புதியவை

செவ்வாய், 27 நவம்பர், 2012

புனித ஹாஜிகள் வரவேற்பு விழா-2012


மது இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானிலிருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று தாயகம் திரும்பிய ஹாஜிகளை வரவேற்று கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (27-11-2012 செவ்வாய்க் கிழமை) அதிகாலை 7 மணி அளவில் நடைபெற்றது. 
முன்னதாக நேற்று சென்னை வந்திறங்கிய ஹாஜிகளை சென்னை வாழ் ஒப்பிலான் ஜமாத்தார்கள் சென்னை விமான நிலையம் சென்று வரவேற்று கவுரவித்தனர். 
ஹாஜிகள் வரவேற்பு, ஒப்பிலான்

  • இன்று அதிகாலை 7 மணிக்கு அமர்நாத் பேருந்து ஒப்பிலான் வரை வந்து ஹாஜிகளையும் உறவினர்களையும் இறக்கிவிட்டுச் சென்றது. 
  • அங்கு திரண்டிருந்த ஒப்பிலான் ஜமாத்தார்களும் பெண்களும் மதரஸா மாணவர்களும் ஹாஜிகளைக் கைகொடுத்து கட்டித் தழுவி வரவேற்றனர். 
  • அங்கிருந்து பள்ளிவரை தக்பீர் முழக்கத்துடன் அழைத்து வந்தனர். 
  • பின்னர் பள்ளியில் வைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு ஜமாஅத் தலைவர் ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள் தாங்க, மவ்லவி ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள் தொகுத்து வழங்கினார். 
  • முன்னால் ஹாஜிகள் நூஹு அவர்களும் இப்றாமுசா அவர்களும் பொன்னாடை போர்த்தி ஹாஜி ஜமால்தீன் அவரகளைக் கவுரவித்தனர்.
  •  ஆலிமாக்கள் ஹாஜியானிகளைக் கவுரவித்தனர். 
  • ஹாஜி ஜமால்தீன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. 
  • பின்னர், அனைவரும் கைகொடுத்து கட்டித் தழுவி பாசத்தைப் பறிமாறிக்கொண்டனர். 
  • அதன்பிறகு ஊர்வலமாக ஹாஜிகளை அவர்கள் இல்லம் வரை அழைத்துச் சென்று விடைபெற்றுக்கொண்டனர். இல்லம் வரை வந்த மக்களுக்கு இனிய பேரீத்தம் பழங்களையும் புனித ஜம்ஜம் நீரையும் வழங்கி ஹாஜிகள் உபசரித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத் நிர்வாகம் திறன்பட செய்திருந்தனர்.
இளஞ்சிட்டுகள்..

ஜமாஅத்தார்கள்..

வரவேற்க வந்திருந்த வாலிப சமுதாயம்

கைகொடுத்து முஸாஃபஹா..

இல்லம் வரை..

பாராட்டு பெற்ற ஹாஜிகள்:
 ஜனாப் ஜமால்தீன் அவர்கள்
அவர்களின் துணைவி உஸ்வான் பீவி அவர்கள்
 ஜனாபா. தாஜுன் பீவி (W/O மர்ஹூம் யாசீன்) அவர்கள் 

எல்லாம் வல்ல அல்லாஹ் இனிவரும் ஆண்டுகளில் இதைவிட அதிகமான மக்கள் நம் ஊரிலிருந்து ஹஜ்ஜுக்கு புறப்படும் பாக்கியத்தை நல்குவானாக. ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்