எங்கெங்கோ உள்ள-
நீரெல்லாம் ஆவியாகி-
மேகத்தில் சங்கமிக்கிறது!
எங்கெங்கோ மலர்ந்துள்ள-
மலர்களுக்கிடையே-
வண்டுகள் மூலம்-
மகசூல் ஏற்படுகிறது!
எங்கெங்கோ தரித்திட்ட-
உயிர்கள் -திருமணத்தில்
இணைகிறது!
எங்கெங்கோ உள்ள-
பூக்களின் தேனை உண்டு-
தேனீக்கள் தேனடை தருகிறது!
எங்கெங்கோ உள்ள -
பறவைகள் -
பருவகாலங்களில் சரணாலயம்-
சேர்க்கிறது!
எங்கெங்கோ -
திரிக்கப்பட்ட திரியும்-
பிழியப்பட்ட எண்ணையும்-
தீபத்தில் ஒன்றிணைகிறது!
எது எங்கே உருவாக்கபடுது-
எங்கே அது சேர்கிறது-என்பதை
'ஒருவன்'தீர்மானிக்கிறான்!
'அவனே'-
ஒரே எண்ணங்களில் மனிதர்கள்-
பயணிக்கிரார்களோ-
அவர்களையும் ஒன்று சேர்க்கிறான்!
என்னருமை -
வலைபதிவு சொந்தங்களே!
நம்மை ஒன்று சேர்த்தது-
ஒரே எண்ணங்களும்!-
ஒரே எழுத்துக்களே!
சிலர்-
பின்னூட்டம் தருவதுண்டு!
சிலர்-
விளக்கங்கள் தருவதுண்டு!
சிலர்-
விருதுகளும் தருவதுண்டு!
அய்யா!
வை, கோபால கிருஷ்ணன் தந்தார்கள்-
விருது எனக்கொன்று!

அவர்களுக்கு மனதார -
நன்றிகள் -
எனக்குள் உண்டு!
நான் பகிரும் -
பதிவாளர்கள் இரண்டு!
௧ .நாடகம் ,வரலாறு,ஆன்மிகம், கவிதை-
பன்முகம் கொண்ட சதக் அவர்கள்!
௨.பதினாறு வயதிலேயே எழுதிட முனைந்த -
'அர்ஷத் காஜா'அவர்கள்!
நாம்-
மனிதத்தை நேசிப்போம்!
மனிதர்களாக வாழ்வோம்!
மிக்க நன்றி சீனி..
பதிலளிநீக்குயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
எனும் செம்மொழிக் கேற்ப
நீங்கள் பெற்ற விருதை எங்களுக்கும் பகிர்ந்த
உங்கள் அன்புக்கு அளவே இல்லை.
நீங்கள் மேலும் மேலும் எழுதி விருதுக்கு மேல் விருது வாங்கிக் குவிக்க நாங்கள் மனதாற
வாழ்த்துகிறோம்.
mikka
நீக்குnantri!
asarath!