சுட்டிடும்-
நெருப்பு!
மூழ்கிடுவது-
தங்கம் என்றால்-
ஜொலிக்கும்!
வெறும் தாளேன்றால்-
சாம்பலாகும்!
இருபென்றால்-
ஆயுதம் ஆவோம்!
துரும்பென்றால்-
காணாமல்-
போவோம்!
நம்' தன்மையை'கொண்டே-
நிலை கொள்வோம்!
'உரு' மாறுவோம்!
-------------------------------------
வறுமை-
ஒருவனை-
செதுக்கும்!
செழுமையோ-
மயக்கும்!
---------------------------
இன்றைய-
சாதனையாளர்கள்!
நேற்று-
சோதனையின் மடியில்-
வளர்ந்தவர்கள்!
-------------------------------
வங்கியில்-
'இருப்பை' கொண்டிருப்பதால்-
'போகையில்'வருமோ-
கூடவே!
'இருப்பதை'-
பகிர்ந்துண்டால்-
கூடுமே-
நன்மையே!
-----------------------
ஏழையே -
துவளாதிரு!
பணக்காரனே -
ஆடாதிரு!
கீழே உள்ளது-
மேலே பறப்பதும்!
மேலே பறப்பது-
கீழே வருவதும்!
உலக-
இயல்பு!
ஏன்?-
'இல்லாததால்'-
மன கசப்பு!
'இருப்பதால்'-
இறுமாப்பு!
-------------------------
பண வரவில்-
இருக்கலாம்-
வறுமை!
மனதில்-
குடி கொண்டிட வேண்டாம்-
வெறுமை!
-----------------------------
ப்ரியமுடன்!
சீனி ஷா.
'
//பண வரவில்-இருக்கலாம்-வறுமை!
பதிலளிநீக்குமனதில்-குடி கொண்டிட வேண்டாம்-வெறுமை!//
கவிதை ரொம்ப ரொம்ப அருமை.
மாஷா அல்லா!
பதிலளிநீக்குமிக்க நன்றி!