புதியவை

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உயர்ந்த தலைவர் உமர் கத்தாப்

oppilan

ஒப்பற்ற ஒப்பிலானின்
அப்பழுக்கற்ற மண்ணின் மைந்தர்!
பிறந்த மண்ணிலும் -தற்போது
இறந்த மண்ணிலும்
சிறந்த மனிதராய்த்
திகழ்ந்த புனிதர்

இறைவழியில் இன்முகத்துடன்
பெருந்தொகையை அள்ளித் தரும்
பெருந்தகை !

பள்ளி கட்டுவதற்கு
அள்ளித் தந்தவர் -புதிய
பள்ளி கட்டுவேன் என
சொல்லிச் சென்றவர்!

அறிஞர்கள் என்றால்
அவ்வளவு பிரியம்!
பழகிப் பார்த்தோருக்கு
 நன்றாகவே புரியும்!

சொந்த ஊர்
வந்த ஊர்
எந்த ஊரிலும்-இவர்
தந்த தீர்ப்புக்கு
தலைவணங்குவோர் ஏராளம்!
தீராத சிக்கல்களும்
தீரும் இவர் மூலம் !

கையில் குடையோடு
மிடுக்கு நடையோடு
பளிச்சென்ற உடையோடு
அவர் வருகின்ற
அழகு...அப்பப்பா!

அந்த கம்பீர கலங்கரை விளக்கு-இன்று
காணாமல் போனதே..
அந்த அகழ் விளக்கு -இன்று
அணைந்து விட்டதே!

இனி-
எப்ப்டி கிடைக்கும்
இப்படி ஒரு தலைமை ?
அப்படியே கிடைத்தாலும்
முறைப்படி இவர்தான்
அதற்கும் முதன்மை !

2 கருத்துகள்:

  1. அவர்களின் ஆன்மா இறைநிலை அடையட்டும் ...

    http://www.malartharu.org/search/label/oblivion

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீா். அஸ்ஸலாமு அலைக்கும். வாலிநோக்கத்திலிருந்து பதிவு செய்கிறேன்.கடந்த மாதத்தில் தங்கள் கிராமத்து இஸ்லாமிய மாணவ மாணவிகள் கலந்து கொன் குத்தாட்ட டான்ஸூம். அதைக்கண்டு மெய்சிலிந்து பிள்ளைகளை பாராட்டிய தங்கள் கிராம தாய் மாரர்களும் .அதை நடத்திய உலாமாக்களும். என்ற தலைப்பில் எழுதியுளுள்ளோம் .

    கல்வி கற்பது எதற்கு அதிக மார்க் எடுப்பதற்கா ? அல்லது கை நிரைய பணம் சம்பாதிப்பதற்கா ? அதிகமாக மார்க் எடுக்கும் பிள்ளைகளின் எதிர்கால மண வழிமை என்ன ? கல்வி என்பது சமுக அக்கரையை ஏற்படுத்தக் கூடியமதாக இருக்க வேண்டும்.

    சமுக அக்கரையையும் மனவழிமையையும் உண்டாக்கும் கல்வி எங்கு கிடைக்கிறது என்றால் அரசு ஆரம்ப பள்ளிகளில்தான் காரணம் 3

    அரசு ஆரம்ப பள்ளிகளில்தான் ஏற்ற இறக்கமுடைய மாணவ மாணவிகள் சந்திக்கும் முதல் தளமாக அமைகிறது.. ஏழை மாணவா்கள் ஏழ்மையாகவே வருவார்கள் அவா்களைவிட வசதியான மாணவா்கள் அவா்களுக்கு உதவும் சிந்தனை வரும்போது அவா்கள் சமுக அக்கரை என்னும் ஃ முதல் பாடத்தை கற்றுக் கொள்கிறார்கள்ஃ


    அதன் வாயிலாக ஏழைகளின் துயா்பற்றி அறிந்து கொள்கிறார்கள். அவா்கள் உயா் பதவிகளில் அமரும்போது ஏழைகளின் துயா்துடைக்க அக்கரை கொனடவா்களாக மாறுகிறார்கள் . இதன் வாயிலாக இறைவனிடத்தில் நன்மையை பெறுகிறார்கள்

    தனியார் பள்ளிகளிலும். ஆங்கிலப்பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியா்கள் தங்களை வசதியானவா்களாவே உருமாற்றிக் கொள்கிறார்கள். அங்கு ஏழைக் குழந்தைகள் பயின்றாலும் அத்தாயும் வசதியான பிள்ளைகளின் உடை .உணவு . ஆடரம்பரமான பழக்த்திற்கான தேவைக்காக வட்டிக்கு பணம் வாங்கியாவது வசதியான குடும்பத்தைச் சோ்ந்த பிள்ளைகளுக்கு நிகராக செய்து விடுகிறார்.. இதனால் வருமையை பற்றிய பாடம் முற்றிலுமாக இல்லாமல் போய்விடுகிறது. ”””வசதியான வாழ்கை என்பது நிறந்தரமற்றது ””” மார்க் ஒன்றே குறிக்கோள் என்று படிக்கும் மணவ மாணவியா்கள் எதிர்காலத்தில் வருமையை சந்திக்க நோ்ந்தால் மண வழிமையில்லாமல் துவண்டு போவதும் தற்கொலை முயற்சி நடப்பதும் நம் கண்கூடாக கானும் காட்சிகள்தான்

    ஆங்கிலம் கற்றால் அறிவாளிகளா ? அரபி கற்றால் அறிவாளிகளா? ஆங்கிலம் என்பது ஒரு மொழி அதனால் அறிவு வராது - ஜப்பானிய குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலும் .சீனா குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலும் இங்லீஸ் பாடம் இல்லைஃ சீனா்களும் ஜப்பானியா்கள் படைப்பற்றலில் எவ்வளவு சாதனைகள் படைக்கின்றார்கள். படித்து மார்க் வாங்கினால் மட்டும் அறிவாளிகள் அல்ல . படிப்புடன் சமுக அக்கரையும் கொன்ட மாணவ மாணவியர்கள்தான் தலை சிறந்த அறிவாளிகள்.. அதனால் வசதியக வாழும் நான்பா்களே உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகள் சேருங்கள் நீங்கள் உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சோ்ப்பதால் அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவா்த்தி செய்தால் அது ஏழை மாணவ மாணவியர்களுக்கு உதவும்

    இஸ்லாம் 7வயதுல கல்வியை கட்டாயமாக்கியுள்ளது்

    ஜப்பானியர்கள் 10வயதில் கல்வியை கட்டாயமக்கியுள்ளார்கள் - காரணம் ? 7வயதுவரை தாய் தந்தை தாத்தா பாட்டி அன்பால் வளர வேண்டும். .7வயதுக்குட்பட்ட குழந்தைகளை கப் சிப் என்று கண்டிசன் பேட்டு வளா்த்தால் அக்குழந்தை எதிர்காலத்தில் பய உணா்வேடுதான் வாழும்.!!!!!! அதனால் சிறு குழந்தைகள் வீட்டிலிருந்தால் தொல்லை என நினைத்து '' L Kg'' '' U Kg'' என அனுப்பாதீா்கள் அது எதிர்காலத்தில் தாய் தந்தையரிடமிருந்து பிரிந்து வாழ வழி செய்துவிடும்
    அதனால் தங்கள் ஊரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளை சேருங்கள். பள்ளி முடிந்த பிறகு குழந்தைகளை தாய் தந்தை அரவனைப்பில் பிள்ளைகளின் மண வழிமையை வளருங்கள். -

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்