புதியவை

திங்கள், 4 ஜூன், 2012

மண்ணின் மைந்தர்கள்-தொடர்-1


yasir Arafath
Yasir Arafath

ஒப்பிலான் பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி


நம் ஊரைச் சேர்ந்த மாணவர் யாசிர் அரஃபாத்( s/o noor samsudheen ) இந்த ஆண்டு +2 தேர்வில் அதிக மதிப்பெண் (83.5%) பெற்று மண்ணின் மகிமையை பறைசாற்றி உள்ளார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள்: 1002/1200.
நாம் கவனிக்கவேண்டிய விபரம் யாதெனில் இவர் சித்தார்கோட்டை சித்தாரிய்யா அரபிக் கல்லூரியில் மவ்லவி ஆலிம் பட்டப் படிப்பு பயின்றுகொண்டே உலகக் கல்வியும் பயின்று வந்தார். ஒரே நேரத்தில் இரு கல்வியிலும் கவனம் செலுத்தி இத்தனை மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் இவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஒரு பக்கம் வறுமை வாட்டினாலும் வறுமை அவரது கல்விக்கு தடையாக இருக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் இவர் தொடர்ந்து கல்வியில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்த வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.. ஆமீன்.

3 கருத்துகள்:

  1. மாஷா அல்லா!

    நல்ல பகிர்வு!
    உலகம் எனும் மாயையில்-
    மூழ்காமல் மறுமை எனும் சிறப்பை-
    அடைந்திடவும்-
    இரு கல்வியாவும் பயின்ற சகோதரனுக்கு வாழ்த்துக்கள்!


    உங்களுடைய பகிர்வுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சீனி..
      உடனுக்குடன் கருத்துரை வழங்கி
      உற்சாகப்படுத்தும்
      உங்களுக்கு
      உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ் இந்த மாதிரியான சம்பவங்களை பதிவு செய்யும் போதுதான் வருங்காலத்தில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்