வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வாரி வழங்கிய வள்ளல்கள்


                பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
       2012- பெருநாள் ஃபித்ரா வழங்கிய பெருமக்கள்
நன்கொடை தந்த நன்மக்கள்- வாரி வழங்கிய வள்ளல்கள் 
ஜனாப் S.நாகூர் கனி (ஆச்சிமுத்து) -சிங்கை
  20000
ஜனாப் K. காதர் அலி (சிங்கை)
10000
ஜனாப் M. ஈசாக்      (சிங்கை)
5000
ஜனாப் S. இப்ராஹீம் (அல்ஜுபைல்)
5000
ஜனாப் S. மீரா மைதீன் (சிங்கை)
3000
ஜனாப் A. சிக்கந்தர்  (சிங்கை)
3000
ஜனாப் S.K.J காதர்  (சவூதி)
3000
ஜனாப் Y. சீனி அடுமை (சிங்கை)
3000
ஜனாப் S. மைதீன் முசாபர் (சிங்கை)
2000
ஜனாப் K. அம்சா (சிங்கை)
1000
ஜனாப் A. மைதீன் (மலேசியா)
1000
ஜனாப் N. அபுசாலிஹ் (சிங்கை)
1000 
ஜனாப் A. காதர் சம்சு (ஊ.மன்றத் தலைவர்)
1000
ஜனாப் S.இஸ்மாயீல்
1000
ஜனாப் S. ஜமால் (சிங்கை)
500
ஜனாப் A. முசாபர் அலி (சிங்கை)
500

இந்த வகையில் சுமார் 60,000 ரூபாய் வரை வள்ளல்களிடம் வசூலிக்கப்பட்டு அதன்மூலம் ஏழைகளுக்கு ஆடைகள் உணவு தானியங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நமது இஸ்லாமிய வாலிப சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்!
fithra



நன்கொடை அளித்த வள்ளல்களுக்கு மிக்க நன்றி.
அல்லாஹ் உங்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்குவானாக!
ஆமீன்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

முன்னோட்டங்கள்...!


முன்னோட்டங்கள்...!

ஒரு வருட படிப்பு-
மறு வகுப்பு-
செல்வதற்கு!

அடியையும் மிதியையும்-
தாங்குவது-
தற்காப்பு கலை-
கற்பதற்கு!

முழங்காலிலும்-
முழங்கையிலும்-
காயங்கள்-
மிதிவண்டி-
பயில்வதற்கு!

வலியும் வேதனையும்-
தாங்கி கொள்வது-
பளு தூக்கும்-
வீரனாவதற்கு!

விமர்சனங்களையும்-
வீண் விவாதங்களையும்-
கண்டு கொள்ளாதது-
"இலக்கை "-
அடைவதற்கு!

பருவகாலத்தில்-
"படும் பாடு"-
பக்குவமாய் -
வாழ்வதற்கு!

ஒரு மாத கால-
நோன்பு இருப்பது-
பிற மக்களிடம்-
பரிவோடு நடந்திடவும்-
இறைவனுக்கு நன்றியுடன்-
நடப்பதற்கு!

ஒவ்வொரு முன்னோட்டம்-
அடைவதும்-
பாடம் படித்து கொள்வதும்-
வாழ்வில்-
முன்னேறுவதற்கு!!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

அழகாம் அழகு...



கொட்டி கிடக்கும்-
விண் மீன்களே!

ஒத்தையாய் இருக்கும்-
வெண்ணிலவே!

இதுதான்-
விண்வெளியே!

சுற்றி கட்டி இருக்கும்-
நீள் குழல் விளக்கு!


சுற்றியவாறு இருக்கும்-
சிறு சிறு விளக்கு!

இருவகையும் உண்டு-
விசேசங்களுக்கு!

வறண்டு கிடக்கும்-
நிலங்களும் உண்டு!

வாட்டி கொல்லும்-
பனி பிரதேசங்களும்-
உண்டு!

இவ்விரண்டிலும்-
உயிர் வாழ்வதுண்டு!

கழுத்து வலிக்கும் அளவுக்கு-
உயர்ந்துள்ள -
மலைகளும் உண்டு!

வயிற்றில் புளியை-
கரைத்திடும்-
பாதாள பள்ளங்களும்-
உண்டு!

இதனை பார்த்து-
லயித்திடும்-
மனங்களும் உண்டு!

காலில் சொறி உள்ளதால்-
மயிலின் அழகு-
குறைந்ததா..!?

குயில் கருப்பு என்பதால்-
குரல்தான்-
கசந்ததா...!?

மானின் மேல் உள்ள-
புள்ளியால்-வனப்புக்கு-
கொள்ளியானதா...!?

ஒவ்வொன்றும்-
மாறுபட்ட அழகுதானே!?

மாசுபட்டதாக-
நமக்கு தெரியவில்லைதானே!?

மனித பிறவியே!

தோலின் நிறம்தான்-
அழகா!?

அழகு சாதனா பொருட்களினால்-
மெருகேரிடுவது
அழகா!?

இல்லவே !
இல்லை -
இதில் அழகு!

உண்மை-
அழகு!

மொழிந்திடும்-
வார்த்தையிலும்!

நடந்திடும்-
நடத்தையிலும்!


ப்ரியமுடன்-
சீனி ஷா

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

உரு" கொள்வது...



முத்து-
சிற்பிக்குள்!

வைரம்-
மண்ணுக்குள்!

எரிமலை-
மலைகளுக்குள்!

மரம்-
விதைக்குள்!

கவிதை-
சிந்தனைக்குள்!

வெற்றி-
தோல்விக்குள்!

பெரும் சாதனை-
விடா முயற்சிக்குள்!

ஊதியம்-
வியர்வைக்குள்!

உயர்வு-
உழைப்பிற்க்குள்!

மொழிகள்-
புரிதல்களுக்குள்!

ஆஜானுபாகுவானவன்-
கருவிற்குள்!

"எழுத்தால்"-நல்
சிந்தனை விதைப்போம்!
மனித-
மனதுக்குள்!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் தேர்வு


                பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
           பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
 
10.08.2012 வெள்ளி அன்று நம் இஸ்லாமிய வாலிபர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
அது சமயம் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தலைவர்:              M.S. மூஸா                 9443919509
உப தலைவர்:          K. சேக்                     8012386836
செயலாளர்;            K. அபுதாஹிர்              8675374512
உதவி செயலாளர்     A. இம்ரான் கான்          9688278352
பொருளாளர்:          S. அலிபுல்லாஹ் கான்    8760046707
. பொருளாளர்:       B. சேக் மீரான்             9095445044
ஆலோசகர்கள்:        K. சீனி காசிம்              9842818405
 A.   அபுதாஹிர்              9442901095

செயற்குழு உறுப்பினர்கள்

ஜாஹிர் உசேன்                                8883075898
கியாசுதீன்                                      8883849619
சபூர் அலி                                       9715952515
அபூ அலி                                       9715952520
சேக் முஹம்மது                               8883377002
முத்தலிபு                                       9788508248
வாஹித்                                        9659631368
பஹாவுதீன்                                     8883242502
சஹாபுதீன்                                     8675215045
நவ்பர்                                          9941776472
முஹம்மது அலி                               8122202272
ரியாசுதீன்                                      8122202236
ஆரிஃப்                                          `9047573984
சேக்                                            8012386860
சுலைமான்                                     9489276280
ஹபீப் (S/O வஹாப்)                            8122527855

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு & மற்றும் உறுப்பினர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பணி சிறக்க துஆ செய்கிறோம்.
வஸ்ஸலாம்.


புதன், 8 ஆகஸ்ட், 2012

எல்லாம் புகழும் இறைவனுக்கே-4


எங்கெங்கோ உள்ள-
நீரெல்லாம் ஆவியாகி-
மேகத்தில் சங்கமிக்கிறது!

எங்கெங்கோ மலர்ந்துள்ள-
மலர்களுக்கிடையே-
வண்டுகள் மூலம்-
மகசூல் ஏற்படுகிறது!

எங்கெங்கோ தரித்திட்ட-
உயிர்கள் -திருமணத்தில்
இணைகிறது!

எங்கெங்கோ உள்ள-
பூக்களின் தேனை உண்டு-
தேனீக்கள் தேனடை தருகிறது!

எங்கெங்கோ உள்ள -
பறவைகள் -
பருவகாலங்களில் சரணாலயம்-
சேர்க்கிறது!

எங்கெங்கோ -
திரிக்கப்பட்ட திரியும்-
பிழியப்பட்ட எண்ணையும்-
தீபத்தில் ஒன்றிணைகிறது!

எது எங்கே உருவாக்கபடுது-
எங்கே அது சேர்கிறது-என்பதை
'ஒருவன்'தீர்மானிக்கிறான்!

'அவனே'-
ஒரே எண்ணங்களில் மனிதர்கள்-
பயணிக்கிரார்களோ-
அவர்களையும் ஒன்று சேர்க்கிறான்!

என்னருமை -
வலைபதிவு சொந்தங்களே!

நம்மை ஒன்று சேர்த்தது-
ஒரே எண்ணங்களும்!-
ஒரே எழுத்துக்களே!

சிலர்-
பின்னூட்டம் தருவதுண்டு!

சிலர்-
விளக்கங்கள் தருவதுண்டு!

சிலர்-
விருதுகளும் தருவதுண்டு!

அய்யா!
வை, கோபால கிருஷ்ணன் தந்தார்கள்-
விருது எனக்கொன்று!
அவர்களுக்கு மனதார -
நன்றிகள் -
எனக்குள் உண்டு!

நான் பகிரும் -
பதிவாளர்கள் இரண்டு!

௧ .நாடகம் ,வரலாறு,ஆன்மிகம், கவிதை-
பன்முகம் கொண்ட சதக் அவர்கள்!

௨.பதினாறு வயதிலேயே எழுதிட முனைந்த -
'அர்ஷத் காஜா'அவர்கள்!

நாம்-
மனிதத்தை நேசிப்போம்!
மனிதர்களாக வாழ்வோம்!


செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

இனி தான் ஆரம்பம்....(500 வது கவிதை)



மரத்துண்டுகள்!
ஓலை சுவடிகள்!

கல்வெட்டுகள்!
அழிந்த கட்டிடங்கள்!

சிற்பங்கள்!
சிதிலங்கள்!

இவைகள்-
அன்று-
சாதாரண நிகழ்வுகள்!

சாமானியனின்-
பதிவுகள்!

அவைகள்-
தீர்மானிப்பதே-
இன்றைய -
வரலாறுகள்!

இன்றைய -
நிகழ்வுதனை-
பதிகிறது-நம்முடைய
வலைப்பதிவுகள்!

இது-
நிர்மாணிப்பதே-
நாளைய-
வரலாறுகள்!

வாழ்ந்தவர்கள்-
எத்தனையோ!

மடிந்தவர்கள்-
எத்தனயோ!

நினைவு கூறபடுபவர்கள்-
எத்தனை பேரோ!?

உலகம்-
இலட்சியவாதிகளை-
இழக்கலாம்-
இலட்சியங்களை-
இழப்பதில்லை!

சிந்தனைவாதிகளை-
சீரழிக்கலாம்-
சிந்தனைகள்-
சீரழிவதில்லை!

எழுச்சியாளர்கள்-
இறக்கலாம்-
எழுச்சி-
மக்களை -
எழுப்பாமல் விடுவதில்லை!

"கருத்தை விதை"-என்ற
வார்தைதானாம்!

மருவி-
கவிதை-
என்றானதாம்!

கருத்தை விதைத்திருந்தால்-
நான் மனிதன்!

இல்லைஎன்றால்-
ஒரு அற்பன்!

என்றுமே -
நான்!
அற்பன் என்ற -
நிலையிலிருந்து-
மனிதனாக -
முயல்பவன்!

ப்ரியமுடன்-
சீனி ஷா.



சனி, 4 ஆகஸ்ட், 2012

போராட்டமாம் போராட்டம்.....



"அகிம்சை" பிறந்த-
மாநிலம்!

"இம்சை"ஆளும்-
செந்நிலம்!

மிருக வேட்டைக்கு-
எத்தனையோ தண்டனைகள்!

மனித வேட்டைக்கு பின்னும்-
மௌனிக்கும்-
நீதிமன்றங்கள்!

இதில்-
மத நல்லிணக்க-
உண்ணாவிரத நாடகங்கள்!

ஒரு "ஆகாசவாணி"-
ஊழலுக்கு எதிரா-
யாத்திரை கிளம்பினாரு!

லாவகமா-
கர்நாடக பாதையை-
மறந்துட்டாரு!

அதிகாரிகளால்-
சூறையாட பட்ட-
இருளால சமூக-
சகோதரிகள்!

தண்டனை-
அபராதமாக-
ஐம்பதாயிரம்-
ரூபாய்கள்!

நடிகை பாலியல் தொந்தரவுக்கு-
உள்ளானதுக்கு-
வீடு முற்றுகை-
போராட்டமாம்!

இப்பெண்களின் நிலையை-
ஏன் மறந்தார்களாமாம்!

சுதந்திரம் கொண்டாடமாட்டார்கள்-
சிறுபான்மையினர்கள்-என
ஓலமிடும் ஒரு கூட்டம்!

வகுக்கப்டுது-
சுதந்திர தின அணி வகுப்பை-
தடுக்க போடும்-
திட்டம்!

ஒரு பக்கம்-
கொண்டாடலை -என
கூப்பாடு!

மறுபக்கம்-
கொண்டாட விடாம-
தடுக்கும் நிலைப்பாடு!

இம்மக்கள் -
என்ன செய்ய வேண்டும்-என்பது
இவர்களின் நிலைப்பாடு!?

முஸ்லிம் நாடுகள்-
விளையாட்டு போட்டிகளில்-
பெண்களை அனுமதிப்பதில்லை-என
பொய் குற்றச்சாட்டு!

அப்போட்டிகளில்-
ஒழுங்கான ஆடையுடன்-
கலந்து கொள்ள அனுமதிக்கிறது-
அந்நாடு!

ஒழுங்கான ஆடை-
பழமை வாதமாம்!

ஆடையை குறைக்க சொல்லி-
மார்பை காட்டி கொண்டு-
போராட்டமாம்!

ஓ!

அறிவு ஜீவுகளே!

ஆதிமனிதன்-
நிர்வாணமாக அலைந்தான்!

பின்புதான்-
நாகரீகமாக-
ஆடைதனை அணிந்தான்!

இன்னொரு போராட்டம்-
நடத்தலாம்!

எல்லோரும்-
சோறு சாப்பிடுகிறார்கள்-
என!

அதனை எதிர்த்து-
மலத்தை சாப்பிடுவோம்-
என...!!!


ப்ரியமுடன்-
சீனி ஷா.

புதன், 1 ஆகஸ்ட், 2012

நடப்பதெல்லாம்....



மணற்வெளியில்-
புதைக்க இடம் -
பார்ப்பான்-
கொலைகாரன்!

மணலின் தரம் பார்ப்பான்-
பானை செய்யும்-
தோழன்!

நம் மீது-
ஆப்பிள் விழுந்திருந்தால்-
உணவாகி இருக்கும்!

நியுட்டன் மேல்-
விழுந்ததால்-
புவி ஈர்ப்பு அறிந்தது-
உலகம்!

பாறாங்கல்லே -
தெரிகிறது-
நம் கண்களுக்கு!

அதில் சிற்பம்-
தெரிகிறது-
சிற்பிக்கு!

புல்லில் பனியை-
ரசிப்பது-
ரசனை!

அதனை மிதித்து-
செல்பவன்-
மூடனே!

அழகை-
எழுத்தில் தருபவன்-
கவிஞன்!

அழகை "கெடுத்திட"-
நினைப்பவன்-
காமுகன்!

காந்தி கொலை மட்டும்-
தெரிந்தவன்-
சராசரி வாசகன்!

சுட்டானே கோட்சே-
அதன்" வேரை" தெரிந்தவன்-
உண்மை தெரிந்தவன்!

இயற்கை சீற்றத்தின்-
காரணம் தேடுபவன்-
விஞ்ஞானி!

"சீறிட"செய்தவனை-
நினைத்து அஞ்சுபவனே-
ஞானி !

உடலை வளர்ப்பவன்-
மனிதன்!

உயிரை வைத்திருப்பவன்-
இறைவன்!

"நடப்புகள்" எல்லாம்-
ஒன்றுதான்!

நடப்புகளை நாம்-
பார்ப்பதில்தான்-
வேறுபாடுதான்.....!!!


ப்ரியமுடன்-
சீனி ஷா.