானிலும் புனித ஹஜ் பயணத்தில் அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் 8 பேர் ஹஜ் செய்தது நாம் அனைவரும் அறிந்த செய்தி. இந்த வருடம் பலரும் நாட்டம் கொண்டிருந்தாலும் அந்த பாக்கியம் கிடைத்ததென்னவோ நான்கு பேருக்குத்தான்.

1. ஜனாப் ஜமால்தீன் அவர்கள்
2. அவர்களின் துணைவி உஸ்வான் பீவி அவர்கள்
3. ஜனாபா. தாஜுன் பீவி (W/O மர்ஹூம் யாசீன்) அவர்கள் 
4. ஜனாபா. காதர்ஜான் பீவி அவர்கள்

இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நம் பள்ளியில் நடைபெற்றது. அதில் ஜமாத்தார்களும் வாலிபர்களும் தாய்மார்களும் திரளாகக் கலந்துகொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

ஜனாப். உமர் கத்தாப் அப்பா அவர்களும் ஜமாஅத் தலைவர் ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்களும் தலைமை தாங்க, 
மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த் (தலைமை இமாம் , ஒப்பிலான்) அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஹாஜி. இபுராமுசா அவர்கள் மணிமாலை ஒன்றை அணிவித்து ஹஜ்ஜுக்கு செல்வோரை வாழ்த்தினார். பொன்னாடையும் அணிவித்து கவுரவிக்கப்பட்டது. முன்னதாக, சாயல்குடியிலிருந்து சென்னை செல்லும் அமர்நாத் பஸ் ஒப்பிலானுக்கே வரவழைக்கப்பட்டு தயாராக இருந்தது. பள்ளியிலிருந்து பஸ் வரைக்கும் மக்கள் திரள், கொட்டும் மழையிலும் கூட்டம் கூட்டமாக வந்து சலாம் சொல்லி கண்ணீர் மல்க வழி அனுப்பிவைத்தது மறக்கமுடியாத நிகழ்வு. 

1 கருத்து:

  1. கடந்த வருடங்களை விட இப்பொழுது இதுபோன்ற நிகழ்வுகளில் அதிக மக்கள் அலை திறள்வது
    நல்ல ஒரு முன்னேற்றம்தான்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்