புதியவை

புதன், 1 ஆகஸ்ட், 2012

நடப்பதெல்லாம்....



மணற்வெளியில்-
புதைக்க இடம் -
பார்ப்பான்-
கொலைகாரன்!

மணலின் தரம் பார்ப்பான்-
பானை செய்யும்-
தோழன்!

நம் மீது-
ஆப்பிள் விழுந்திருந்தால்-
உணவாகி இருக்கும்!

நியுட்டன் மேல்-
விழுந்ததால்-
புவி ஈர்ப்பு அறிந்தது-
உலகம்!

பாறாங்கல்லே -
தெரிகிறது-
நம் கண்களுக்கு!

அதில் சிற்பம்-
தெரிகிறது-
சிற்பிக்கு!

புல்லில் பனியை-
ரசிப்பது-
ரசனை!

அதனை மிதித்து-
செல்பவன்-
மூடனே!

அழகை-
எழுத்தில் தருபவன்-
கவிஞன்!

அழகை "கெடுத்திட"-
நினைப்பவன்-
காமுகன்!

காந்தி கொலை மட்டும்-
தெரிந்தவன்-
சராசரி வாசகன்!

சுட்டானே கோட்சே-
அதன்" வேரை" தெரிந்தவன்-
உண்மை தெரிந்தவன்!

இயற்கை சீற்றத்தின்-
காரணம் தேடுபவன்-
விஞ்ஞானி!

"சீறிட"செய்தவனை-
நினைத்து அஞ்சுபவனே-
ஞானி !

உடலை வளர்ப்பவன்-
மனிதன்!

உயிரை வைத்திருப்பவன்-
இறைவன்!

"நடப்புகள்" எல்லாம்-
ஒன்றுதான்!

நடப்புகளை நாம்-
பார்ப்பதில்தான்-
வேறுபாடுதான்.....!!!


ப்ரியமுடன்-
சீனி ஷா.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்