நமது இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானிலிருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று தாயகம் திரும்பிய ஹாஜிகளை வரவேற்று கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (27-11-2012 செவ்வாய்க் கிழமை) அதிகாலை 7 மணி அளவில் நடைபெற்றது.
முன்னதாக நேற்று சென்னை வந்திறங்கிய ஹாஜிகளை சென்னை வாழ் ஒப்பிலான் ஜமாத்தார்கள் சென்னை விமான நிலையம் சென்று வரவேற்று கவுரவித்தனர்.
![]() ![]() ![]() ![]() |
- இன்று அதிகாலை 7 மணிக்கு அமர்நாத் பேருந்து ஒப்பிலான் வரை வந்து ஹாஜிகளையும் உறவினர்களையும் இறக்கிவிட்டுச் சென்றது.
- அங்கு திரண்டிருந்த ஒப்பிலான் ஜமாத்தார்களும் பெண்களும் மதரஸா மாணவர்களும் ஹாஜிகளைக் கைகொடுத்து கட்டித் தழுவி வரவேற்றனர்.
- அங்கிருந்து பள்ளிவரை தக்பீர் முழக்கத்துடன் அழைத்து வந்தனர்.
- பின்னர் பள்ளியில் வைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு ஜமாஅத் தலைவர் ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள் தாங்க, மவ்லவி ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
- முன்னால் ஹாஜிகள் நூஹு அவர்களும் இப்றாமுசா அவர்களும் பொன்னாடை போர்த்தி ஹாஜி ஜமால்தீன் அவரகளைக் கவுரவித்தனர்.
- ஆலிமாக்கள் ஹாஜியானிகளைக் கவுரவித்தனர்.
- ஹாஜி ஜமால்தீன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
- பின்னர், அனைவரும் கைகொடுத்து கட்டித் தழுவி பாசத்தைப் பறிமாறிக்கொண்டனர்.
- அதன்பிறகு ஊர்வலமாக ஹாஜிகளை அவர்கள் இல்லம் வரை அழைத்துச் சென்று விடைபெற்றுக்கொண்டனர். இல்லம் வரை வந்த மக்களுக்கு இனிய பேரீத்தம் பழங்களையும் புனித ஜம்ஜம் நீரையும் வழங்கி ஹாஜிகள் உபசரித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத் நிர்வாகம் திறன்பட செய்திருந்தனர்.
![]() |
இளஞ்சிட்டுகள்.. |
![]() |
ஜமாஅத்தார்கள்.. |
![]() |
வரவேற்க வந்திருந்த வாலிப சமுதாயம் |
![]() |
கைகொடுத்து முஸாஃபஹா.. |
![]() |
இல்லம் வரை.. |
பாராட்டு பெற்ற ஹாஜிகள்:
ஜனாப் ஜமால்தீன் அவர்கள்
அவர்களின் துணைவி உஸ்வான் பீவி அவர்கள்
ஜனாபா. தாஜுன் பீவி (W/O மர்ஹூம் யாசீன்) அவர்கள்
அவர்களின் துணைவி உஸ்வான் பீவி அவர்கள்
ஜனாபா. தாஜுன் பீவி (W/O மர்ஹூம் யாசீன்) அவர்கள்
எல்லாம் வல்ல அல்லாஹ் இனிவரும் ஆண்டுகளில் இதைவிட அதிகமான மக்கள் நம் ஊரிலிருந்து ஹஜ்ஜுக்கு புறப்படும் பாக்கியத்தை நல்குவானாக. ஆமீன்.