புதியவை

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

இனி தான் ஆரம்பம்....(500 வது கவிதை)



மரத்துண்டுகள்!
ஓலை சுவடிகள்!

கல்வெட்டுகள்!
அழிந்த கட்டிடங்கள்!

சிற்பங்கள்!
சிதிலங்கள்!

இவைகள்-
அன்று-
சாதாரண நிகழ்வுகள்!

சாமானியனின்-
பதிவுகள்!

அவைகள்-
தீர்மானிப்பதே-
இன்றைய -
வரலாறுகள்!

இன்றைய -
நிகழ்வுதனை-
பதிகிறது-நம்முடைய
வலைப்பதிவுகள்!

இது-
நிர்மாணிப்பதே-
நாளைய-
வரலாறுகள்!

வாழ்ந்தவர்கள்-
எத்தனையோ!

மடிந்தவர்கள்-
எத்தனயோ!

நினைவு கூறபடுபவர்கள்-
எத்தனை பேரோ!?

உலகம்-
இலட்சியவாதிகளை-
இழக்கலாம்-
இலட்சியங்களை-
இழப்பதில்லை!

சிந்தனைவாதிகளை-
சீரழிக்கலாம்-
சிந்தனைகள்-
சீரழிவதில்லை!

எழுச்சியாளர்கள்-
இறக்கலாம்-
எழுச்சி-
மக்களை -
எழுப்பாமல் விடுவதில்லை!

"கருத்தை விதை"-என்ற
வார்தைதானாம்!

மருவி-
கவிதை-
என்றானதாம்!

கருத்தை விதைத்திருந்தால்-
நான் மனிதன்!

இல்லைஎன்றால்-
ஒரு அற்பன்!

என்றுமே -
நான்!
அற்பன் என்ற -
நிலையிலிருந்து-
மனிதனாக -
முயல்பவன்!

ப்ரியமுடன்-
சீனி ஷா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்